கொழும்பு, கோட்டே பகுதியில் Facebook மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு ‘Party’ மீது வெலிக்கடைப் போலீஸார் அதிரடி சோதனை நடத்தி 34 பேரை கைது செய்துள்ளனர். இந்த சோதனை New Jayaviru Mawatha பகுதியில் நடைபெற்றது என போலீஸ் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 32 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உள்ளனர். இவர்களின் வயது 20 முதல் 35 வரை காணப்படுகின்றது. போலீசாரின் தகவலின்படி, இந்த சந்திப்பு Facebook வழியே ஒருங்கிணைக்கப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பு போது போலீசார் தடை செய்யப்பட்ட ஹெரோயின், ஐஸ், போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப் பொருள்களை பெருமளவில் பறிமுதல் செய்துள்ளனர்.
இவ் அதிரடி நடவடிக்கையானது வெலிக்கடை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் ஜயசிங்ஹே அவர்களின் நேரடி மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது.


Recent Comments