வவுனியாவின் சில கிராமங்களில் 4 நாட்களாக மின் தடை; கண்டு கொள்ளாத அதிகாரிகள்..!

வவுனியா மாவட்டத்தில் மாகாறம்பைக்குளம், காத்தார் சின்னக்குளம், சிறிராமபுரம் வீட்டுத் திட்டம் ஆகிய கிராமங்களின் ஒரு பகுதியை சேர்ந்தவர்களுக்கு தொடர்சியாக நான்கு நாட்களாக மின்சாரம் தடைப்பட்டுள்ளது.இவ் மின்சார தடங்கல் காரணமாக பாடசாலை மாணவர்கள், வயோதிபர்கள், மின்சாரத்தை மூலதனமாக கொண்டு தொழில் புரியும் பலரும் பல அசெளகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அப் பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.அத்துடன் மின்சார தடங்கல் தொடர்பாக மின்சார சபை மற்றும் வடக்கு மாகாண மின்சார சபையின் வாடிக்கையாளர் சேவை நிலையத்திற்கு முறைப்பாடு மேற்கொண்டும் தங்களுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை எனவும் அதிகாரிகள் அசமந்தபோக்குடன் செயற்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.