கட்சி கூட்டத்தில் தாக்குதல்; முன்னாள் மேயர் ஆர்னோல்டின் யாழ் வீட்டிற்கு சென்ற பொலிஸார்..!

இலங்கை தமிழரசு கட்சி கூட்டத்தின் போது ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வரான இம்மானுவல் ஆர்னோல்ட்டின் வீட்டிற்கு இன்று (14-05-2023) காலை பொலிஸார் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், வவுனியாவில் நடக்கும் கட்சி செயற்குழு கூட்டத்தில் தான் கலந்து கொண்டுள்ளதால் நாளை காலை 10 மணிக்கு பொலிஸ் நிலையத்திற்கு வருவதாக இ.ஆர்னோல்ட் தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டம் நேற்றைய தினம் மார்ட்டின் வீதி அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இதன் போது, தமிழரசு கட்சியின் உறுப்பினரும் சிவசேனை செயற்பாட்டாளருமான ஜெயமாறன் என்பவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.