Friday, January 23, 2026
HuisBreakingபுலம்பெயர்ந்தோர் மூலமாக இங்கிலாந்திற்குள் போதைப் பொருள் நுழைவதாக தகவல்..!

புலம்பெயர்ந்தோர் மூலமாக இங்கிலாந்திற்குள் போதைப் பொருள் நுழைவதாக தகவல்..!

சிறிய படகுகளில் கால்வாயைக் கடக்கும் புலம்பெயர்ந்தோர், ஆட்கடத்தட்காரர்கள் மூலமாக இங்கிலாந்திற்குள் போதைப் பொருட்கள் கணிசமாக நுழைவதாக “The Telegraph” செய்திச் சேவையின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

வடக்கு பிரான்சிலிருந்து வரும் புகலிடக் கோரிக்கையாளர்கள், போதைப் பொருள் வில்லைகளை விழுங்கி, அவற்றை இங்கிலாந்தில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு வழங்கினால், அவர்களுக்கு இலவச அல்லது குறைந்த விலையில் எல்லைய கடக்கும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொக்கெய்ன், ஹெரோயின் கடத்த ஒப்புக் கொள்ளும் சில புலம்பெயர்ந்தோருக்கு VIP முறையில் எல்லையை கடக்கும் வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

போதைப் பொருளை கடத்தும் குற்றவாளிகள் புலம்பெயர்ந்தோர் படகுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் இணைகிறார்கள்.

இங்கிலாந்தில் குடியேறிகள் தங்க வைக்கப்பட்டவுடன், உள்துறை அலுவலக ஹோட்டல்களில் இருந்து கடத்தி வரப்பட்ட போதைப்பொருட்கள் பொதுவாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினர்களுக்கு கைமாற்றப்படும் என்று ஆட்கடத்தற்காரர் ஒருவர் கூறியுள்ளார்.

இங்கிலாந்தின் உள்துறை அலுவலகம் மற்றும் தேசிய குற்றவியல் நிறுவனத்தின் அதிகாரிகளின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு “The Telegraph” இந்த ஆய்வினை முன்னெடுத்துள்ளது.

இங்கிலாந்தின் எல்லைகளை கடப்பதற்காக ஆட் கடத்தற்காரர்களும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர்களும் எவ்வாறு ஒன்றிணைந்துள்ளனர் என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!