தேஹிவளை தேசிய உயிரியல் பூங்காவில் இருந்த மஞ்சள் அனகொண்டா (Yellow Anaconda) பாம்பு குட்டி ஒன்று காணாமல் போயுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, தேஹிவளா உயிரியல் பூங்கா அதிகாரிகள், பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த அந்த குட்டி பாம்பு மாயமான விவகாரம் தொடர்பாக தேஹிவளா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த மஞ்சள் அனகொண்டாபாம்புக் குட்டி, மேலும் மூன்று இனங்களைச் சேர்ந்த ஆறு பாம்புகளும் 2024 செப்டம்பர் 12ஆம் தேதி தாய்லாந்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன.

பின்னர், அந்த பாம்புகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, தேஹிவளா உயிரியல் பூங்காவிற்கு ஒப்படைக்கப்பட்டன. என தேஹிவளா உயிரியல் பூங்காவின் துணை இயக்குநர் கசுன் ஹேமந்த சமரசேகர தெரிவித்துள்ளார்.
இந்த ஆறு பாம்புகளும் தனிமைப்படுத்தல் (quarantine) நிலையில் வைக்கப் பட்டிருந்ததாகவும், தனிமைப்படுத்தல் காலம் முடிந்த பின் பொது மக்களுக்கு காட்சிக்கு வைக்க திட்டமிட்டிருந்ததாகவும் கூறினார்.
மேலும், மஞ்சள் அனகொண்டா என்பது தென் அமெரிக்காவைச் சேர்ந்த மிகவும் நிறையான பாம்பு இனங்களில் ஒன்றாகும் என்றும், தற்போது காணாமல் போன இந்த குட்டி பாம்பு இதற்கு முன்பு தேஹிவளை உயிரியல் பூங்காவில் வைக்கப்பட்டதில்லை என்றும் அவர் கூறினார்.


Recent Comments