Wednesday, February 5, 2025
Huisசினிமாரேகா சித்ரம் திரை விமர்சனம்

ரேகா சித்ரம் திரை விமர்சனம்

ஆசிப் அலி, அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியாகியுள்ள ரேகா சித்ரம் மலையாள படத்தின் விமர்சனம் குறித்து காண்போம்.

கதைக்களம்

காவல் ஆய்வாளர் விவேக் (ஆசிப் அலி) ஆன்லைன் ரம்மி விளையாடியதற்காக சஸ்பென்ட் செய்யப்படுகிறார்.

வீட்டு வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கும் அவர் திரிச்சூரின் மலக்கப்பாரா பகுதிக்கு டிரான்ஸ்பர் செய்யப்படுகிறார்.

அங்கு சென்றதுமே சித்திக் காட்டுக்குள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கை விசாரிக்க வேண்டியதாகிறது.

சித்திக் இறப்பதற்கு முன் பேஸ்புக் லைவில் மூவரின் பெயர்களை கூறிவிட்டு, நாங்கள் அந்த பெண்ணை இங்கேதான் புதைத்தோம். அதனால் என் உயிர் இங்கேயே போகட்டும் என்று கூறுகிறார்.

அவரது வாக்குமூலத்தை வைத்து அந்த இடத்தில் தோண்டும் போது எலும்புக்கூடுகள் கிடைகின்றன. அதனை வைத்து ஆசிப் அலி விசாரணையைத் தொடங்குகிறார். அப்போது தொழிலதிபர் மனோஜ் கே ஜெயன் மீது ஆசிப் அலிக்கு சந்தேகம் வருகிறது.

மேலும் அவர் விசாரிக்கும் நபர்கள் கொல்லப்படுகிறார்கள். இடையே ஆசிப் அலி டிராபிக்கிற்கு மாற்றப்படுகிறார். அதன் பின்னர் காவலராக நேரடியாக இல்லாமலே குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்படுகிறார்.

40 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட பெண் யார்? அவருக்கும் தற்கொலை செய்துகொண்டவருக்கும் என்ன சம்பந்தம்? தன்னை செயல்படவிடாமல் தடுப்பது யார் என்ற கேள்விகளுக்கு ஆசிப் அலி எப்படி பதில் கண்டுபிடித்தார் என்பதே படத்தின் மீதிக்கதை

படம் பற்றிய அலசல்

விவேக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆசிப் அலி மிடுக்கான காவல் அதிகாரியாக நடிப்பில் அதகளம் செய்திருக்கிறார்.

சைலண்டாக விசாரிக்கும் போலீஸ் என்று பார்க்கும்போது தடாலடியாக தன்னை கிண்டல் செய்யும் அதிகாரி ஒருவரை அடித்து எச்சரிக்கும் காட்சியில் ஆசிப் அலி கைத்தட்டலை பெறுகிறார்.

போலீசாக இருந்தாலும் வழக்கை கண்டுபிடிக்க வேண்டுமென தானே இறங்கி குழியை தோண்டும் ஆசிப் அலி, 1985யில் ரேகா என்ற பெண்ணுக்கு என்ன ஆனது, உண்மையில் அவர் யார் என்ற கேள்விக்கு விடை முயல்வதிலும் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.

அவருக்கு அடுத்து அனஸ்வரா ராஜன் வெகுளித்தனமான பெண் கதாபாத்திரம் மூலம் நம்மை கவர்கிறார்.

ஒரு நடிகையாக வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று கூறுவதுடன், மம்மூட்டிக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என அவர் பேசும் ஒரு காட்சி மிகவும் எதார்த்தம்.

மனோஜ் கே ஜெயன் அமைதியான வில்லத்தனத்தில் ஸ்கோர் செய்கிறார். பெரும்பாலும் பார்வையிலேயே வசனத்தை அவர் கடத்துகிறார். பிளாஷ்பேக் காட்சியில் நடிகர் மம்மூட்டியை டிஏஜிங் லுக்கில் காட்டிய விதம் அருமை.

முதல் பாதி பொறுமையாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து வரும் யூகிக்க முடியாத ட்விஸ்ட்கள் நம்மை சீட் நுனியில் அமர வைக்கிறது.

பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்க்க, ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. மொத்தத்தில் மலையாள சஸ்பென்ஸ் திரில்லர் படங்களை விரும்பி பார்ப்பவர்களுக்கு செம ட்ரீட் இந்த “ரேகா சித்ரம்”

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!