Monday, September 15, 2025
Huis Blog Bladsy 82

ஜனாதிபதி அனுரவின் “க்ளீன் ஶ்ரீலங்கா” தேசிய வேலைத் திட்டம் இன்று ஆரம்பம்..!

0

புதிய வருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கவுள்ள முதல் நாளான இன்று (01.01.2025) அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ வைபவம் இடம் பெறவுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சின் செயலாளரின் ஊடாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு, அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டவாக்க பேரவை தலைவர்களுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய வருடத்தில் “க்ளீன் ஶ்ரீலங்கா” (தூய்மையான இலங்கை) தேசிய வேலைத் திட்டத்துடன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச துறை மற்றும் தனியார் துறையினரால் முன்னெடுக்கப்படும் “க்ளீன் ஶ்ரீலங்கா” (தூய்மையான இலங்கை) வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (01.01.2025) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம் பெறவுள்ளது.

கொழும்பு பிரதான நீதவானாக தனுஜா லக்மாலி நியமனம்..!

0

கோட்டை நீதவானாகச் செயற்படுகின்ற தனுஜா லக்மாலி கொழும்பு பிரதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினூடாக இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு பிரதான நீதவானாக செயற்பட்ட திலின கமகே மொராட்டுவை மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது கல்கிஸ்ஸை நீதவானாகச் செயற்படும் நிலுபுலி லங்கா கோட்டை நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் மொரட்டுவை மேலதிக நீதவான் சத்துரிக்கா சில்வா கல்கிஸ்ஸை நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திலின கமகேயின் சகோதரர் அண்மையில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடைய வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில் அவர் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!