Sunday, May 3, 2026
Huis Blog Bladsy 81

ஓமந்தையில் ரயிலுடன் விபத்து; கால் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி..!

0

ஓமந்தையில் நேற்று இரவு (22) ரயில் மோதி ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் இரவு 11.15 மணியளவில் வவுனியா -ஓமந்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு புறக்கோட்டை நோக்கி பயணித்த ரயில் மோதி குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த நபர் இடது கால் துண்டிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஆளுநரின் கூட்டத்தில் ரீசேட் அணிந்து வந்த வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்..!

0

வட மாகாண ஆளுநர் தலைமையில் மத்திய அரசின் பிரதி அமைச்சர்கள், அமைச்சர்களின் செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள் பங்கு பற்றிய கூட்டத்தில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன் அவர்கள் ஒழுங்கு விதிகளை கடைப்பிடிக்காது ரீசேட் அணிந்து கூட்டத்தில் பங்குபற்றியுள்ளார்.

ஏலவே வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தொடர்பில் பழிவாங்கல்களில் ஈடுபடுகின்றமை, அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றமை உள்ளிட்ட பல்வேறு முறைபாடுகள் காணப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த தினத்தில் சிவசேனை அமைப்பினரால் அமைச்சுக்கு முன்னால் அமைதி வழி ஆர்ப்பாட்டமும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறிப்பாக தன்னை சந்திக்க வரும் ஆசிரியர்கள் சேலை அணிந்து வராவிட்டால் திருப்பி அனுப்பும் செயலாளர் பற்றிக் டிறஞ்சன், ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆடை ஒழுங்குகளை கடைப்பிடிக்காமல் நடந்து கொண்டமை உயரதிகாரிகளை வேண்டுமென்றே அவமானப்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டதா என எண்ணத் தோன்றியுள்ளது.

போதைப் பொருள் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு வெகுமதி – காவல்துறை மா அதிபர்

0

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தரைப்பகுதியில் அதிக தொகையான ஐஸ் போதைப்பொருள் தங்காலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

தங்காலையில் இன்று முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதலின் போது, கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களும், விற்பனையாளர்களும், அதன் பின்னணியிலிருந்து செயற்படுவோருக்கு மகிழ்ச்சியடைய முடியாததொரு சூழலை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களுக்கு எதிராக எடுக்கக் கூடிய சகல நடவடிக்கைகளையும் நாம் எடுத்துள்ளளோம்.

முன்னதாக மாத்தறையில் கைப்பற்றப்பட்ட 394 கிலோகிராம் போதைப்பொருளே இன்றுவரை தரைவழி சோதனையில் சிக்கிய அதிக தொகையான போதைப்பொருளாக இருந்தது.

அதன்பின்னர் முதல் முறையாக தரைவழி சோதனையில் இன்று 635 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில், எந்தவொரு போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் அடைக்கலம் வழங்க எந்த வகையில் நடவடிக்கை எடுக்கப்படாது என உறுதியளிப்பதாகவும் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெற்றிகரமான போதைப்பொருள் சுற்றி வளைப்புகளை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகளுக்கும், போதைப்பொருட்கள் தொடர்பில் பயனுள்ள தகவல்களை வழங்கும் பொது மக்களுக்கு காவல் துறையினால் வெகுமதிகளும் வழங்கப்படும் எனவும் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

சற்று முன்னர் அமெரிக்கா பயணமானார் ஜனாதிபதி அநுர..!

0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன்னர் அமெரிக்கா நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காகவே அவர் நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

இந்த விஜயத்தின் போது புதன்கிழமை (24) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் அவர் உரையாற்ற உள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்பார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இணைந்து கொள்வார்.

திருமண உறவில் குறுக்கிடும் மூன்றாம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்..!

0

திருமண உறவில் குறுக்கிடும் மூன்றாவது நபரிடம் நஷ்டஈடு கோரி, பாதிக்கப்பட்ட வாழ்க்கைத் துணைவர் வழக்குத் தொடரலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லியில் தனது கணவரின் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், தங்கள் திருமண வாழ்வில் தெரிந்தே தலையிட்டதாகக் கூறி, பெண் ஒருவர் தனது கணவரின் சக ஊழியரிடம் இருந்து 4 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஏற்கனவே தம்பதிகளுக்கு இடையே விவாகரத்து வழக்குகள் குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், இதுபோன்ற நஷ்டஈடு கோரும் தனி உரிமையியல் வழக்கை தனியாகத் தொடரலாம் என்று சட்டத்தில் இடம் இருப்பதால், பாதிக்கப்பட்ட மனைவி உயர் நீதிமன்றத்தை நாடினார்.

இவ்வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘கணவன் அல்லது மனைவியின் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் ஈடுபடும் மூன்றாவது நபர் மீது, பாதிக்கப்பட்ட வாழ்க்கைத் துணைவர் (கணவர் அல்லது மனைவி) நஷ்டஈடு கோரி உரிமையியல் வழக்குத் தொடரலாம் எனத் தீர்பளித்துள்ளது.

திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு என்பது குற்றச் செயல் அல்ல என உச்ச நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. தற்போது, அது குற்றமாகாது என்றாலும், அதுவே தம்பதிகளுக்கு இடையிலான திருமண முறிவுக்கு காரணமாக அமையும் பட்சத்தில், அதனால் ஏற்படும் சட்டரீதியான பாதிப்புகளுக்கு இழப்பீடு கோர முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் திருமண உறவில் வேண்டுமென்றே, தவறான நோக்குடன் தலையிடும் மூன்றாவது நபருக்கு அவ்வாறு செய்யாமல் இருக்க வேண்டிய கடமை உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது செயலால் திருமணம் முறிந்தால், நஷ்டஈடு கோருவது செல்லும். அதே சமயம், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் ஈடுபட்ட கணவன் அல்லது மனைவியின் செயல்பாடு, எந்தவித வற்புறுத்தலும் இன்றி முற்றிலும் தன்னிச்சையானதாக இருந்தால், மூன்றாவது நபர் மீது நஷ்டஈடு கோர முடியாது’ என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விவாகரத்து வழக்குகளில், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவை நிரூபிக்க, கணவன் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த பெண்ணின் தொலைபேசி அழைப்பு விவரங்கள் மற்றும் இருப்பிடத் தகவல்களை மனைவி கோரலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த ஓகஸ்ட் மாதம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு கல்வி அதிகாரிகளுக்கு நீதிமன்றம் மூலம் பாடம் புகட்டிய யாழ் மகளிர் கல்லூரி..!

0

பிள்ளைகளுக்கு நீதியை நேர்மையை நடுநிலையை போதிக்க வேண்டிய கல்வி அதிகாரிகள் ஏதும் அறியாத பிள்ளைகளின் திறமைகளில் விளையாடிய நிலையில் அவர்களுக்கு நீதிமன்றம் தக்க பாடத்தை புகட்டியுள்ளது.

மாகாண மட்ட தமிழ்த்தினப் போட்டி நிகழ்ச்சியில் பக்கசார்பாக நடந்து கொண்டமை தொடர்பாக வடக்கு மாகாண உயர் நீதிமன்றத்தால் வடக்கு மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மூவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த வழக்கு செலவினை செலுத்த வேண்டும் எனவும் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி விடயம் தொடர்பாக தெரிய வருவதாவது,

மாகாண மட்ட தமிழ்த்தினப் போட்டியில் சங்கீத போட்டியில் வேம்படி மகளிர் கல்லூரி இரண்டாம் இடத்தினை பெற்றுக் கொண்டதுடன் ஹாட்லி கல்லூரி முதல் இடத்தினை பெற்றுக் கொண்டதாகவும் நடுவர் குழுவினால் அறிவிக்கப்பட்டது.

எனினும் சுற்றுநிருபத்தில் குறிப்பிட்டபடி ஹாட்லி கல்லூரி மாணவர்கள் பாடிய பாடலில் பதவர்ணம் காணப்படாததால் குறித்த போட்டியில் இருந்து அவர்களை தகுதி நீக்கம் செய்து தமக்கு முதல் இடம் தரப்படல் வேண்டும் என்று வேம்படி மகளிர் கல்லூரி அதிபரால் மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு மேன்முறையீடு செய்யப்பட்டது .

எனினும் போட்டி மேன்முறையீட்டு சபையால் குறித்த மேன்முறையீடு எவ்வித நடுநிலையான விசாரணைகளும் இன்றி நிராகரிக்கப்பட்டது.

ஹாட்லி கல்லூரி சார்பாக பங்குபற்றிய அணியில் வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் கடமை புரியும் இரண்டு பிரதிக் கல்விப் பணிப்பாளர்களின் பிள்ளைகள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவரின் பிள்ளை பங்கு பற்றியமையால் தான் இவ்வாறான பக்கச் சார்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதா என்ற சந்தேகம் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எழுந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோரினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை தொடங்கிய நாள் முதலே தமது பிழைகளை மறைக்க பல முயற்சிகளை மாகாணக் கல்வி அதிகாரிகள் மேற்கொண்டனர்.

எனினும் சட்டத்தரணிகள் வாதத்தால் நீதிமன்றம் மாகாணக் கல்வி அதிகாரிகளின் செயற்பாடுகள் பக்கசார்பாக காணப்படுவதாக தனது தீர்ப்பில் கூறியதுடன் இனிவரும் காலங்களில் மாணவர் சார்பாக நடைபெறும் எந்த போட்டி நிகழ்ச்சிகளிலும் இவர்கள் பணியாற்ற கூடாது எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்ததுடன் வழக்கு செலவு யாவும் இவர்களால் செலுத்தப்படல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

எனவே மேற்படி விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்து எதிர்வரும் காலங்களில் மாணவர்கள் போட்டிகளில் பக்கசார்பான தீர்மானங்களை மேற்கொள்வது தடைசெய்வதற்கான பொறிமுறை ஏற்படுத்தப்படல் வேண்டும்.

மேலும் நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற அதிகாரிகளுக்கு எதிராக அரச நிர்வாக விதிகளுக்கு அமைய தண்டனை வழங்கப்படல் வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பெற்றோர் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

ஊழலுக்கு எதிரான ஆட்சியிலும் வடக்கில் காப்பாற்றப்படும் ஊழல்வாதிகள்..!

0

யாழில் அமைந்துள்ள வடமாகாண கல்வி அமைச்சுக்கு முன்னால் சிவசேனை அமைப்பினரினால் இன்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

வடக்கு மாகாண கல்வியில் இடம்பெறும் முறைகேடுகள், ஊழல் மோசடிகள், பழிவாங்கல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை உடன் மாற்ற வேண்டும் என கோரியும் யாழ். முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள வடமாகாண கல்வி அமைச்சுக்கு முன்னால் சிவசேனை அமைப்பினரால் இன்றையதினம் (22) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் கிளிநொச்சி சென் தெரேசா பாடசாலைக்கு நியமிக்கப்பட்ட அதிபர் உரிய தகுதி நிலைகளுடன் காணப்படாத நிலையில், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அதேவேளை கிளிநொச்சியில் சில பாடசாலைகளுக்கு இன்னும் நிரந்தர அதிபர் நியமிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது. இந் நிலையில் சென் தெரேசா பாடசாலைக்கு மட்டும் அதிபர் ஓய்வு பெற்று இரு நாட்களில் உரிய தரத்தை பூர்த்தி செய்யாத அதிபரை நியமித்தமை தொடர்பில் தமது கண்டனங்களை தெரிவித்தனர்.

இன்றைய போராட்டத்திற்கு உரிய பதில் உடன் கிடைக்கப்படாத பட்சத்தில் வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும், கொழும்பில் கல்வி அமைச்சு, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னும் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

யாழில் சிவசேனையின் போராட்டத்தை குழப்ப ஊழல்வாதிகளால் முன்னெடுத்த முயற்சி முறியடிப்பு..!

0

யாழில் அமைந்துள்ள வடமாகாண கல்வி அமைச்சுக்கு முன்னால் சிவசேனை அமைப்பினரின் போராடத்தை குழப்ப வந்தவர்கள் பொலிஸாரால் விரடியடிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாண கல்வியில் இடம்பெறும் முறைகேடுகள், ஊழல் மோசடிகள், பழிவாங்கல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை மாற்ற வேண்டும் என கோரியும் யாழ். முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள வடமாகாண கல்வி அமைச்சுக்கு முன்னால் சிவசேனை அமைப்பினரால் இன்றையதினம் (22) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் கிளிநொச்சி சென் தெரேசா பாடசாலைக்கு நியமிக்கப்பட்ட அதிபர் உரிய தகுதி நிலைகளுடன் காணப்படாத நிலையில், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அதேவேளை கிளிநொச்சியில் சில பாடசாலைகளுக்கு இன்னும் நிரந்தர அதிபர் நியமிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது. இந் நிலையில் சென் தெரேசா பாடசாலைக்கு மட்டும் அதிபர் ஓய்வு பெற்று இரு நாட்களில் உரிய தரத்தை பூர்த்தி செய்யாத அதிபரை நியமித்தமை தொடர்பில் தமது கண்டனங்களை தெரிவித்தனர்.

கிளிநொச்சியில் இருந்து “கப்” ரக வாகனத்தில் வருகை தந்த குழு ஒன்று தெரேசா பாடசாலையின் அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் என தங்களை அறிமுகப்படுத்தி, சிவசேனை அமைப்பின் போராட்டப் பந்தலுக்கு சென்று குழப்பம் விளைவித்தனர்.

இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து அருகில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட பொலிஸார் குழப்பம் விளைவித்த நபர்களை விரட்டியடித்தனர்.

இன்றைய போராட்டத்திற்கு உரிய பதில் உடன் கிடைக்கப்படாத பட்சத்தில் வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

அரச நிறுவனங்கள் மக்களுக்கானதேயன்றி ஊழியர்களுக்கானதல்ல – ஜனாதிபதி

0

நாட்டின் வலுசக்தி இறையாண்மையை அரசாங்கம் எப்போதும் பாதுகாத்து வருவதாகவும், எந்தவொரு சூழ்நிலையிலும் மின்சாரத் துறையை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (22) நடைபெற்ற மின்சாரத் துறையில் புதிய மறுசீரமைப்புகள் குறித்த முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தேசிய பாதுகாப்பு மற்றும் இறைமைக்காக வலுசக்தி இறையாண்மையை உறுதி செய்வது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும், மின்சாரத் துறையின் நிறுவனக் கட்டமைப்பில் உள்ள குழப்ப நிலையைத் தீர்த்து, முறையான நிறுவனக் கட்டமைப்பை உருவாக்குவதே அரசாங்கத்தின் தேவை என்றும் அவர் தெரிவித்தார்.

மின்சாரத் துறையின் செயல்திறனை அதிகரிப்பதன் மூலம் புதிய மாற்றத்திற்கு ஒரு புதிய நிறுவனக் கட்டமைப்பு அவசியம் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக பழைய கட்டமைப்பு இனிமேலும் போதுமானதாக இல்லை என்றும், புதிய கட்டமைப்பின் அவசியத்தை யாரும் மறுக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

தற்போது வகிக்கும் பதவிகள் அல்லது வேதன அளவுகள் எந்த வகையிலும் குறைக்கப்படாமலும், பதவி உயர்வுக்கு செல்வதற்கு நிலவிய தடைகளை நீக்கும் வகையில் செயற்படல், அனைத்து ஊழியர் உரிமைகளையும் பாதுகாத்தல், புதிய நிறுவன கட்டமைப்பில் இலங்கை மின்சார சபையாக இருந்த அனைத்து உரிமைகளையும் உறுதி செய்தல், புதிய நிறுவன கட்டமைப்பில் உள்வாங்கப்படும்போது இலங்கை மின்சார சபையாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளைத் தீர்த்தல், வலுசக்தி இறையாண்மையைப் பாதுகாத்தல் மற்றும் அதை முழுமையாக அரசுக்குச் சொந்தமான நிறுவனமாக மாற்றுவது ஆகிய கோட்பாடுகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நிறுவனங்கள் அதன் ஊழியர்களுக்காக அன்றி, நாட்டிற்காகவும் பொதுமக்களுக்காகவும் உள்ளன என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மிகவும் செயற்திறனுடம், தொடர்ச்சியாகவும், நியாயமான விலையிலும் நுகர்வோரின் மின்சாரத் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தால், அது அரசாங்கத்திற்கும் ஊழியர்களுக்கும் கிடைத்த வெற்றியாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கம் எப்போதும் தயாராக இருப்பதாகவும், இலங்கை மின்சார சபையில் நடப்பது நீண்டகால நிறுவன கட்டமைப்பை புதிய நிறுவன கட்டமைப்பாக மாற்றுவது மாத்திரமேயாகும்.

இது விற்பனையோ, அரச உரிமையை கைவிடுவதோ அல்லது வலுசக்தி இறையாண்மையை கைவிடுவதோ அல்ல என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஒக்டோபர் – டிசம்பர் காலப்பகுதிக்குள் மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு..!

0

ஒக்டோபர் முதல் டிசம்பர் மாத காலப்பகுதிக்குள் மின்சார கட்டணம் 6.8 சதவீதத்தால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை மின்சார சபை தற்போது நட்டத்தில் இயங்குவதாகக் கூறி, மின்சாரக் கட்டண உயர்வுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையினால் 7.2 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பாதிப்படைய உள்ளனர்.

இதுவரை இந்த காலாண்டில் மின்சார சபைக்கு 7.83 பில்லியன் ரூபாய் நிதிச் செலவுகள் ஏற்பட்டு உள்ளன.

இது கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது 2.48 பில்லியன் ரூபாயால் அதிகரித்துள்ளது.

அதற்கமைய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தற்போது மக்களின் கருத்துக்களையும் பெற்றுக் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!