வவுனியா – ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடி அகற்றம்..!

வவுனியா – ஓமந்தை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ சோதனைச் சாவடி அகற்றப்பட்டுள்ளது.

குறித்த இராணுவ சோதனைச் சாவடி நேற்று (14.5.2024) நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த காலங்களில் நாட்டில் கொரோனா பரவல் (covid 19) தீவிரமடைந்ததை அடுத்து நாடாளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப் படுத்தப்பட்டிருந்தது.

அந்த வகையில், வவுனியா மாவட்டத்தின் ஓமந்தை உட்பட பல்வேறு பகுதிகளில் தற்காலிக இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.அவற்றில் பல சோதனை சாவடிகள் அகற்றப்பட்ட நிலையில் ஓமந்தை சோதனை சாவடி மாத்திரம் நான்கு வருடங்களாக அகற்றப்படாமல் நிரந்தர இராணுவ சோதனை சாவடியாக இயங்கியது.

இந்நிலையில், குறித்த இராணுவ சோதனைச் சாவடி தற்போது அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.