நீதிபதிகளின் பதவி நீடிப்பு தொடர்பான விடயங்கள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு நாளை புதன்கிழமை (12) நடைபெறவுள்ளது.
குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது நீதிபதிகளின் பதவி நீடிப்பு தொடர்பான விடயங்கள் மற்றும் அது தொடர்பில் எழுந்துள்ள முக்கிய அம்சங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பின் மூலம் குறித்த விடயம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாடுகள் மற்றும் பரிந்துரைகள் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்படவுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Recent Comments