உங்கள் இராசிப்படி உங்கள் காதல் துணையை எத்தனை வயதில் சந்திப்பீர்கள் தெரியுமா..?

நாம் பிறந்த ராசிப்படி தான் எல்லாமே நடக்கின்றது. குறிப்பாக தன் காதலன், காதலி , வாழ்க்கை துணையை கூட ராசி அடிப்படையில் தான் தெரிவு செய்கிறோம்.

உங்கள் காதலி அல்லது வாழ்க்கை துணையை எந்த வயதில் கண்டுப்பிடிப்பீர்கள் என்பதை இனி தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசியினர் வாழ்க்கை துணையை 22 அல்லது 25 அல்லது 40 வயதில் தான் நீங்கள் சந்திக்க வாய்ப்புள்ளது. சூரியன் மற்றும் சுக்கிரன் கிரகங்களின் நல்லருளால் உங்களின் வாழ்க்கைத் துணையை சந்திக்க வாய்ப்பை ஏற்படுத்துவார்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்கு 28 அல்லது 32ம் வயதில் உங்கள் துணையை சந்திக்கக்கூடிய அற்புத காலமாக இருக்கும். இந்த வயதில் உங்களுக்கு செவ்வாய், புதன் பகவானின் நள்ளருள் நிறைந்திருக்கும்.

மிதுனம்
உங்கக்கு சுக்கிரன் 25ம் வயதிலும், குரு பகவான் 30 அல்லது 31ம் வயதிலும் உங்கள் வாழ்க்கைத் துணை, காதலியை சந்திப்பதற்கான வாய்ப்புகளைக் கொடுப்பார்கள்.



கடகம்
கடக ராசிக்கு செவ்வாய் 28 வயதிலும், சனி 35 அல்லது 36 வயதிலும் மிக சாதகமாக அமைவார். இந்த வயதில் உங்களின் துணையை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியினருக்கு தனது 20 அல்லது 28 வயதில் குரு பகவான் வாழ்க்கை துணையை சந்திக்க வைப்பார். அப்படி இல்லை என்றால், சனி பகவான் 35 அல்லது 36 வயதில் தன் காதலி, வாழ்க்கைத் துணையை சந்திப்பதற்கான சிறப்பான வாய்ப்புகளை ஏற்படுத்துவார். இந்த வயதில் சிறந்த பொறுத்தத்தை எதிர்பார்க்கலாம்.

கன்னி
கன்னி ராசியை சேர்ந்தவர்கள் குரு பகவானால் 21, 30 மற்றும் 31 வயதில் சிறப்பான வாய்ப்புகளும், 35 அல்லது 36 வயதில் சனியின் மூலம் வாழ்க்கைத் துணையை கண்டறிவதற்கான நல்ல வாய்ப்புகளும் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும்.

துலாம்
துலாம் ராசியை சேர்ந்தவர்களுக்கு 22 அல்லது 28வது வயதில் செவ்வாய் பகவானின் நல்லருளூம், உங்களின் 35 வயதில் உங்களின் வாழ்க்கையை மாற்றக்கூடிய உங்கள் ஆத்ம துணையை சந்திக்கலாம்.



விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு குரு பகவானால் உங்களுக்கு 25வது வயதில் அல்லது சுக்கிரனால் 30வது வயதிலும் உங்களின் ஆத்ம துணையை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசிக்கு 28 அல்லது 32 வயதில் உங்கள் ஆத்ம துணையை நீங்கள் சந்திக்கலாம்.

மகரம்
மகர ராசிக்கு 28 அல்லது 37 வயதில் உங்களுக்கான காதல் ஜோடி அல்லது வாழ்க்கை துணையை சந்திக்கும் அற்புத வாய்ப்புகள் கிடைக்கும். முக்கியமாக, சந்திரனும் சுக்கிரனும் நற்பலன் தரக்கூடிய இந்த வயதில் உங்களுக்கு கிடைக்கும் துணை வாழ்நாள் காதலர்களாக இருப்பார்கள்.

கும்பம்
கும்ப ராசியினர் தங்களின் ஆத்ம துணையை 32 வயதிலும், சில சமயங்களில் அதற்கு முன்னதாகவே, 21 அல்லது 22 வயதில் சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.



மீனம்
மீன ராசியினருக்கு 24 அல்லது 32 வயதில் உங்களின் வாழ்க்கைத் துணையை சந்திக்கக்கூடிய அற்புத வாய்ப்புகள் கிடைக்கும்.

(திருமணமானவர்களுக்கும், ஏற்கனவே காதலில் உள்ளவர்களுக்கும் இது பொருந்தாது)