ஈழத் தமிழர்களின் கடும் எதிர்ப்பால் குஷ்புவின் யாழ் விஜயம் இரத்து..!

யாழ்ப்பாணத்தில் நடைபெற இருக்கின்ற ஹரிகரனின் இசை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்காக நடிகை குஷ்பு யாழ்ப்பாணம் வர இருந்த நிலையில், ஈழத் தமிழர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவரது வருகை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதன் காரணமாக குஷ்புவுக்கு யாழில் எழுந்த கடும் எதிர்ப்புக்கள் காரணமாகவே தென்னிந்திய நடிகை குஷ்புவின் யாழ்ப்பாண விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.நடிகை குஷ்புவின் கருத்துக்கு வடக்கு கிழக்கு தமிழ் தாயகப் பகுதியில் கடும் எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், எதிர்வரும் டிசம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக நடிகை குஷ்பு யாழ்ப்பாணம் வருகைதர இருந்த நிலையில் எதிர்ப்புக்கள் காரணமாக அவரது வருகை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.நடிகை குஷ்புவிற்கு பதிலாக தொகுப்பாளினி திவ்யதர்ஷினி வருகைத் தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பில் நடிகை குஷ்பு சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டிருந்த நிலையில், அவருக்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறிவினர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.அத்துடன் அவருக்கு எதிராக எதிர்ப்புக்கள் மேலும் வலுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.