பிரான்சில் சிறந்த சிற்றுண்டி தயாரிப்பாளருக்கான பரிசை வென்ற ஈழத் தமிழர்..!

இலங்கை வம்சாவளியான தமிழரான தர்ஷன் செல்வராஜா என்பவர் பிரான்சின் பாரிஸில் சிறந்த சிற்றுண்டி தயாரிப்பாளருக்கான பரிசை வென்றுள்ளார்.

இதன்படி அவர் 4 ஆயிரம் யூரோக்களை வென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் ஜனாதிபதி மாளிகைக்கு சிற்றுண்டிகளை வழங்குவதற்கான வாய்ப்பையும் அவர் பெற்றுள்ளார்.பிரான்ஸ் ஜனாதிபதி தமது சிற்றுண்டியை சுவைப்பாராயின் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக அவர் தெரிவித்துள்ளார்அதனை அரண்மனைக்கு எடுத்துச் செல்வது உற்சாகமாக இருப்பதாகவும் தர்ஷன் செல்வராஜா மேலும் கூறியுள்ளார்.