கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இன்று மேலும் நான்கு மனித எச்சங்கள் மீட்பு..!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இன்று மேலும் நான்கு மனித எச்சங்களும் துப்பாக்கிச் சன்னங்களும் மீட்கப்பட்டுள்ளன.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு இன்றையதினம் ஐந்தாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.இந்நிலையில், இன்றைய தினம் தனியார் நிறுவனம் ஒன்றின் ஊடாக தற்போது தோண்டப்பட்டுள்ள மனித புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது என்ற சோதனை விசேட ஸ்கேன் இயந்திரம் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இதன் போது, தோண்டப்பட்ட இடத்திற்கு வெளியிலும் மனித எச்சங்கள் இருப்பதற்கான சமிக்ஞைகள் தென்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரையில் 30 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.இது தொடர்பான உத்தியோபூர்வமான அறிக்கை நாளை அல்லது நாளை மறுதினம் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது