முல்லைத்தீவில் வீதியால் சென்ற மற்றுமொரு மாணவிக்கு நேர்ந்த கதி – பதற்றத்தில் மக்கள்..!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் பாடசாலையில் மயங்கிய நிலையில் மாணவி ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (19) காலை புதுக்குடியிருப்பு – ஆனந்தபுரம் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு மாணவி துவிச்சக்கரவண்டியில் வீதியால் சென்று கொண்டிருந்தார்.இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இனம் தெரியாத இருவர் மாணவியின் முகத்தில் ஏதோ ஒரு திரவத்தை விசிறியுள்ளார்கள்.

இதனை பொருட்படுத்தாத மாணவி பாடசாலை சென்றுள்ள நிலையில் பாடசாலையில் மயங்கி வீழ்ந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.உயர்தரம் படிக்கும் 19 வயது கொண்ட பாடசாலை மாணவியே இவ்வாறு மயங்கி விழுந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்கள் மருத்துவ பரிசேதனையினை மேற்கொண்டு வருகின்றார்கள்.