Sunday, May 3, 2026
Huis Blog Bladsy 78

சும்மா, ஆ காட்ட பே காட்ட யாழ்ப்பாணம் வெற்றிலை பெட்டி இல்லை – அர்ச்சுனா எம்பி

0

சும்மா, ஆ காட்ட பே காட்ட யாழ்ப்பாணம் வெற்றிலை பெட்டி இல்லை, என நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்றைய அமர்வின் போது தெரிவித்தார்.

இந்த அரசாங்கத்தால் யாழ்ப்பாணத்தில் செய்த ஒரு அபிவிருத்தி திட்டத்தை கூறுமாறு கேட்ட அவர் யாழ்ப்பாணம் வெற்றிலை பெட்டி அல்ல என்றும் அர்ச்சுனா எம்பி ஆவேசமாக கூறினார்.

யாழ்ப்பாணம் அவரவர் வெற்றிலை பெட்டி அல்ல, வரும் நேரமும் போகின்ற நேரமும் சாப்பிடுறதுக்கு, அபிவிருத்தி செய்யப்பட்ட ஒரு வேலையை சொல்லுங்கள்,

யாழ் மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நடைபெற்றது என்று ஒரு வேலையை கூறுங்கள் என்றும், அருச்சுனா எம்பி சபையில் கேள்வி எழுப்பினார்.

பைத்தியங்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாது; அருச்சுனா எம்பிக்கு பீமல் தெரிவிப்பு..!

0

பைத்தியங்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாது என அருச்சுனா எம்பிக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நோஸ் கட் செய்த சம்பவம் இன்று நாடாளும்ன்றில் இடம்பெற்றுள்ளது.

எனக்கு பதிலளிக்க நேரத்தை தரவும் இல்லை​என்றால், குழப்பம் விளைவிக்கும் நபர்களை சபையில் இருந்து வெளியேற்றவும் என்றும் பைத்தியங்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாது என்றும் சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (26) முன்னதாக கேள்வியெழுப்பிய யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, யாழ். மாவட்டத்தில் செய்த அபிவிருத்தி திட்டங்களின் ஒன்றை கூறுமாறு கேட்டார்.

இதனிடையே அமைச்சின் அறிக்கையை வாசிப்பதற்காக, அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பெயரை, சபாநாயகர் அழைத்தார். அப்போது எதிரணியில் இருந்த சுஜீவ, கேள்விக்கு பதில் இல்லையா? எனக் கேட்டார். எனினும், சுஜீவ உங்களையும் அந்த வாட்டுக்குத்தான் அனுப்ப வேண்டும் என அமைச்சர் பிமல் கூறினார்.

மறுபுறத்தில் இருந்த சுஜீவ, எந்த வாட்டுக்கு என்று கேட்க, பின்னர் கூறுகிறேன் என்றார் பிமல், இதனிடையே எழுந்த அர்ச்சுனா, கேள்விக்கு பதில் இல்லையா? எனக்கேட்டார்.

அதற்கு பதிலளித்த சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பைத்தியங்களின் கேள்விக்கு என்னால் பதிலளிக்க முடியாது என்றும், சபையில் குழப்பங்களை ஏற்படுத்தும் நபர்களை உடனடியாக வெளியேற்றுமாறும் கேட்டுக் கொண்டார்.

கொழும்பில் காவல்துறையினரை அச்சுறுத்திய அர்ச்சுனா; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

0

கடமையில் இருந்த காவல்துறை அதிகாரியை அச்சுறுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது

அதன்படி, குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு புறக்கோட்டை காவல்துறை பொறுப்பதிகாரிக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவை கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரகே நேற்று (25.09.2025) பிறப்பித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடமையில் இருந்த கோட்டை காவல்துறை அதிகாரி ஒருவரின் கடமைகளுக்கு இடையூறு விளவைித்ததாகக் கூறி, காவல்துறையினர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இராமநாதன் அர்ச்சுனா கோட்டை காவல்துறையில் பணியாற்றும் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு எதிராக பலவந்தமாக அதிகாரத்தை பயன்படுத்தியதாகவும், மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தை மீறியதாகவும் கூறி, கோட்டை காவல்துறையினர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் B அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர்.

குறித்த சம்பவத்தின் திருத்தப்படாத காணொளிக் காட்சிகளைப் பெறுவதற்கு தொடர்புபட்ட தொலைக்காட்சி ஊடகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு செய்யப்பட்ட கோரிக்கைக்கு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரகே அனுமதி வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழில் பெண்ணின் செயலால் பரிதாபமாகப் பறிபோன இளைஞனின் உயிர்..!

0

யாழ். சாகவச்சேரி ஏ9 வீதி நுணாவில் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை இந்த விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சாவகச்சேரியில் இருந்து யாழ். நோக்கிச் சென்ற வாகனமொன்றை அதே திசையில் சென்ற உந்துருளி ஒன்று முந்திச் செல்ல முற்பட்ட வேளை இந்த விபத்து சம்பவித்துள்ளது.

முந்திச் செல்ல முற்பட்ட உந்துருளி எதிர்த் திசையில் யாழில் இருந்து சாகவச்சேரி நோக்கிச் சென்ற இளைஞர் ஒருவர் செலுத்திய உந்துருளியுடன் மோதியதில் இளைஞர் அருகில் பயணித்த வாகனத்தில் தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த பெண் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து சம்பவத்தில் மீசாலை புத்தூர் சந்தி பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் சாகவச்சேரி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஐ.நா முழுமையாக ஆதரவு..!

0

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் ஆகியோருக்கு இடையிலான நேற்று(25) சந்திப்பு இடம்பெற்றது.

நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கையின் புதிய பொருளாதார சீர்திருத்த செயல்முறையின் முன்னேற்றம், இலங்கையை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் புதிய தளத்திற்கு உயர்த்துவதற்காக அரசாங்கம் தற்போது செயல்படுத்தி வரும் செயற் திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி ஐ.நா. பொதுச் செயலாளரிடம் விளக்கினார்.

இலங்கை அரசாங்கத்தின் புதிய முற்போக்கான செயற் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை முன்னிற்பதாகவும், முழு ஆதரவையும் தெரிவிப்பதாகவும் ஐ.நா. பொதுச் செயலாளர் இதன் போது குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அநுரவின் முடிவால் மன்னார் சுடுகாடாக மாறும் – அர்ச்சுனா எச்சரிக்கை

0

காற்றாலைகளை உருவாக்குவதன் மூலம் மன்னார் பிரதேசம் ஒரு சுடுகாடாக மாறுமே அன்றி அங்கு எந்தவொரு அபிவிருத்தியும் ஏற்படாது என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“மன்னாரில் காற்றாலை அமைக்கும் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று பணிப்புரை விடுத்திருந்தார்.

இவ்விடயம் தொடர்பில் ஏற்கனவே மன்னார் மக்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசிய போது, மக்களுடன் கலந்துரையாடி தீர்மானம் எட்டப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட சென்றிருந்த அமைச்சரையும் மன்னார் மக்கள் தடுத்திருந்தனர். இவ்வாறான ஒரு சூழலில் நேற்றைய தினம் மீண்டும் காற்றாலை அமைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்ளப் போவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது.

இவ்வாறு காற்றாலைகளை உருவாக்குவதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக மன்னார் மண் அழிந்து வருகிறது. இவ்விடயத்தில் அரசாங்கம் மாபெரும் அரசியல் ஒன்றை நடத்தி வருகிறது.

மக்கள் இனியும் அவர்களை நம்பிக் கொண்டிருந்தால் மன்னார் பிரதேசம் சுடுகாடாக மாறுமே அன்றி அங்கு எந்தவொரு அபிவிருத்தியும் ஏற்படாது என தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச் செயலாளரை இன்று சந்திக்கும் ஜனாதிபதி அனுர..!

0

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கும் இடையிலான சந்திப்பு இலங்கை நேரப்படி இன்று (25) இரவு நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் பங்கேற்கவுள்ளார்.

இதற்கிடையில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தும் இன்று பல இராஜதந்திர சந்திப்புகளில் பங்கேற்கவுள்ளார்.

மாணவர்களின் பொழுதுபோக்கை ஊக்குவிக்க ரூ 5,000 நிதி – அமைச்சர் பீமல் யோசனை

0

உயர்தரப் பரீட்சைகளில் தோற்றிய மாணவர்களுக்கு பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க இன்று முன்மொழிவு ஒன்றை நாடாளுமன்றத்தில் செய்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர், மாணவர்கள் திரைப்படங்கள் மற்றும் நாடகங்களைப் பார்ப்பதற்கும், நல்ல இசையைக் கேட்பதற்கும், கடற்கரைகளைப் பார்வையிடுவதற்கும், கலாசார நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இளைய தலைமுறையினர் வயதுக்கு மாறும்போது இது ஒரு முக்கியமான படியாகும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த ஒதுக்கீடு கலாசார மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படக் கூடாது என்றும் சபை முதல்வர் பரிந்துரைத்துள்ளார்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடாதிருக்க மின்சார சபையின் தொழிற் சங்கங்கள் தீர்மானம்..!

0

இலங்கை மின்சார சபையின் தொழிற் சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதில்லை என அறிவித்துள்ளன.

தொழிற்சங்க நடவடிக்கையில் பங்கேற்கும் அனைத்து தொழிற் சங்கங்களும் இன்று (24) பிற்பகல் நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க குறித்த தொழிற் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிக்கும் திட்டத்திற்கு எதிராக, மின்சார தொழிற் சங்கங்கள் பல நாட்களாக சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மல்லாகம் நீதவான் நீதிமன்ற பெண் நீதவான் சுபராஜினி பதவி நீக்கம்..!

0

யாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்ற கௌரவ நீதிவான் சுபறாஜினி ஜெகநாதன் இன்றைய தினம் (24) நீதிச் சேவை ஆணைக்குழுவால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

error: Content is protected !!