Saturday, May 2, 2026
Huis Blog Bladsy 62

போதைப்பொருளுடன் சிக்கிய கணவர் கைது; பதவியை துறக்கும் பிரதேச சபை உறுப்பினர்..!

0

ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபருடைய மனைவியான தேசிய மக்கள் சக்தி பேலியகொட நகரசபை உறுப்பினர் தனது பதவியை விட்டு விலகவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கணவர் கைது செய்யபப்பட்டதை தொடர்ந்து, நகரசபை உறுப்பினரின் பேலியகொட இல்லமும் காவல்துறையினரால் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், சம்பந்தப்பட்ட வீட்டில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான எந்த சந்தேகத்திற்கிடமான நடவடிக்கையும் கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது.


சந்தேக நபரான அதிபரின் மகனும் கடந்த 30 ஆம் திகதி 20 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனைதொடர்ந்து, அநுராதபுர குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அதிபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், கைது செய்யப்பட்ட அதிபரின் மருமகனான சஷி, துபாயில் இருந்து அவருக்கு போதைப்பொருட்களை அனுப்பியதாக கண்டறிப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேகத்திற்குரிய அதிபருக்கு கொஸ்கொட சுஜி என்ற போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்பு இருந்ததாகவும் மேலும் தெரியவந்துள்ளது.


இவ்வாறானதொரு பின்னணியில், தேசிய மக்கள் சக்தியின் உயர்மட்ட உறுப்பினர்கள் இந்த விடயத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளதாகவும் இது தொடர்பாக நேற்று பல பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, சந்தேகநபரின் மனைவியான பேலியகொட நகரசபை உறுப்பினர் பதவி விலகுவது மிகவும் பொருத்தமானது என்று அவர்களில் பெரும்பாலானோர் வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலையில், அவரை ஒரு கட்சியிலிருந்து நீக்குவதற்கு பதிலாக, அவராகவே தனது பதவியை விட்டு விலக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

துயிலும் இல்ல காணிகளை விட்டு வெளியேறவுள்ள இராணுவம்; ஆளும் தரப்பு தெரிவிப்பு..!

0

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் இதற்கு அமைவாக மிக விரைவாக இராணுவம் நிலை கொண்டுள்ள துயிலும் இல்ல காணிகளை விட்டு வெளியேற உள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

இதை நான் சொல்லவில்லை. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்த விடயமே. மாவீரர்களை நினைவு கூறுவதற்கான உரிமை நூற்றுக்கு நூறு அந்த மக்களுக்கு உள்ளது.


தற்போதைய அரசாங்கமானது தமிழ் மக்களின் பல காணிகளை விடுவித்து வரும் நிலையில் துயிலும் இல்லங்களில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரையும் முற்று முழுதாக அந்தப் பகுதியில் இருந்து விடுவித்து மக்களை அவர்களின் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான முழு உரிமையையும் வழங்கும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார பாதுகாப்புச் செயலாளருக்கு காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு அமைவாகமிக விரைவாக இராணுவம் நிலை கொண்டுள்ள துயிலும் இல்ல காணிகளை விட்டு வெளியேற உள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உயர் அதிகாரிகளின் தலையீடுகளின் மத்தியில் யாழில் குற்றவாளி கைது..!

0

யாழில் இளைஞன் ஒருவரை , தாயின் கண் முன் நிர்வாணமாக்கி , சித்திரவதைக்கு உள்ளாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் 11 மாதங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கு பொலிஸார் பல தடவைகள் முயன்ற போதிலும் வடமாகாண பொலிஸ் உயர் அதிகாரிகளின் தலையீடுகள் காரணமாக கைது செய்ய முடியாது பொலிஸார் திண்டாடி வந்த நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நபர் ஒருவரை சந்தேக நபர் பார்வையிட வந்த வேளை பொலிஸ் புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட நபரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த பிரதான சந்தேகநபருக்கும் வடமாகாணத்தில் கடமையாற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் காணப்பட்டமையால் , சந்தேகநபரை கைது செய்வதற்கு அதிகாரிகள் தடையேற்றப்படுத்தி வந்தனர் எனவும்,

கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் சந்தேக நபர் தொடர்பிலான தகவல்கள் கிடைக்கப்பெற்று சிவில் உடையில், தனியார் ஒருவரின் முச்சக்கர வண்டியில் சந்தேக நபரை கைது செய்வதற்கு பொலிஸ் குழு சென்ற வேளை சந்தேக நபர் தப்பி சென்றிருந்த நிலையில்,

தனியாருக்கு சொந்தமான முச்சக்கர வண்டியில் சிவில் உடையில் பொலிஸார் பயணித்தமை தொடர்பில் விசாரணைகள் நடாத்தி பொலிஸாருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பின்னணி இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சனையில் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞனை அவரது தாய்க்கு முன்னால் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி , சித்திரவதை புரிந்து கட்டி வைத்து மிக மோசமான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.


சித்திரவதை மற்றும் தாக்குதல்களை மேற்கொள்ளும் போது , தாக்குதலாளிகள் அவற்றை கையடக்க தொலைபேசியில் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் சுமார் 15 பேர் வரையில் பொலிஸார் அடையாளம் கண்டு கொண்டனர். அவர்களில் ஒரு சிலரை மாத்திரம் கைது செய்து வழக்கு விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

பிரதான சந்தேகநபர் உள்ளிட்டவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு நீதிமன்று திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட போதிலும் , பொலிஸார் பிரதான சந்தேகநபரை கைது செய்வதனை கடந்த 11 மாதங்களாக தவிர்த்து வந்தனர். இந்நிலையிலையே இன்றைய தினம் கைது செய்துள்ளனர்.

பொலிசாரை அச்சுறுத்திய NPPயின் பிரதேச சபை உறுப்பினருக்கு பிணை..!

0

பொலிசாரை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி (NPP) ஹிங்குராக்கொட பிரதேச சபை உறுப்பினர் இன்று ஹிங்குராக்கொட நீதவான் துமிந்த கருணாரத்னவால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.


நீதிபதியால் தலா ரூ. 200,000 இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டார்.


தனது சகோதரனை விடுவிக்கும் முயற்சியில் ஹிங்குராக்கொட காவல் நிலையத்திற்குள் பொலிசாரை அச்சுறுத்தியதாகவும், குற்றவியல் பலத்தைப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு நேற்று இரவு அவர் கைது செய்யப்பட்டார்.

சகோதரனை விடுவிக்க முயன்ற திசைக்காட்டி உறுப்பினர் மது போதையில் கைது..!

0

மின்சார சபை ஊழியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனது சகோதரரை விடுவிக்க முயற்சி செய்த குற்றச்சாட்டின் பேரில், ஹிங்குரக்கொட பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கே. டபிள்யூ. எஸ். எஸ். உதயகுமார (44) என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மின் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பைத் துண்டிக்க வந்த ஊழியர்களை மிரட்டிய குற்றச்சாட்டில் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தார்.


இந்த நிலையில், அவரை பார்க்க சென்ற குறித்த பிரதேச சபை உறுப்பினர், காவல்நிலையத்தினுள் நுழைந்து கடமையில் இருந்த காவல்துறை அதிகாரிகள் இருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்களை அச்சுறுத்தியதாக தெரியவந்துள்ளது.


அத்துடன், காவல்துறை அதிகாரி ஒருவரின் கைபேசியையும் அவர் பறிக்க முயன்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், சட்டப்பூர்வக் காவலில் இருந்த சந்தேகநபரை விடுவிக்க முயற்சித்தமை, கடமைக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றங்களுக்காக சந்தேகநபரான பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.


பின்னர், அவர் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது, சந்தேகநபர் மது போதையில் இருந்தமை உறுதி செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் மாணவிகளுடன் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியர் நிரந்தரமாக பணி நீக்கம்..!

0

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாடசாலை ஒன்றில் மாணவிகளுடன் தவறாக நடக்க முற்பட்ட பாடசாலையுடன் இணைக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தரான ஆசிரியர் நேற்றைய தினம்(05) நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.


இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

குறித்த ஆசிரியர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இவ்வாறு மாணவிகளுடன் தவறாக நடக்க முற்பட்ட நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.


அந்த வகையில் விசாரணைகளின் முடிவில் அவர் நேற்றைய தினம் பணி நீக்கம் செய்யப்பட்டதாக அறியமுடிகிறது.

இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சந்தேக நபர்களில் 1/3 பங்கினர் பொலிஸார்..!

0

இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பொலிஸார் என்பது தெரிய வந்துள்ளது.

ஜனவரி 1 முதல் செப்டெம்பர் 30, 2025 வரை நடத்தப்பட்ட 94 தேடுதல்களில் 63 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும், 94 தேடுதல்களில் 37 தோல்வியடைந்த தேடுதல் நடவடிக்கையாக அமைந்ததாகவும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கூறுகிறது.


கைது செய்யப்பட்ட 63 சந்தேக நபர்களில் 20 பேர் பொலிஸைச் சேர்ந்தவர்களாவர். இரண்டாவது அதிக எண்ணிக்கையில் கைதானவர்கள் நீதி அமைச்சுடன் தொடர்புடைய அதிகாரிகள் எனவும், அவர்களின் எண்ணிக்கை ஒன்பது எனவும் தெரியவந்துள்ளது.

அதே காலகட்டத்தில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகளும் ஆறு பொது மகன்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனவரி 1 முதல் செப்டெம்பர் 30, 2025 வரை பெறப்பட்ட மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 5,776 என, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இவற்றில், 365 முறைப்பாடுகளை விசாரிக்க உத்தரவிடப்பட்டதோடு, 1,569 முறைப்பாடுகள் போதுமான ஆதாரங்கள் இல்லாததாலும், சட்டத்திற்குப் பொருத்தமற்றதாக காணப்பட்டதாலும் விசாரிக்கப்படத் தேவையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1,711 ஆகும்.

இந்த காலகட்டத்தில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் 71 வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளது. அந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை 86. இவற்றில் 25 பேர் பொலிஸ் அதிகாரிகள்.


செப்டெம்பர் 30, 2025 தரவுகளுக்கு அமைய, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 276 என இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. நீதவான் நீதிமன்றத்தில் 20 வழக்குகளும், உயர் நீதிமன்றத்தில் 255 வழக்குகளும் மற்றும் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது.

சிறுவனான தம்பியை அச்சுறுத்தி தவறான உறவு; கர்ப்பமான சகோதரி – சம்மாந்துறையில் சம்பவம்

0

உடன்பிறந்த தம்பியை தொடர்ச்சியாக அச்சுறுத்திய நிலையில் கர்ப்பமான சகோதரி சம்மாந்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லரைச்சல் பகுதியில் இடம் பெற்றுள்ளது.


இச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதிப்குமாரவின் வழிகாட்டுதலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் விசாரணை பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கல் வாடியில் வேலை செய்வதுடன் தாய் இல்லத்தரசியாக இருக்கின்றார். இந்நிலையில் இச்சம்பவம் 4 வருடங்களாக இடம்பெற்றுள்ளமை ஆரம்ப விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.


இந்நிலையில் சகோதரனுக்கு சுமார் 11 வயது இருக்கும் போது சகோதரிக்கு 18 வயதாகிய நிலையில் இச்சம்பவம் ஆரம்பமாகியுள்ளது.

இச்செயலுக்கு உடன்பிறந்த தம்பி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களினால் மிரட்டி இச்செயலை தொடர்ச்சியாக 4 ஆண்டுகளாக உடன்பிறந்த சகோதரி மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது 22 வயதான குறித்த சகோதரி வயற்றில் ஏற்பட்ட வலி காரணமாக சம்மாந்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


இதன் போது சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்பட்ட நிலையில் முறைகேடான உறவினால் 2 மாத கர்ப்பம் தரித்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று (5) மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் விசாரணை பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

வவுனியாவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்..!

0

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் ஆரம்பித்துள்ளது. வவுனியா, குருமன்காடு, காளி கோவில் வீதியில் அமைந்த கட்சியின் தாயகம் அலுவலகத்தில் இக் கூட்டம் இன்று (05.11) காலை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.


இக் கூட்டத்தில் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம், மாகாண சபைத் தேர்தல், உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், இரா. சாணக்கியன், து.ரவிகரன், ப.சத்தியலிங்கம், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் கட்சியின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

வட மாகாண ஆசிரியர் இடமாற்றத்திலும், கல்வியிலும் அரசியல் சூதாட்டம் – புயல் நேசன்

0

வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றத்திலும் கல்வியிலும், அரசியல் சூதாட்டமும் அதிகாரியினர் சிலரின் பக்கச்சார்பான செயற்பாகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் புயல்நேசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றத்திலும் கல்வியிலும், அரசியல் சூதாட்டமும் அதிகாரியினர் சிலரின் பக்கச்சார்பான செயற்பாகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

ஆளுநர் உட்பட அதிகாரியினர் சிலர் நீதிமன்ற தீர்ப்பையும் மனித உரிமை ஆணைக்குழுவின் தீர்ப்பையும் மீறி அரசியல் நியமனங்களை மேற்கொள்வதாக சம்பந்தப்பட்டவர்கள் இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்திடம் ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளனர்.


இந்த அரசாங்கத்தில்தான், ஜனாதிபதி கல்வியில் ஒரு முடிவையும் பிரதமரும் கல்வி அமைச்சரும் வேறொரு முடிவையும் தொழில் பிரதி அமைச்சர் இன்னுமொரு முடிவையும் பிரதி அமைச்சர் சிலர் மற்றொரு முடிவையும் அரசியல் தொழிற் சங்க தமிழ்மொழி அழிப்பு அரசியல் அடிவருடிகள் பிறிதொரு முடிவையும் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் – முன்வைத்து வருகின்றனர்.


எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இவை உடனடியாக சீர் செய்யாவிடின், கல்வியில் சரிவு ஏற்பட்டுப் போதைப்பொருள் பாவனை அதிகரிக்கும்

எனவே, ஆசிரியர் இடமாற்றங்கள் சீர்செய்யப்பட்டு, கல்வியில் அரசியல் தலையீடுகளை நீக்காவிடின், அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் வடக்கு மாகாண பாடசாலைகள் தொழிற்சங்க நடவடிக்கைக்குச் செல்ல நேரிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!