உட்கட்சி மோதலின் உச்சம்; தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து விலகிய பசில்..!

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவியை வெற்றிடமாக வைக்க கட்சி தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று (16) ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



“கட்சியின் செயற்குழு அழைக்கப்பட்டது. அங்கு ஆற்றல்மிக்க முடிவுகள் எடுக்கப்பட்டு அரசியல் சபை நியமிக்கப்பட்டது.”

தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து பசில் ராஜபக்ச ராஜினாமா செய்ததாக செய்தி வருவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த பதிலில்,



“இல்லை. அவர் நிறுவனராக கட்சி அமைப்புப் பணிகளையும் செய்கிறார். அரசியல் குழுவையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். எனவே தேசிய அமைப்பாளர் பதவியை காலியாக வைக்க அவரும் கட்சியும் உடன்பட்டனர்.



எதிர்காலத்தில் நாங்கள் எடுக்கும் அரசியல் முடிவுகளின் அடிப்படையில், தேவையான நபரை நியமிப்போம்.” என தெரிவித்தார்.