வவுனியா சூடுவெந்தபிலவிற்கு அண்மித்த பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வவுனியாவில் இருந்து சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் சூடுவெந்தபிலவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றது.
விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.மேலும் காயமடைந்த மூவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் பாவற்குளம் பகுதியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பாக உலுக்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Recent Comments