அரச சேவையில் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை – பிரதமர்

முழு அரச சேவையிலும் பாதி வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அமைச்சரவையின் அனுமதியை கோரியுள்ளது.



பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழு, ஆட்சேர்ப்பு செயல்முறையை மீளாய்வு செய்வதற்காக அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.



அந்த அறிக்கையின்படி, 67,308 வெற்றிடங்களை முன்னுரிமைகளின் படி நிரப்பப்பட வேண்டிய மிக அத்தியாவசிய வெற்றிடங்களாக சம்பந்தப்பட்ட குழு அமைச்சரவைக்கு பரிந்துரை செய்துள்ளது.