Wednesday, March 4, 2026
Huis Blog

யுத்தம் தீர்வல்ல; போரை உடனடியாக நிறுத்துக!!! இஸ்ரேலுக்கு சீனா கடும் எச்சரிக்கை..!

0

பலவந்தமாகப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது எனவும், அது புதிய சிக்கல்களையும் பாரிய நீண்டகால விளைவுகளையும் மாத்திரமே ஏற்படுத்தும் எனவும் சீனா இஸ்ரேலிடம் வலியுறுத்தியுள்ளது.

எனவே, மோதல்கள் மேலும் தீவிரமடைவதையும் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதையும் தடுப்பதற்காக இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு சீனா கோரியுள்ளது.

இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கிதியோன் சார் உடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சர்வதேச உறவுகளில் உலக நாடுகள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் அல்லது அத்தகைய அச்சுறுத்தல்களை விடுக்கக்கூடாது என சீன வெளிவிவகார அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.

இஸ்ரேல் உட்பட அனைத்துத் தரப்பினரின் அடிப்படைத் தேவைகளுக்கும் இது பொருந்தும் என அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச மற்றும் பிராந்திய ரீதியான சிக்கலான பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் தீர்ப்பதற்கு சீனா எப்போதும் முன்னுரிமை அளிப்பதாகவும், அனைத்துத் தரப்பினரும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனங்கள் மற்றும் கொள்கைகளுக்கு இணங்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான அண்மைய பேச்சுவார்த்தைகள், இஸ்ரேலின் பாதுகாப்பு தொடர்பான விடயங்களையும் உள்ளடக்கி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ள போதிலும், துரதிர்ஷ்டவசமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள ஆயுத மோதல்களால் அந்த முயற்சிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சர் கவலை தெரிவித்தார்.

மத்திய கிழக்கு பிரச்சினை தொடர்பில் எப்போதும் நடுநிலையான மற்றும் நியாயமான நிலையில் இருக்கும் சீனா, மோதல்களைக் குறைப்பதில் தொடர்ந்து ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கும் எனவும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

தமிழருக்கு எதிரான 2009 முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது இந்நாடுகள் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பிரேத அறையில் யுவதியின் சடலம் மீது சிற்றுாழியர்கள் துஸ்பிரயோகம்..!

0

க்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலம் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறி வைத்திய சாலைக்கு முன்பாக இன்று (03) உயிரிழந்த யுவதியின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 25ஆம் திகதி ஹட்டன் எபோட்ஸ்சிலி தோட்டப் பகுதியில் 23 வயதான யுவதியொருவர் உயிரை மாய்த்துள்ளார். யுவதியின் சடலம் அன்றைய தினம் மாலை டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.

யுவதியின் சடலம் மீது வைத்திய சாலையில் பணிபுரிந்து வரும் சிற்றூழியர்கள் மூவர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவத்தை கேள்வியுற்ற ஹட்டன் மக்கள் வைத்திய சாலைக்கு முன்பாக ஒன்று கூடி “பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம், வைத்திய சாலை நிர்வாகமே உண்மையை வெளிக் கொண்டு வா” போன்ற கோஷங்களையெழுப்பி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

ஆர்ப்பாட்டம் இடம் பெற்ற இடத்துக்கு டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி உட்பட ஏனைய வைத்தியர்களும் வருகை தந்ததுடன் வைத்திய அதிகாரி பஷ்லி சம்பவம் குறித்து குறிப்பிடுகையில்,

“உயிர்மாய்ப்பு செய்து கொண்ட யுவதியின் சடலமொன்று கடந்த 25ஆம் திகதி வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டது.

குறித்த சடலம் முதல் நாள் பிரேத அறையில் இருந்த நிலையினை விட மறு நாள் வேறு ஒரு நிலையில் காணப்பட வில்லை. ஆனால் இது தொடர்பாக எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. பிரேத அறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவினை நாங்கள் பரிசோதித்து பார்த்தோம்.

அப்போது அந்த சிற்றூழியர்கள் மூவரும் பிரேத அறைக்கு சென்றுவந்த காட்சி பதிவாகியுள்ளது. இது தொடர்பாக நாங்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம் என்றார்.

முல்லைத்தீவைச் சேர்ந்த அபேதரன் யாழ் போதனா வைத்திய சாலையில் மரணம்..!

0

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தரான குமுழமுனையைச் சேர்ந்த மயில்வாகனம். அபேதரன்(அபி) நேற்று யாழ் போதனா வைத்திய சாலையில் மரணமடைந்துள்ளார்.

கடந்த 02.02.2026 அன்று கடும் காச்சல், சளி மற்றும் இருமல் என மாஞ்சோலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு, நிமோனியா காய்ச்சல் என அடையாளம் காணப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கடந்த 07.02.2026 அன்று யாழ்ப்பாணம் பொது மருத்துவ மனையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் சாதாரண மருத்துவ பராமரிப்பில் பராமரிக்கப்பட்டு, பின்னர் நோய் நிலைமை அதிகரித்தன் காரணமாக மீண்டும் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம்(03.02.2026) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மன்னார் விவசாயிகள் நெல்லை இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கு விற்க வேண்டாம் – அரச அதிபர்

0

மன்னார் மாவட்டத்தில் போதிய அளவு எரி பொருட்கள் கையிருப்பில் உள்ளமையினால் விவசாயிகள் அறுவடை செய்கின்ற நெல்லை இடைத் தரகர்களிடம் குறைந்த விலைக்கு விற்க வேண்டாம் எனவும், உலர வைக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி நெல்லைப் பாதுகாக்குமாறு அரச அதிபர் க.கனகேஸ்வரன் விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று புதன்கிழமை (4) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக எரிபொருட்களுக்கான நெருக்கடி நிலைமை காணப்பட்டது.

இந்த நிலையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் அடிக்கடி தொடர்பில் இருந்து மன்னார் மாவட்டத்திற்கு தேவையான எரி பொருளை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் கலந்தாலோசித்த பிறகு, மன்னார் மாவட்டத்திற்கு தேவையான டீசல், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவை தற்போது போதிய அளவு கையிருப்பில் உள்ளன.

தற்போது நெல் அறுவடை காலம் என்பதால், அறுவடை இயந்திரங்களுக்கு தேவையான எரிபொருளை தடையின்றி வழங்குமாறு எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி, அறுவடை இயந்திரங்களுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விவசாயிகள் இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டாம் என்றும், உலர வைக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி நெல்லைப் பாதுகாக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தனியார் மற்றும் அரசு பேருந்துகளுக்குத் தேவையான எரிபொருள் தாராளமாக வழங்கப்படுவதால், பொதுமக்கள் எவ்வித இடையூறுமின்றி பயணங்களை மேற்கொள்ள முடியும்.

கடற்றொழிலுக்கு தேவையான மண்ணெண்ணெய் விநியோகம் தடையின்றி நடைபெறுகிறது. மீனவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள நிலையங்களில் எரி பொருளைப் பெற்றுக் கொள்ளலாம்.

எரிபொருள் விநியோகம் தொடர்பாக ஏதேனும் சிரமங்கள் அல்லது புகார்கள் இருந்தால், மாவட்டச் செயலகம் மற்றும் விவசாயிகள் கமலநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகத்திலும், மீனவர்கள் கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் அலுவலகத்திலும் முறைப்பாடு தெரிவிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கல்வியின் மூலமாகத்தான் நாம் விடுதலை பெற வேண்டும் – அரியநேத்திரன்

0

கல்விதான் எம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். கல்வியின் மூலமாகத்தான் நாம் விடுதலை பெற வேண்டும். நாம் அனைவரும் தமிழர்களாக இருக்க வேண்டும் அதற்காக தமிழ் தேசியத்திற்கு பின்னால் அனைவரும் இருக்க வேண்டும்.

தமிழ் தேசியத்தை நாம் அனைவரும் வளர்க்க வேண்டும். தமிழ் தேசியக் கட்சியில் இருக்கின்ற உறுதியானவர்களை நாங்கள் இனம் கண்டு கொள்ள வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட விவேகானந்தபுரம் கிராமத்தில் நேற்று(03) நடைபெற்ற அகிலன் பவுண்டேசன் நிறுவனத்தினால் அக்கிராம மக்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

2009 மே 18 இற்கு முன்னர் தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிராமங்களில் விவேகானந்தபுரம் கிராமமும் ஒன்றாகும். அதிலும் இக்கிராமம் மிகவும் முக்கியம் வாய்ந்த கிராமமாகும். இந்த கிராமத்தில் இருந்து விடுதலைக்காக போராடிய போராளிகள், மாவீரர்கள் ஆகுதியாகி இருக்கின்ற கிராமமாக கிராமமாகக் காணப்படுகின்றது. அந்த வகையில் மண்ணுக்காகவும் மண் மீட்புக்காகவும் அர்ப்பணித்த கிராமமாக இது காணப்படுகிறது.

விடுதலைப் புலிகள் மௌனித்ததன் பிற்பாடு 2010 ஆம் ஆண்டில் இருந்து இப்பகுதி இராணுவ கட்டுப்பாட்டின் பிரதேசமாகவும் காணப்பட்டு வருகின்றது. 2010 ஆம் ஆண்டிலிருந்து எதிர் பெறுகின்ற மே மாதம் 18 ஆம் திகதி வரைக்கும் நாங்கள் 7 வருடங்களை கடந்திருக்கின்றோம். இந்த 17 வருடங்களில் நாங்கள் அவதானிக்கின்ற விடயம் யாதெனில் ஏற்கனவே இருந்த ஒழுக்கம் நீதி நியாயம் அனைத்துமே இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றது.

இந்தப் படுவாங்கரை பிரதேசத்தில் எம்மவரிடையே அன்று இருந்த ஒழுக்கம் என்பதும் இன்று இருக்கின்ற ஒழுக்கம் என்பதும் அறுந்து போயிருக்கின்றது. பல்வேறுபட்ட சீரழிவுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நமது மக்களை பல்வேறுபட்ட திசை மாற்றுகின்ற நடவடிக்கைகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.

வடக்குக் கிழக்கைப் பொறுத்தவரையில் இளைஞர்கள் யுவதிகள் கடந்த கால போராட்டங்களை மறந்து இருக்கின்றோமா என்ற விடயங்கள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றன. ஆகவே 2010 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரையான 17 வருடங்களுக்குள் நமது மக்களை நல்வழிபடுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. இவ்வாறான செயற்பாடுகளில்தான் அகிலன் பவுண்டேசன் எனும் நிறுவனமும் செயற்பட்டு வருகின்றது.

நமது மக்கள் நிறுவனங்கள் வழங்குகின்ற உதவிகளை மாத்திரம் பெற்றுக் கொண்டு செல்பவர்களாக மாத்திரம் இருக்கக்கூடாது. மனரீதியாக, உளரீதியாக செயற்பாட்டு ரீதியாக நடவடிக்கை ரீதியாக மாற்றங்களை கொண்டுவர வேண்டும்.

உதவிகள் வருகின்றபோது அந்த உதவிகளைப் பெற்று அதன் பெறுபேறுகளை நாங்கள் அவர்களுக்கு காட்ட வேண்டும். அப்போதுதான் உதவி செய்கின்றவர்களின் மன மாற்றங்களும் ஏற்பட்டு ஏனைய கிராமங்களுக்கும் அவர்கள் உதவிகளை மேற்கொள்வார்கள்.

எனவே விவேகானந்தபுரம் கிராம மக்கள் அகிலன் பவுண்டேஷன் போன்ற நிறுவனத்தால் வழங்கப்படும் உதவிகளை பெற்று அவர்களது வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டிருக்கின்றார்கள் என தெரிய வருகின்றது.

எனவே புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்கள் அங்கும் அவர்கள் பல இன்னல்களை சந்தித்து உழைத்துதான் அதில் வருகின்ற ஒரு பகுதி பணத்தைதான் நமது மக்களின் வாழ்வாதாரத்துக்காக இங்கு அனுப்புகிறார்கள். அதற்குரிய பெறுபேறுளை நமது மக்கள் காண்பிக்க வேண்டும்.

கடும் குளிர், பனி அனைத்தையும் கடந்து எமது மக்களுக்கு அவர்கள் நிதி வழங்குகின்றார்கள் என்றால் அவர்களுக்கு நாங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்து காட்ட வேண்டும் என்பதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

அதுபோல் மாணவர்களின் ஒழுக்கம் என்பது பெற்றோர்களில்தான் தங்கி இருக்கின்றது. பாடசாலைகளில் மாணவர்கள் குறைந்து ஆறு மணித்தியாலம்தான் பாடசாலையில் இருக்கின்றார்கள். ஏனைய மிகுதியாக உள்ள நேரம் அனைத்தும் பெற்றோர்களுடன் அல்லது வீட்டில்தான் மாணவர்கள் செலவிடுகின்றார்கள்.

எனவே கல்வி என்பதை ஒரு கருத்தாக எடுத்து எமது மாணவர்களை ஒழுக்க சீலர்களான கல்வியில் கற்பிக்க வேண்டும். கல்விதான் எம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். கல்வியின் மூலமாகத்தான் நாம் விடுதலை பெற வேண்டும்.

நாம் அனைவரும் தமிழர்களாக இருக்க வேண்டும் அதற்காக தமிழ் தேசியத்திற்கு பின்னால் அனைவரும் இருக்க வேண்டும். தமிழ் தேசியத்தை நாம் அனைவரும் வளர்க்க வேண்டும். தமிழ் தேசியக் கட்சியில் இருக்கின்ற உறுதியானவர்களை நாங்கள் இனம் கண்டு கொள்ள வேண்டும். அவர்களை ஒரு பலமான சக்தியாக பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.

தமிழ் தேசியத்தின் குரலாக அவர்களை மிளிரச் செய்ய வேண்டும். அதனை நாம் பலப்படுத்த வேண்டும். இவ்வாறான விடயங்களையும் நாங்கள் திசை மாறாமல் கருத்தில் கொள்ள வேண்டும். எங்கள் இனத்திற்காக நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

ஈரான் அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க முகாம்களை ‘தாக்குதல் தளமாக’கருதுகிறது..!

0

மத்திய கிழக்கு மூலோபாய ஆய்வுகளுக்கான மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான அபாஸ் அஸ்லானி, அல் ஜசீராவிடம், ஈரான் அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களை எதிர்பார்த்ததாகவும், எனவே விரைவாக பதிலளிக்க உதவும் வகையில் “முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல்பாட்டுத் திட்டம்” நடைமுறையில் இருப்பதாகவும் கூறினார்.

“இருப்பினும், அண்டை நாடுகளில் அமெரிக்க இருப்பை ஒரு இறையாண்மை விருந்தினராக ஈரான் பார்க்கவில்லை, மாறாக ஒரு ஒருங்கிணைந்த தாக்குதல் தளமாக பார்க்கிறது,” என்று அஸ்லானி கூறினார்.

“அதனால்தான் ஈரான் அமெரிக்கா அண்டை நாடுகளின் வான்வெளியையோ அல்லது பிரதேசத்தையோ பயன்படுத்தி அவர்களைத் தாக்கக்கூடாது என்று கூறுகிறது, மேலும் ஈரான் பதிலளித்தால், பதில் அண்டை நாடுகளுக்கு எதிராக அல்ல, அமெரிக்க இருப்பு, அமெரிக்க இராணுவ தளங்கள் மற்றும் அந்த நாடுகளில் அதன் நலன்களுக்கு எதிராக இருக்கும்” என்று அவர் கூறினார்.

ஈரான் மற்றும் அமெரிக்காவின் இராணுவத் திறன்களை ஒப்பிடுகையில், ஈரான் தங்கள் இலக்குகளின் வரம்பை விரிவுபடுத்துவதன் மூலம் “சமச்சீரற்ற முறைகளை” பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்று அஸ்லானி கூறினார்.

“இது பிராந்தியத்தில் அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளின் செயல்திறனை ஈரான் நீர்த்துப்போகச் செய்யும் சாத்தியத்தை உருவாக்கக்கூடும், மேலும் இது அமெரிக்க சொத்துக்கள் மற்றும் இஸ்ரேலிய இலக்குகளை குறிவைப்பதில் ஈரானின் தாக்குதல்களை மிகவும் பயனுள்ளதாக மாற்றக்கூடும்.

எனவே இது அண்டை நாடுகளுக்கு தீங்கு விளைவிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அந்த நாடுகளில் உள்ள அமெரிக்க சொத்துக்களுக்கு தீங்கு விளைவிக்கும்,” என்று அவர் கூறினார்.

“இருப்பினும், இந்தப் போர் நீண்ட காலம் நீடிக்கும் போது, ​​நோக்கம் மேலும் வளரக்கூடும். எனத் தெரிவித்தார்”

ஈரான் தலைநகரில் உள்ள காந்தி மருத்துவமனை மீது அமெரிக்க – இஸ்ரேல் படைகள் தாக்குதல்..!

0

ஈரானிய செய்தி நிறுவனமான ISNAவின் கூற்றுப்படி, வடக்கு தெஹ்ரானில் உள்ள காந்தி மருத்துவமனை அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் குறிவைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

“தெஹ்ரானின் காந்தி மருத்துவமனை சியோனிச – அமெரிக்க வான் வழித் தாக்குதல்களால் தாக்கப்பட்டது,” என்று அது கூறியது.

ஃபார்ஸ் மற்றும் மிசான் செய்தி நிறுவனங்கள், மனிதர்கள் அற்ற சக்கர நாற்காலிகளுக்கு இடையில் தரையில் குப்பைகள் இருப்பதைக் காட்டும் ஒரு வீடியோவை உள்ளே இருந்து வெளியிட்டுள்ளன.

‘இந்தியா ஐக்கிய அரபு எமிரேட்சுடன் ஒற்றுமையாக நிற்கிறது’ – பிரதமர் மோடி

0

பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் தொலைபேசியில் சற்று முன்னர் பேசியதாகக் கூறியுள்ளார்.

“ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது நடந்த தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்தத் தாக்குதல்களில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மோடி தெரிவித்துள்ளார்.

“இந்த கடினமான காலங்களில் இந்தியா ஐக்கிய அரபு எமிரேட்சுடன் ஒற்றுமையாக நிற்கிறது,” “பதற்றத்தைக் குறைத்தல், பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத் தன்மையை நாங்கள் ஆதரிக்கிறோம். என்று மோடி கூறினார்.”

தெஹ்ரானில் மேலும் இரண்டு சக்திவாய்ந்த பாரிய குண்டு வெடிப்புகள்..!

0

ஈரானின் தலைநகரின் அடுக்குமாடி குடியிருப்பு ஜன்னல்களை பலத்த குண்டு வெடிப்புகள் சற்று முன்னர் உலுக்கியுள்ளன. ஈரான் நேரப்படி இரவு 9 மணியளவில் (GMT 17:30) குண்டு வெடிப்புகள் வெடித்துள்ளன.

குறித்த சம்பவத்தை ஈரானிய அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது. இலக்கு மற்றும் பாதிப்பு என்ன என்பது தொடர்பில் இதுவரைத் தெரியவில்லை.

சற்று முன்னர் ஈரானால் ஏவிய ஏவுகணைகளை இஸ்ரேலிய இராணுவம் இடைமறிக்க முயற்சி..!

0

சற்று முன்னர் ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டதை இராணுவம் அடையாளம் கண்டுள்ளதாகவும் அதன் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை இடைமறிக்க செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.

“சமீபத்திய நிமிடங்களில், உள்நாட்டு முன்னணி கட்டளை சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மொபைல் போன்களுக்கு முன் எச்சரிக்கை அறிவுறுத்தல்களை நேரடியாக அனுப்பியுள்ளது என்று அது மேலும் கூறியுள்ளது.

“பொதுமக்கள் பொறுப்புடன் இருக்கவும் அறிவுறுத்தல்களின்  படி செயல்படவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.”

error: Content is protected !!