மொட்டுக்குள் குழப்பம்; பாராளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படும் சாத்தியம்???

அடுத்த ஆண்டு (2024) மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக கூறப்படும் பொதுத் தேர்தல் தொடர்பில் ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முக்கியஸ்தர்கள் மத்தியில் உள்ளக கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைப்பது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



2024 செப்டம்பர் அல்லது அக்டோபரில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதும், அதைத் தொடர்ந்து ஆண்டு இறுதிக்குள் பொதுத் தேர்தலை நடத்துவதும் சவாலாக உள்ள நிலையில் மார்ச் 2024 பொதுத் தேர்தலை நடத்துவது மிகவும் நடைமுறை தீர்வாக இருக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது .



எனினும், இந்த நடவடிக்கை இலங்கை அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதுடன். மார்ச் மாதம் பொதுத் தேர்தல் நடந்தால், எந்த ஒரு அரசியல் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறும் என்று கணிக்கப்படவில்லை. மாறாக, பல கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .



ஆயினும் இந்த சூழ்நிலை அரசியல் கட்சிகளிடையே விவாதங்களைத் தூண்டியுள்ளது, அத்தகைய கூட்டணி அரசாங்கத்தின் சாத்தியக்கூறுகள் மற்றும் விளைவுகள் பற்றிய ஆராயப்பட்டு வருகிறது.