இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு – எரிசக்தி அமைச்சு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலையை 7 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விலை திருத்தத்திற்கு அமைவாக பெற்றோல் லீற்றரின் புதிய விலை 333 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.அதேபோல், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய விலை திருத்தத்துக்கு அமைய 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 365 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.மேலும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 310 ரூபாவாகும்.

அதேபோல், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 135 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. அதன்படி, 465 ரூபாவாக இருந்த சூப்பர் டீசலின் புதிய விலை 330 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.எனினும், மண்ணெண்ணெய் விலையில் மாற்றங்கள் எதுவும் இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.