சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் டிசம்பர் 23 ஆம் திகதியன்று மாணவி ஒருவர் பாலியல் வன்னொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு முழுவதும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
பாதிக்கப்பட்ட மாணவி டிசம்பர் 23 ஆம் திகதியன்று இரவு உணவுக்குப் பிறகு மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குறித்த மாணவியை அச்சுறுத்தி பிறகு மாணவியின் நண்பரை அங்கிருந்து அடித்து விரட்டிவிட்டு குறித்த பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார்.
அத்தோடு, இந்த விடயத்தை வெளியில் கூறினால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய காணொளியை சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் என மிரட்டியதால் பாதிக்கப்பட்ட மாணவி பயத்தில் இருந்துள்ளார்.
இதையடுத்து, உடன் இருக்கும் மாணவிகள் கேட்கவும் நடந்ததை தெரிவித்த பாதிக்கப்பட்ட மாணவி இதையடுத்து, அவரின் பெற்றோருக்கும் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அடுத்த நாள் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
மாணவி அளித்த புகாரின் பேரில் அந்த நேரத்தில் அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவான எண்களை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அதன் அடிப்படையில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபரை பாதிக்கப்பட்ட மாணவி அடையாளம் காட்டியுள்ளார்.
இதையடுத்து, டிசம்பர் 25 ஆம் திகதியன்று 37 வயதான ஞான சேகரன் என்ற நடைபாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்யும் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recent Comments