மாகாண ஆளுநர்களை மாற்றுவது தொடர்பில் ரணில் மந்திராலோசனை..!

ஜனாதிபதித் தேர்தலை இலக்காக கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்.

பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறியோன முன்னாள் அமைச்சர் நசீர் ஹகமட் கிழக்கு மாகாணத்தில் செல்வாக்கு மிக்கவராக இருப்பதால் அவருக்கு கிழக்கு ஆளுநர் பதவியை வழங்குவதன் ஊடாக முஸ்லிம் வாக்குகளை ஜனாதிபதி இலக்கு வைத்துள்ளார்.



என்றாலும், கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற சில சம்பங்களால் நசீர் ஹகமட் மீது மக்களுக்கு அதிருப்தியும் காணப்படுகிறது. மறுபுறம், தற்போதைய கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானின் நியமனத்தில் இந்தியாவின் தலையீடுகள் அதிகமாக இருந்ததாக கடந்த காலத்தில் தகவல்கள் வௌியாகியிருந்தன.



என்றாலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இலக்கு ஜனாதிபதித் தேர்தலாக இருப்பதால் எதிர்வரும் ஜனவரி மாதத்துக்கு முன்னர் கிழக்கு ஆளுநரை மாற்றுவதற்கான ஆலோசனைகளை ஜனாதிபதி நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.



இதேவேளை, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸ்ஸமிலை மேல் மாகாண ஆளுநராகவும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை ஊவா மாகாண ஆளுநராகவும் நியமிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.