Sunday, September 14, 2025
Huis Blog

அரச அலுவலகமாக மாறும் மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லம்..!

0

முன்னாள் ஜனாதிபதிகளிடமிருந்து மீண்டும் கையகப்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ குடியிருப்புகளை அரசு அலுவலகங்களாகவோ அல்லது வருவாய் ஈட்டும் நோக்கங்களுக்காகவோ பயன்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்தக் கட்டிடங்கள் எவ்வாறு பொருளாதார ரீதியாகப் பயன்படுத்தப்படும் என்பது குறித்த இறுதி முடிவை நிதி அமைச்சு எடுக்கும்.

அரசாங்க நிதியில் பராமரிக்கப்படும் இந்த சொத்தை பொது மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் முதலீடுகளுக்குப் பயன்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

முன்னர் ஒரு குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமானதாக இருந்த இந்த மதிப்புமிக்க வீடுகள், முழு மக்களுக்கும் பயனளிக்கும் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவது மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உன் நாட்டிற்குத் திரும்பிச் செல்; சீக்கியப் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு..!

0

இங்கிலாந்தின் ஓல்ட்பரி நகரில் 20 வயதுடைய சீக்கியப் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அங்கு பாரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வன்புனர்வுக்கு உட்படுத்தியவர்கள் பெண்ணிடம் “நீ உன் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்” என்றும் கூறியுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த செவ்வாய்க் கிழமை காலை 8:30 மணியளவில் ஓல்ட்பரியில் உள்ள டேம் வீதி அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தை இன ரீதியான மோசமான தாக்குதலாகக் கருதும் பொலிஸார், தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களிடமும் கோரியுள்ளனர்.

வீதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி உதவியுடன் தடயவியல் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

சந்தேக நபர்கள் “வெள்ளை நிற ஆண்கள்” என்றும் அவர்களில் ஒருவர் மொட்டையடிக்கப்பட்ட தலையுடன் இருந்ததாகவும் மற்றொரு சந்தேக நபர் சாம்பல் நிற மேல் சட்டை அணிந்திருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது

.ஒரு சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த தாக்குதலை அடுத்து சீக்கிய மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை அந்த நாட்டு பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்துள்ள சீக்கியப் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு அங்கு வாழும் இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மட்டு’வில் யுவதியை துஸ்பிரயோகம் செய்த நிறுவன மனேஜருக்கு 10 வருட கடூழிய சிறை..!

0

மட்டக்களப்பில் நிதி நிறுவனம் ஒன்றில் நேர்முக பரீட்சைக்கு சென்ற பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நிதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளருக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனையை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

மட்டக்களப்பில் இயங்கிவரும் நிதி நிறுவனம் ஒன்றில் உள்ள வெற்றிடத்திற்கு விண்ணப்பித்த பெண் ஒருவரை சம்பவ தினமான கடந்த 2019 செப்டம்பர் 4 நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

நிதி நிறுவனத்திற்கு சென்ற பெண்ணை குறித்த நிதி முகாமையாளர் அங்கிருந்து வீடு ஒன்றுக்கு அழைத்து சென்று குறித்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து நிதி நிறுவன முகாமையாளரை கைது செய்தனர்.

இதனையடுத்து குறித்த நிதி முகாமையாளர் எதிராக பொலிஸார் வழக்கு தொடரப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் விசாரணை இடம்பெற்று வந்துள்ள நிலையில் குறித்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு எடுத்து கொண்ட போது குறித்த முகாமையாளருக்கு எதிராக 3 குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சிகள் மற்றும் தடைய பொருட்கள் மூலம் குற்றவாளியாக இனம் காணப்பட்டார்.

எனவே குறித்த நபருக்கு ஒரு குற்றசாட்டுக்கு 5 இலட்சம் ரூபா வீதம் 3 குற்றச்சாட்டுகளுக்கும் 15 இலட்சம் ரூபாவை பாதிக்கப்பட்ட பெண்ணுக்க வழங்குமாறும் அந்த பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் 2 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை 20 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறும் நீதிபதி கட்டளையிட்டு தீர்ப்பளித்தார்.

முல்லைத்தீவில் 15 வயது சிறுமி துஸ்பிரயோகம்; இருவர் கைது..!

0

முல்லைத்தீவு – உடையார்கட்டு தெற்கு, குரவில் பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

கடந்த 9 திகதி இரவு உடையார் கட்டு தெற்கு குரவில் பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய சிறுமி ஒருவரை சுதந்திரபுரம் பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞன் ஒருவன் வீடொன்றிற்கு அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.

சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியமையை அறிந்த உறவினர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதையடுத்து குறித்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய 23 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் வீட்டின் உரிமையாளரான 23 வயதுடைய இன்னுமொரு இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரும் புதுக்குடியிருப்பு பொலிஸாரின் விசாரணையின் பின்னர் தடயவியல் பொலிஸாரின் அறிக்கையோடு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தபடவுள்ளனர்.

குற்றவாளிக்கு வெடிமருந்து விற்ற முல்லைத்தீவு இராணுவ அதிகாரி கைது..!

0

கமாண்டோ சலிந்த என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிக்கு T56 வெடிமருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் இராணுவ லெப்டினன்ட் கேணல் ஒருவர் இன்று (11) மேற்கு வடக்கு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டார்.

இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்ட நேரத்தில் முல்லைத்தீவில் உள்ள இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

கணேமுல்ல, கமாண்டோ படைப் பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்த காலத்தில், கமாண்டோ சாலிந்தாவுக்கு 260 T56 வெடிமருந்துகளை இரண்டு சந்தர்ப்பங்களில் 650,000 ரூபாய்க்கு விற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது கூடுதலாக, அவர் மீது மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் உள்ளன. கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

அரசியலில் இருந்து இன்னும் ஓய்வுபெறவில்லை – சமல் ராஜபக்ச

0

” நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை. தற்போது நடப்பவற்றை உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன் ” என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்தார்.

” அரசியலுக்குள் வந்து விட்டால் அதனை கைவிட முடியாது. நான் இன்னும் ஓய்வுபெறவில்லை. தற்போது நடப்பவற்றை அவதானித்து வருகின்றேன். எமக்கு மக்கள் ஆதரவு உள்ளதா என்பதை தேர்தலில் போட்டியிட்டே கண்டறிய முடியும்.” எனவும் அவர் கூறினார்.

கடந்த பொதுத் தேர்தலில் சமல் ராஜபக்ச போட்டியிடவில்லை. அவரது மகன் சஷீந்திர ராஜபக்சவும் மண் கவ்வினார்.

பல மாதங்களுக்கு பிறகு பொது வெளிக்கு வந்த சமல் ராஜபக்சவின் அரசியல் நடவடிக்கை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஊழல் நீரூபிக்கப்பட்டால் பதவியை துறப்பீர்களா? சவால் விடுத்த அர்ச்சுனா..!

0

மீன்பிடித் துறை அமைச்சராக சந்திரசேகர் வந்தபின் கரைவலை மற்றும் சுருக்குவலை போன்ற சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் எடுத்த நடவடிக்கை என்ன? எனவும் நீங்கள் செய்த ஊழல்களை நான் வெளிப்படுத்தினால் அமைச்சுப் பதவியை துறப்பீர்களா எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கேள்வியெழுப்பினார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடற்றொழில் அமைச்சகத்தின் கீழ் பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் பொது மக்களால் முன்வைக்கப்படுகின்ற போதும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்வி எழுப்பியுள்ளார்.

நீரியல் துறை அமைச்சராக அமைச்சர் சந்திரசேகர் பொறுப்பேற்ற பின் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகள் குறித்து கரிசனை கொள்ளவில்லை என்பது மக்களது முறைப்பாடாகும்.

இதுவரை குறித்த அமைச்சகத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகள் எத்தனை என்பதை தெளிவுபடுத்த முடியுமா என அர்ச்சுனா கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் கடல் அட்டை பண்ணை விவகாரத்திலும் பல ஊழல்கள் இடம் பெற்றுள்ளதாக மக்கள் முறையிட்டுள்ளனர். ஏன் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.

இந்நிலையில் தங்களது பினாமிகளின் பெயரில் கையூட்டல் இடம் பெறுகின்றதா. இதற்குரிய ஆதாரங்களை சபையில் சமர்ப்பித்தால் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள முடியுமா?

குறிப்பாக அமைச்சர் சந்திரசேகர் அமைச்சுப் பதவியை ஏற்ற பின்னர் வடமாகாண கடற்றொழில் திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றங்கள் குறித்து விபரங்களை வெளிப்படுத்த முடியுமா என கேட்டுள்ளார்.

மேலும் அமைச்சர் சந்திரசேகர் மீது ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் பதவி விலகுவதற்கு தயாரா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்நிலையில் அர்ச்சுனாவால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து பதிலளிப்பதற்கு இரண்டு வார கால அவகாசம் வேண்டும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதிலளித்துள்ளார்.

வைத்தியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இடையூறு; அதே வைத்திய சாலை வைத்தியர் கைது..!

0

கண்டி தெல்தெனிய வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த வைத்தியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் அதே வைத்திய சாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் தெல்தெனிய பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார்.

தெல்தெனிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபரான வைத்தியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான வைத்தியர் இதற்கு முன்னரும் வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த வைத்தியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இடையூறு விளைவித்து அநாகரிகமாக செயற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த வைத்தியர் இன்று புதன்கிழமை (10) தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கல்முனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞன் கொலை; சந்தேக நபர் கைது..!

0

கல்முனை, பெரியநீலாவணை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞன் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மருதமுனை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

அயலவருடன் ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியமையால் இந்த கொலை சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெனீவா சென்று முறையிடப் போவதாக அர்ச்சுனா எம்பி சபையில் தெரிவிப்பு..!

0

நாட்டில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் தான் ஜெனீவா சென்று முறையிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஆளும் கட்சியில் யாரையும் வடக்கு மக்களுக்கு தெரியாது. அமைச்சர் சந்திரசேகர் மற்றும் இளங்குமரன் ஆகியோரையும் எங்களுக்கு தெரியாது. இருந்தாலும் வடக்கு மக்கள் உங்களுக்கு வாக்களித்தமைக்கு காரணம் இருக்கின்றது.

ஒரு காலத்தில் எங்களை போலவே நீங்களும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் செய்தவர்கள். இதனாலேயே நம்மை போன்றவர்கள் என எண்ணி வடக்கு மக்கள் உங்களுக்கு வாக்களித்தனர்.

அத்துடன், இன்று வரை எங்களுக்காக மரணித்த ஒருவரை கடவுள் என நாடாளுமன்றத்தில் கூறிய ஒரே தமிழ் அரசியல்வாதி நான் மட்டுமே.

வடக்கு கிழக்கில் குற்றச்செயல்கள் நடைபெறுகின்றன. ஆனால், அதற்கான நடவடிக்கைகள் இன்றுவரை எடுக்கப்படவில்லை. யாரும் அதற்காக கைது செய்யப்படவில்லை. ஆனால், நீங்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்தீர்கள்.

வன்முறைகளை நாம் விரும்புவதில்லை. உங்களுடைய கட்சியை சேர்ந்த நால்வர், அரகலய காலத்தில் நாடாளுமன்றத்தை எரிக்குமாறு கூறினார்கள். ஆனால், நீங்கள் இன்று நாடாளுமன்றத்தால் வழங்கப்பட்ட வாகனங்களிலேயே பயணிக்கின்றனர்.

நாங்கள் கடவுச்சீட்டு அலுவலகம் கேட்கவில்லை, கிரிக்கட் மைதானம் கேட்கவில்லை. மாறாக தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வையே கேட்டோம். அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

இந்த நாட்டில் தமிழர்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் தொடர்பில் நான் ஜெனீவா சென்று முறையிடுவேன். அதன் பின்னர் நாட்டிற்கு வந்தவுடன் என்னை கைது செய்வதாயின் கைது செய்யுங்கள்.

ஆனால், நான் என்றாவது ஒரு நாள் சிங்கள மக்கள் வாழும் ஒரு தொகுதியில் நின்று தேர்தலில் போட்டியிடுவேன். அப்போது உங்கள் கட்சியில் எத்தனை குழந்தைகள் மீதம் இருக்கிறது என்பதை பார்ப்போம்”இவ்வாறு இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!