நாட்டை தாக்கிய டிட்வா சூறாவளி மற்றும் தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 123 ஆக உயர்ந்துள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், 130 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
காணாமல் போனவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் இராணுவம், கடற்படை, காவல் துறை இணைந்து தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளுக்கு கூடுதல் படையணி அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அரசாங்கம் மக்கள் தேவையற்ற பீதி அடையாமல், அதிகார பூர்வ வானிலை அறிவிப்புகள் மற்றும் அரசு ஊடகங்கள் மூலம் மட்டுமே தகவல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.


Recent Comments