ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப உடன் நடவடிக்கை; கல்வி அமைச்சரின் புதிய அறிவிப்பு..!

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப உடன் நடவடிக்கை; கல்வி அமைச்சரின் புதிய அறிவிப்பு

எதிர்வரும் பாடசாலை விடுமுறை முடிவதற்குள் தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட சபை உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.அத்தோடு, உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு காரணமாக 25,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனம் 9 மாதங்களாக தாமதமாகி வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

விடுமுறை காலம் முடிவதற்குள் வெற்றிடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், பழைய ஆசிரியர்களின் ஏற்றத்தாழ்வுக்கு மாகாண மட்டத்தில் தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.மேலும், டிசம்பர் மாத இறுதிக்குள் மாகாண கல்வி அமைச்சர்கள், பணிப்பாளர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள், தொழிற் சங்கங்கள் இணைந்து இரண்டு நாள் செயலமர்வை நடாத்தி கல்வி நிர்வாகத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.