யாழ் பொது நூலக எரிப்பு; வவுனியாவில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு..!

ஆசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ் பொது நூலக எரிப்பு இடம்பெற்று நாளையுடன் 42ஆவது ஆண்டு நிறைவடையும் நிலையில் நேற்றைய தினம் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் உணர்வு பூர்வமாக நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ் பொது நூலக எரிப்பானது தமிழ் இன அழிப்பின் ஒரு வடிவம் என தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.வவுனியாவில் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக உள்ள கொட்டகையில் குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இலங்கையில் 1981 ஆம் ஆண்டு கடும்போக்குவாத அரசின் கைக்கூலிகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட யாழ் நூலக எரிப்பு இடம் பெற்று நாளையுடன் 42 ஆண்டுகள் நிறைவடைகின்றது.சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சிக்காலமான 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் திகதி யாழ் நூலக எரிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.