ஆசிரிய பணிக்காக காத்திருப்போரிற்கு மகிழ்ச்சியான அறிவிப்பு..!

அரச பாடசாலைகளில் நிலவும் , சிங்களம், மற்றும் ஆங்கில பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.உரிய போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவத்தை www.doenets.lk இணையத்தளத்தில் ‘Our Services” என்பதன் கீழ் ‘Online Applications – Recruitment Exams என்ற இணையத்தளங்கள் மூலம் விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் குறித்த விண்ணப்பங்கள் எதிர்வரும் முதலாம் திகதி வரையில் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் பிரதேசத்து நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எமது செய்தித் தளத்தில் பகிரத் தயாராக உள்ளோம். செய்திகளை Tamilpori@yahoo.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்கள்