வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்கு புதிய செயலாளர் நியமனம்..!

வவுனியா வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலகத்தின் செயலாளராக திருமதி குகன் சுலோஜனி இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக தனது கடைமைகளை பொறுப்பேற்றுள்ளார்.இவர் கடந்த காலங்களில் வவுனியா மாவட்ட செயலகத்தின் காணி கிளைக்கு பொறுப்பான மேலதிக அரசாங்க அதிபராக சேவையாற்றியிருந்தார் என்பதுடன், வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலகத்தின் செயலாளர் அவர்கள் ஓய்வு பெற்றிருந்த நிலையில், குறிப்பிட்ட சிலகாலம் பதில் பிரதேச செயலாளராக அங்கு பணியாற்றியிருந்தார்.இதன்போது ஒருசில அரசியல் அழுத்தங்களால் மீண்டும் மேலதிக அரசாங்க அதிபராக சேவையில் இருந்த நிலையில், பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகணா சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலாளராக நிரந்தர நியமனம் வழங்கப்பட்டு இன்றைய தினம் கடமையை பொறுப்பேற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.