இலங்கை அரசியலில் பதவிகள் வேண்டும் ஆனால் அமெரிக்க குடியுரிமையை கைவிடத் தயாரில்லை – பசில்

அமெரிக்க குடியுரிமையை கைவிட தயாராக இல்லை என சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்பும் இதே நிலையில் தான் இருந்ததாகவும், இப்போதும் அதே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எதிர்வரும் அதிபர் தேர்தலில் சிறி லங்கா பொதுஜன பெரமுனவில் யார் போட்டியிடுவது என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள அவர், தற்போது மழை பெய்தால் ஆறு நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.எனினும், கட்சியாக வேட்பாளரை முன்வைக்க வேண்டும் என்ற கருத்து கட்சிக்குள் வலுவாக வெளிப்பட்டு வருவதாகவும், மற்றபடி வேட்பாளர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.