Thursday, July 16, 2026
Huis Blog Bladsy 61

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் – ஜனாதிபதி

0

தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் (19) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

மாகாண சபைத் தேர்தல் மற்றும் புதிய அரசியலமைப்பொன்றின் அவசியம் குறித்து இதன் போது ஆராயப்பட்டதோடு, வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தொடர்ந்தும் பழைய அரசியல் தீர்வு பொருத்தமற்றது என்பதால் அதற்காக புதிய அரசியல் தீர்வை நோக்கிச் செல்ல வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு குறிப்பிட்டார். அதற்காக அனைவரின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாபதி தெரிவித்தார்.


வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நீண்ட காலமாக பிரதேச மட்டத்தில் எதிர்கொள்ளும் மீன்படி மற்றும் காணி பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் அபிவிருத்தி தேவைகள் என்பன குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.

பிரதிநிதிகள் முன்வைத்த சில பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில் தீர்வு பெற்றுக் கொடுக்குமாறு அதே சந்தர்ப்பத்தில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்


வடக்கு அபிவிருத்திக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் தமது கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டினர்.

அத்தோடு, இனவாதத்திற்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி என்ற வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இங்கு சுட்டிக் காட்டினார்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி சி.வி.கே. சிவஞானம் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். ஸ்ரீ தரன், எஸ். ராசமாணிக்கம், பி. சத்திய லிங்கம், ஜி. ஸ்ரீ நேசன்,ரீ. ரவிகரன், கே. கோடீஸ்வரன், கே. எஸ். குகதாசன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

வவுனியா மாநகர சபைக்கு எதிரான இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு..!

0

வவுனியா மாநகரசபைக்கு எதிரான இடைக்கால தடை உத்தரவு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாநகர சபையின் முதல்வர், பிரதி முதல்வர் ஆகியோர் அந்தப் பதவிகளை வகிப்பதற்கு இடைக்கால தடை உத்தரவை விதித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த மாதம் 21ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.


குறித்த வழக்கு இன்று (19.11.2025) மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் வழக்கு பிரதி மேயருக்கு எதிராக உள்ளமையால் சபை நடவடிக்கைகளை நடத்துவதற்கு அனுமதி கோரியதுடன், மேயர் மீதான இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறும் கோரினார்.


இதற்கு மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் ஆட்சேபம் தெரிவித்தனர். இவற்றை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், மனு மீதான விசாரணைகள் முடிவடையும் வரை முதல்வர் பிரதி முதல்வர் ஆகியோர் அந்தப் பதவிகளை வகிப்பதற்கு வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவினை எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது.

NPP ஆட்சியில் வடக்கில் இராணுவ முகாம் அமைக்கப்படவில்லை – செல்வம் எம்.பி

0

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலத்தில் வடக்கில் புதிதாக இராணுவ முகாம் அமைக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இராணுவ முகாம்கள் நீக்கப்பட்டது தெரியாது ஆனால் புதிய இராணுவ முகாம் அமைக்கப்படவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

“எங்கள் ஆட்சியில் வடக்கில் புதிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதா “என நாடாளுமன்றில் செல்வம் அடைக்கலநாதனிடம் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க நேற்று (18) கேள்வியெழுப்பிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


இதேவேளை நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய பிமல் ரத்நாயக்க, ”வடக்கு மற்றும் கிழக்கில் போதைப் பொருட்கள் விநியோகத்தில் காவல் துறையினரும், இராணுவத்தினருமே ஈடுபடுவதாக கஜேந்திரகுமார் கூறினார்.

ஆனால் வடக்கிலேயே அதிகளவானோர் கசிப்பு மற்றும் போதைப் பொருட்களால் பாதிக்கப்படுகின்றனர்.

அங்குள்ள தாய்மார்கள் கண்ணீர்விட்டு இதுபற்றி கூறுகின்றனர். போதைப் பொருளை ஒழிக்க இராணுவத்தினரும் காவல் துறையினரும் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.


போதைப் பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் சிலர் இருப்பதாகவும், நீதித்துறையிலும் சிலர் இருக்கலாம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

வடக்கை போன்று தெற்கிலும் போதைப் பொருட்கள் பிடிக்கப்படுகின்றது. இந் நிலையில் கஜேந்திரகுமார் போன்றோர் குறைந்தது இவ்வாறான பிரச்சினைகளில் வடக்கு மற்றும் தெற்கை இணைக்க முடியாதவர்களாக இருக்கின்றனர்.” என தெரிவித்தார்.

புலிகளின் தலைவர்களும் போதைப்பொருள் விற்றனர்; சபையில் அமைச்சர் பிமல் தெரிவிப்பு..!

0

விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த தலைவர்கள் சிலர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். வடக்கு மற்றும் கிழக்கில் போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

வடக்கு மற்றும் கிழக்கில் போதைப் பொருட்கள் விநியோகத்தில் பொலிஸாரும், இராணுவத்தினருமே ஈடுபடுவதாக கஜேந்திரகுமார் கூறினார். ஆனால் வடக்கிலேயே அதிகளவானோர் கசிப்பு மற்றும் போதைப் பொருட்களால் பாதிக்கப்படுகின்றனர்.


அங்குள்ள தாய்மார்கள் கண்ணீர்விட்டு இதுபற்றி கூறுகின்றனர். போதைப்பொருளை ஒழிக்க இராணுவத்தினரும் பொலிஸாரும் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் சிலர் இருப்பதாகவும், நீதித்துறையிலும் சிலர் இருக்கலாம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

வடக்கை போன்று தெற்கிலும் போதைப் பொருட்கள் பிடிக்கப்படுகின்றது. இந்நிலையில் கஜேந்திரகுமார் போன்றோர் குறைந்தது இவ்வாறான பிரச்சினைகளில் வடக்கு மற்றும் தெற்கை இணைக்க முடியாதவர்களாக இருக்கின்றனர்.

கஜேந்திரகுமார் போன்றவர்கள் தேசிய ஒற்றுமைக்கு பயப்படுகின்றார்கள். அவர்களின் அரசியல் நடவடிக்கைகள் இனவாதத்திலேயே தங்கியுள்ளது. முன்னர் தெற்கில் உள்ள இனவாதம் பலமாக இருந்தமையினால் அவர்களின் இனவாதம் தெரியவில்லை. எமது அரசாங்கம் இனவாதத்தில் ஈடுபடுவதில்லை. ஆனால் வடக்கில் முற்றுமுழுதாக இனவாதம் மற்றும் சாதி பேதம் என்பன இருக்கின்றன.


வடக்கே யுத்தத்தில் பாதிக்கப்பட்டு, கேரள கஞ்சாவிலும் பாதிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் வடக்கில் போதைப் பொருள் குறைவாக இருந்ததாக கஜேந்திரகுமார் குறிப்பிட்டார்.

ஏன் அவ்வாறு குறைவாக இருந்தது என்றால் யுத்த காலத்தில் இந்தியாவில் இருந்து படகில் அவை கொண்டுவரப்படவில்லை. யுத்த காலத்தில் இந்திய படகுகள் வரவில்லை. இதனாலேயே அப்போது போதைப் பொருட்களை கொண்டுவரவில்லை.

எவ்வாறாயினும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் சிலர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே. அவர்களின் இயக்க நடவடிக்கைகளுக்காக அவர்கள் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்வதற்கு நாங்கள் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். எதிர்க்கட்சிகள் இனவாதத்தை மாத்திரம் முன்னிலைப்படுத்தி செயற்படுகிறார்கள்.

திருகோணமலை சம்பவத்தை தூண்டி விட்டு அதிலும் இவர்கள் அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள் என தெரிவித்தார்.

நாம் அடிமையாக வாயை மூடி இருக்கத் தயாரில்லை – ஜோசப் ஸ்டாலின்

0

அரசாங்கம் சொல்வது போல் 2027 வரை அடிமையாக வாயை மூடி இருக்க நாம் தயாரில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வரவு செலவுத் திட்டம் மற்றும் கல்வி சீர்திருத்தம் என்பன தற்போதைய காலகட்டத்தில் மிக முக்கியமானவை. வரவு செலவு திட்டத்தை எடுத்துக் கொண்டால் அதிபர், ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பை எதிர்பார்த்தோம். 1997ஆம் ஆண்டில் இருந்து சம்பள முரண்பாடு உள்ளது. அதற்காக நாம் பல போராட்டங்களை செய்தோம்.


அந்த போராட்டத்தின் விளைவாக தான் சுபோதினி ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. அந்த குழு சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு யோசனை முன்வைத்தது. அதற்கு அமைவாக அதில் மூன்றில் ஒரு பகுதியை கொடுப்பதாக அப்போதைய அரசாங்கம் தீர்மானித்து 2022 ஆம் ஆண்டு இது வழங்கப்பட்டது. அடுத்த இரண்டு கட்டத்தை பெறுவதற்காக 2024 இல் பல போராட்டங்களை முன்னெடுத்தோம்.

அந்தப் போராட்டத்தில் தற்போதைய அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் உட்பட அதிபர் ஆசிரியர்கள் 23 பேர் உள்ளனர். அவர்களும் இணைந்து போராடினார்கள். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக ஜனாதிபதி செயலகம் முன்னாள் பெரிய போராட்டம் செய்தோம். அந்த போராட்டத்தில் தலைமையில் இருந்தவர்கள் தான் தற்போது அரசாங்கத்தில் உள்ளனர்.


மூன்றில் இரண்டு சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதிபர் ஆசிரியர்கள் உட்பட அரச உத்தியோகத்தர்களுக்கு 2027 வரை சம்பள அதிகரிப்பை வழங்கியுள்ளோம். அதற்காக 33 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

ஆகவே 2027 வரை சம்பளத்தைப் பற்றியோ சம்பள முரண்பாடு பற்றியோ பேச முடியாது. அரசாங்கம் சொல்வது போல் 2027 வரை அடிமையாக வாயை மூடி இருக்க நாம் தயாரில்லை. சம்பள முரண்பாடுகளை தீர்க்க வேண்டும். ரணில் அரசாங்கம் கட்டம் கட்டமாக தருவதாக கூறிய போதும் நாம் போராடினோம்.

ஆனால் தற்போதைய அரசாங்கம் அது பற்றி வாய் திறக்கவில்லை. எனவே நாம் சம்பள அதிகரிப்புக்காக போராட வேண்டும். எதிர்வரும் டிசம்பர் 12 ஆம் திகதி அடையாள வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

உறவினர்களை நினைவு கூரத் தடையில்லை; புலிகளை நினைவு கூர்ந்தால் சட்ட நடவடிக்கை..!

0

நாட்டில் 30 ஆண்டு காலமாக இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூர்வதற்கு எவ்வித தடையும் இல்லை. ஆனால் பயங்கரவாதிகள் நினைவு கூரப்பட்டால் அவற்றுடன் தொடர்புடையோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் ஆயிரக்கணக்கானோர் தமது உறவினர்களை இழந்துள்ளனர். இழந்த தமது உறவினர்களை நினைவு கூர்வதற்கு ஒவ்வொரு பிரஜைக்கும் உரிமையுண்டு.அதற்கு எவ்வித தடையும் இல்லை. இதனை அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் அறிவித்திருக்கிறது.

ஆனால் அந்த போர்வையில் பயங்கரவாத அமைப்பினை சார்ந்தவர்களை நினைவு கூர அனுமதிக்க முடியாது. அவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


கடந்த ஆண்டு நவம்பரில் எமது அரசாங்கம் முழுமையாக ஆட்சியைப் பொறுப்பேற்றது. அன்றிலிருந்து கடந்த ஓராண்டு காலத்துக்குள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சில குழுக்களால் இனவாதத்தைத் தூண்டுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

இனங்களுக்கிடையில் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி, நாட்டில் அமைதி, ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான சகல நடவடிக்கைககளையும் அரசாங்கம் முன்னெடுக்கும் என தெரிவித்தார்.

பிரான்ஸிலிருந்து வந்த இளம் குடும்பஸ்தர் கொலை; யாழில் நேற்றிரவு பயங்கரம்..!

0

யாழ் – வடமராட்சி கரணவாய், கூடாவளவு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்டவர் 29 வயதுடைய ராஜகுலேந்திரன் பிரிந்தன் என்றும் அவர் பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


தற்போது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

முன்னாள் எம்.பிக்களின் ஓய்வூதியம் இரத்து; சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில்..!

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்குரிய சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போதே அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு கூறினார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

தேசிய அரச பேரவையின் 1971 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை நீக்குவதற்காக 2025.06.16 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


அரச கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘வளமான நாடு- அழகான வாழ்க்கை’ எனும் தொலைநோக்குக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து இலங்கையர்களுக்கும் அரசு வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய, நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் அவர்களுடைய துணைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள ஓய்வூதிய உரித்தை இரத்துச் செய்யும் நோக்கில் நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை நீக்குவதற்காக சட்டவரைஞரால் சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்துக்குச் சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது.


இந்தச் சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்துக்காகவும் சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.” – என்றார்.

புதிய வவுச்சர் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான காலணிகள்..!

0

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு, பாதணிகளை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால் தற்போது வழங்கப்படும் வவுச்சர்கள் மூலம் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.


இந்த திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோரின் தலைமையில் பாராளுமன்ற குழு மண்டபத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது


கல்வி அமைச்சும் கைத்தொழில் அமைச்சும் இணைந்து மேற்கொள்ளும் இந்தப் புதிய கூட்டுத் திட்டத்தின் கீழ், 250க்கும் குறைவான குழந்தைகளைக் கொண்ட பாடசாலைகள், 251–500 மாணவர்களைக் கொண்ட தோட்டப் பாடசாலைகள், விசேட தேவைகள் உள்ள மாணவர்களை கொண்ட பாடசாலைகள் மற்றும் பிரிவெனா நிறுவனங்கள் கல்வி அமைச்சினால் வழங்கப்படும் வவுச்சரைப் பயன்படுத்தி உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பாடசாலை காலணிகளை வாங்க தகுதி பெறுவார்கள்.

மறைந்த தென் மாகாண ஆளுநருக்கு வடக்கு ஆளுநர் இறுதி அஞ்சலி..!

0

மறைந்த தென் மாகாண ஆளுநரின் பூதவுடலுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.


தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிசந்திர கடந்த ஞாயிற்றுக் கிழமை உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரின் பூதவுடல் காலியில் அமைந்துள்ள மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பொது அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.


இன்று அங்கு நேரில் சென்ற வடக்கு மாகாண ஆளுநர் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், உறவினர்களுக்கு தனது இரங்கல்களையும் தெரிவித்தார்.

error: Content is protected !!