மட்டக்களப்பில் சகோதரனால் 14 வயது தங்கை கர்ப்பம்; சகோதரன் கைது..!

மட்டக்களப்பு காத்தான்குடியில் தனது தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணனை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.ஏஸ்.ஏம்.ஏ.றஹீம் தெரிவித்தார்.சம்பவத்தில் காத்தான்குடி ஆரையம்பதி பிரதேசத்தில் 24 வயது அண்ணன் தனது 14 வயதுடைய தங்கையை கர்ப்பமாக்கியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்ட ஐந்து மாத கர்ப்பிணியான தங்கை மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் கைதான சந்தேகநபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.