2022 மார்ச் மாத நிலமையை விடவும் ஆபத்தான நிலைக்கு நாடு தள்ளப்படலாம் – ரணில் அதிரடி

சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து நிதி உறுதி கடிதம் நேற்றிரவு கிடைத்ததையடுத்து, தானும் மத்திய வங்கி ஆளுநரும் கையெழுத்திட்ட இணக்கப்பாட்டுக் கடிதம் சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.



இதன்படி, நாட்டுக்கான தனது கடமையை நிறைவேற்றியுள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியம் தனது கடமையை இம்மாத இறுதிக்குள் நிறைவேற்றும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



பொருளாதாரத்தின் தற்போதைய நிலை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து ரணில் விக்ரமசிங்க இன்று (07) நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.



தற்போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த வேலைத்திட்டம் சீர்குலைந்தால் 2022 மார்ச் மாத நிலமையைவிட மிகவும் ஆபத்தான நிலைக்கு நாடு தள்ளப்படலாம் எனவும் எச்சரித்துள்ளார்.