19 வயது மாணவியின் காதலனுடன் தாய் தவறான உறவு; நேரில் பார்த்த மகள் தற்கொலை முயற்சி..!

அநுராதபுரம் சிப்புகுளம பகுதியில் 19 வயதான பாடசாலை மாணவி அனிகா தற்கொலைக்கு முயன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அனிகாவின் காதலன் அனிகாவின் தாயாருடன் தவறான தொடர்பில் இருந்துள்ளான். இதனை நேரில் கண்ட அனிகா தற்கொலைக்கு முயன்று விசம் அருந்தியதாகத் தெரிய வருகின்றது.அனிகாவின் 20 வயதான காதலன் பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியவர் எனவும் அனிகாவின் தாயார் அப்பகுதியில் சிறு வியாபார நிலையம் ஒன்றை நடாத்தி வந்ததாகவும் தெரிய வருகின்றது.

அனிகாவின் தந்தை இராணுவத்திலிருந்து யுத்த நடவடிக்கையில் மரணமானவர் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.அனிகா தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை அடுத்து தாயாருடன் கள்ளத் தொடர்பில் இருந்த பல்கலைக்கழக மாணவனையும் தாயாரையும் அனிகாவின் சகோதரனான 17 வயது சிறுவன் கடுமையாகத் தாக்கியுள்ளான்.

இதன் காரணமாக தாயார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வெளியேறியதாகத் தெரிய வருகின்றது.பல்கலைகழக மாணவன் தற்போது அப்பகுதியிலிருந்து தலைமறைவாகியுள்ளாதாக சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.