யாழ் பொன்னாலையில் கஞ்சா விற்றவர் விசேட அதிரடிப்படையால் கைது..!

பொன்னாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார் எனக் கருதப்படும் சந்தேக நபர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

விசேட அதிரடிப் படையினரும் புலனாய்வாளர்களும் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கை மூலம் இவர் கைது செய்யப்பட்டார்.அனலைதீவில் இருந்து வந்து பொன்னாலை தெற்கில் திருமணம் செய்து வாழ்ந்த நபர் ஒருவரே கைது செய்யப்பட்டவராவார்.

இவர் தம்வசம் வைத்திருந்த பல லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா பொதிகளும் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.இதுவரை வட்டுக்கோட்டை பொலிஸார் இக்குற்றச் செயலைக் கட்டுப்படுத்தாமல் இலஞ்சம் வாங்கிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் என சந்தேகிக்கப்படுகின்றது.தற்போது கொலைக் குற்றச்சாட்டின் பேரில் வட்டு.பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் முடங்கியிருக்கும் நிலையில் விசேட அதிரடிப் படையால் இக்கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது