வவுனியாவில் 21 வயது இனைஞனின் சடலம் மீட்பு; மேலதிக விசாரணைகள் ஆரம்பம்..!

வவுனியா – ஓமந்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கோவில் குஞ்சுக்குளம் பகுதியிலிருந்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று(29) காலை பொலிசாரால் குறித்த சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட குறித்த இளைஞருக்கு அருகில் கட்டுத்துப்பாக்கியும், அந்த இளைஞரின் மோட்டார் சைக்கிளும் காணப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் பொது மக்கள், பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமந்தை பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தனர். இச்சம்பவத்தில் 21வயதுடைய சற்குணராசா டிசாந்த் என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.