நீதிபதிக்கு தொடர் அச்சுறுத்தல்; யாழில் எதிர்வரும் புதன் மனித சங்கிலிப் போராட்டத்துக்கு அழைப்பு..!

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா அவர்களின் பதவி விலகல் குறித்து தமிழ் மக்களின் எதிர்ப்பை காண்பிக்க போராட்டங்களை நடத்த தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன.

அந்தவகையில் இன்று 29 யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழரசு கட்சி ரெலோ புளொட் ஈ. பி.ஆர் .எல் .எவ் .தமிழ் தேசிய கட்சி உள்ளிட்ட பிரதிநிதிகள் கூடி இந்த முடிவை எடுத்தனர்.இதன்படி எதிர்வரும் 4ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மிக பெருமெடுப்பில் போராட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ் மருதனார் மடத்தில் இருந்து யாழ் நகர் வரை மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படவுள்ளது.

பின்னர் முல்லைத்தீவை முடக்கி போராட்டம் நடத்தப்படவுள்ளது. இதற்கான திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.அத்துடன் ஜ.நா மற்றும் சர்வதேச நாடுகளின் கவனத்துக்கு இந்த விடயம் கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது.