வருவாய் உரிமம் புதுப்பிக்கப்படாத வாகனங்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை..!

தற்போது பதிவு செய்யப்பட்டு பல வருடங்களாக பயன்படுத்தப்படாத சுமார் இருபத்து மூன்று இலட்சம் வாகனங்களை தடை செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வருவாய் உரிமம் புதுப்பிக்கப்படாத அல்லது மாற்றப்படாத வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.



இவ்விடயம் தொடர்பில் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவிக்கையில்,

“துறைமுகம் மற்றும் விமான நிலையம் மற்றும் பந்தய போட்டிகளுக்காக இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் மூலம் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.



தற்போது எண்பத்து மூன்று லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஆண்டுக்கு ஐம்பத்தைந்து லட்சம் வாகனங்கள் மட்டுமே புதுப்பிக்கப்படுகின்றன.



வாகன வருவாய் உரிமங்களை புதுப்பிப்பதற்கு தேவையான புகை சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதன் மூலம் இது உறுதிப்படுத்தப்படும்.” என்றார்.