Thursday, September 3, 2026
Huisஜோதிடம்இன்றைய இராசிபலன் 03.09.2026

இன்றைய இராசிபலன் 03.09.2026

மேஷம்

மனக் குழப்பம் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி கள் குறையும். பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்காதீர்கள். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.

ரிஷபம்

அவசர முடிவுகளை எடுக்காதீர். எதிலும் நிதானமாக செயல் படவும். ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். அலுவலகத்தில் பேச்சில் கவனம் தேவை.

மிதுனம்

உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வர வாய்ப்பு உண்டு. மூத்த சகோதர சகோதரிகள் பண உதவி செய்வார்கள். வாகன பழுது நீங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிட்டும்.

கடகம்

சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கவும்.

சிம்மம்

மனதுக்கு இதமான செய்திகள் வரும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வராது என்றிருந்த பணம் வந்து சேரும். தாய்வழி உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

கன்னி

குடும்பத்தாருடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர். உத்தியோகம் சிறக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர்.

துலாம்

சிக்கனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் விவாதம் வேண்டாம். உறவினர் அன்புத் தொல்லை உண்டு. அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் போட்டிகள் கூடும். புதிய பங்குதாரர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவும்.

விருச்சிகம்

சந்தர்ப்ப, சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிட்டும். குடும்பத்தில் தள்ளிப் போன சுபநிகழ்ச்சி ஏற்பாடாகும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

தனுசு

அடுக்கடுக்காக வந்த செலவுகள் இனி குறையும். சவாலான காரியங்களையும் வெற்றிகரமாக முடிப்பீர். வியாபாரரீதியாக பிரபலங்களின் உதவியை நாடுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகள் அறிவுரை தருவார்கள். சக ஊழியர்கள் மதிப்பர்.

மகரம்

தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்பட்டு சில பிரச்சினை களை முடிப்பீர். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். பிள்ளைகள் அன்பாக நடந்து கொள்வார்கள். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் முக்கிய பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள்.

கும்பம்

புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர். தாயாருடன் இருந்த கருத்துமோதல் விலகும். பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் நீங்கும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். பொறுப்பு கூடும்.

மீனம்

விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வர். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர் கிடைப்பார். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!