Thursday, April 16, 2026
Huis Blog Bladsy 151

மின் கட்டண குறைப்பை நடைமுறைப்படுத்தாமல் இருக்க அரசு முயற்சி..!

0

மின் கட்டணத்தை குறைப்பதற்கான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சுயாதீனமான தீர்மானத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடைமுறைப்படுத்தாமலிருக்க முயற்சிக்க கூடாதென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின் கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைப்பதற்கு தீர்மானித்திருக்கிறது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு என்பது அரசாங்கமோ அல்லது மின்சக்தி அமைச்சரோ அல்லது ஜனாதிபதியோ அல்ல.

இதற்கு முன்னர் இலங்கை மின்சாரசபை முன்வைத்த பரிந்துரையில் ஒரு சதவீதம் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என்றும், அதனால் எந்த பயனும் இல்லை என்பதால் கட்டணத்தை குறைக்காமல் இருப்பதே சிறந்தது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மின்சாரசபையின் இவ்வாறான பரிந்துரைக்கு மத்திலேயே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கட்டண குறைப்பை அறிவித்துள்ளது. மின்சக்தி அமைச்சும் மின்சார சபையின் நிலைப்பாட்டிலேயே இருந்தது.

ஆனால் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மக்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமையளித்து இந்த தீர்மானத்தை எடுத்திருக்கிறது.

எனவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 20 சதவீதத்தால் மின் கட்டணத்தைக் குறைத்துள்ளதாக பெருமை தேட முற்படக்கூடாது.

மின் கட்டணத்தைக் குறைக்குமாறு மின்சக்தி அமைச்சர் உட்பட எவரும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் பரிந்துரைக்கவில்லை.

இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாமலிருப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு எந்தவொரு செயற்பாட்டிலும் ஈடுபட வேண்டாம் என அரசாங்கத்தை எச்சரிக்கின்றோம். என்றார்.

இன்றைய இராசி பலன்கள் (19.01.2025)

0

மேஷம்
இன்று உங்கள் தன்னம்பிக்கை, திறமை திறன் அதிகரிக்கும். நுண்கலை, கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் நல்ல சந்தோஷ தருணங்கள் ஏற்படும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7

ரிஷபம்
இன்று வருங்காலத்திற்குத் தேவையான முதலீடுகளை அதற்குண்டான நபர்களிடம் ஆலோசனைகள் செய்து முதலீடுகள் செய்வீர்கள். பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும். காரிய அனுகூலம் கிட்டும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5

மிதுனம்
இன்று உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற பிரதிபலன் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் நன்மை நடக்கும். சிலருக்கு இடமாற்றம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் நடக்கும். உடன்பணிபுரிவோரால் அனுகூலம் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 5

கடகம்
இன்று பணத்தேவைகள் பூர்த்தியாகும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். குறுகிய பயணங்கள் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி. நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 3

சிம்மம்
இன்று உங்கள் வாக்கு வன்மை கூடும். உங்கள் பேச்சிற்கு மதிப்பு கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பர். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செயல்படவும். தைரியத்தை இழக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கன்னி
இன்று குடும்பத்தில் இருந்த வந்த மந்த நிலை மாறி உற்சாகம் துளிர்விடும். உங்களது வார்த்தைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். வரவுக்கு மேல் செலவு இருந்த நிலைமையும் மெல்ல மெல்ல மாறும். படிப்பில் மிகுந்த கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

துலாம்
இன்று அனுகூலமான செய்திகள் தேடி வரும். நீண்ட தூர பிரயாணங்களில் இருந்த சுணக்க நிலை மாறும். வழக்குகளில் வெற்றி கிட்டும். பெண்களால் பெருமை சேரும். உங்கள் விடாமுயற்சிக்கு வெற்றிகளை குவிப்பீர்கள். அலுவலகத்தில் கௌரவமும் செல்வாக்கும் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

விருச்சிகம்
இன்று நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் மிகச் சாதுர்யமாக கையாளுவீர்கள். உங்களது யோசனைகளை மற்றவர்கள் கேட்டும் அனுசரித்தும் செல்வார்கள். உங்களை உதாசீனப் படுத்தியவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள். எதையும் ஆலோசனை செய்து முடிவெடுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

தனுசு
இன்று பொதுநலக் காரியங்களுக்குச் செலவு செய்வீர்கள். திட்டமிட்ட வேலைகளைத் தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை, சில நேரங்களில் உருவாகலாம். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்று நடத்த நல்வாய்ப்பு உருவாகும். இதனால் மனதில் இருந்த காரணமில்லாத வருத்தங்களும், குழப்பங்களும் மறையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

மகரம்
இன்று மனதில் இருந்த காரணமில்லாத வருத்தங்களும், குழப்பங்களும் மறையும். பணநடமாட்டம் சீராக இருந்து வரும். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை சிலருக்கு ஏற்படும். தம்பதிகளுக்குள் ஒவ்வொருவரால் அனுகூலம் ஏற்படும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். கூட்டுத் தொழிலில் ஈடுபாடு உள்ளவர்கள் அதிகம் லாபம் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

கும்பம்
இன்று தங்களது முழு திறனையும் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம். குழந்தைகள் நலன் சிறக்கும். பிள்ளைகள் நன்றாக படிப்பர். அவ்வப்போது நோய்கள் வந்து மருத்துவம் பார்த்து சரியாகும். கணவன் – மனைவியிடையே கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

மீனம்
இன்று உற்பத்தி சார்ந்த தொழிற்துறையாளர்களுக்கு தொய்வு இன்றி தொழில் நடைபெறும். வாகனங்கள், மற்றும் இயந்திரங்களை பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு பகீரதப் பிரயத்தனம் செய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிறிது முயற்சி செய்வதன் மூலம் சிறந்த வாய்ப்புகள் கைகூடும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீடிக்க அரசு சதியா? எழுந்துள்ள சந்தேகம்..!

0

அறுகம்பை பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக கிடைத்த தகவல் குறித்து விசாரணை செய்து வரும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு, தற்போது இந்த விடயம் தொடர்பாக கூடுதல் தகவல்களைக் கண்டறிந்துள்ளது.

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வந்து செல்லும் அறுகம்பை சுற்றுலாப் பகுதியை குறிவைத்து, சிறைச்சாலைக்குள் இருந்து பயங்கரவாதத் தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு நேற்று (17) நீதிமன்றத்தில் தெரிவித்தது.

குறித்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயங்கரவாத சதித்திட்டம் தொடர்பாக ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த விசாரணை அதிகாரிகள்,

விடுதலைப் புலிகளின் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு பல ஆண்டுகள் சிறையிலிருந்து பின்னர் விடுவிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதாகக் கூறியுள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அருகம்பையில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்த சந்தேகநபர்கள் திட்டமிட்டிருந்ததாகவும், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் சுற்றுலாப் பகுதியின் வீடியோ மற்றும் புகைப்படங்களைச் சேகரிக்க ஆட்களை நியமிக்கப்பட்டிருந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயங்கரவாத புலானாய்வு அதிகாரிகள் நேற்று யோகராஜா நிரோஜன், சுரேஷ் ரஞ்சன மற்றும் டபிள்யூ.ஏ.தொன் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதற்கிடையில், இந்த பயங்கரவாத சதியின் முதல் சந்தேகநபரான பிலால் அஹமட், 2008 ஆம் ஆண்டு கெஸ்பேவா டிப்போவில் பேருந்து மீது குண்டுவெடிப்புத் தாக்குதலை நடத்தியதாக சிறையில் உள்ள ஆனந்தன் சுகதரனுடன் சிறையில் தொடர்பு கொண்டிருந்ததாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி ரஜிந்த கந்தேகெதர, முதலாவது சந்தேக நபரிடமிருந்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அல்லது பொலிஸார் பல ஆவணங்களில் கையொப்பங்களைப் பெற்றுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அப்போது, ​​சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதிலிருந்து நீதிமன்றம் அவர்களைக் கண்காணித்து வருவதாக நீதவான் தெரிவித்தார். சந்தேக நபர்களைக் கண்காணிக்கச் சென்ற போது, அவை குறித்து அவர்கள் ஒருபோதும் முறைப்பாடு அளிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

அதன்படி, இரு தரப்பினரும் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் கிடைக்கும் வரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை காலம் தாழ்த்த முயன்றால் மீண்டும் நீதிமன்றம் செல்வோம்..!

0

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை காலம் தாழ்த்த முயன்றால் மீண்டும் நீதிமன்றம் செல்வோம் என பெப்ரல் அமைப்பு எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீதிமன்றத்தில் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டாலன்றி, உள்ளூராட்சிமன்றத் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை.

எனவே புதிய வேட்புமனுவைக் கோருவதற்கு 23ஆம் திகதி வரை நீதிமன்றத்தில் ஆட்சேபனை தெரிவிக்கப்படாவிட்டால் சட்டத்தை நிறைவேற்றி ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தலை நடத்த வேண்டும்.

அவ்வாறில்லை என்றால் மீண்டும் நீதிமன்றத்தை நாட வேண்டியேற்படும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

பெப்ரல் அமைப்பு உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தை நாடி தீர்ப்பையும் பெற்றுக் கொண்டுள்ளது. எவ்வாறிருப்பினும் பழைய வேட்புமனுக்கமைய தேர்தல் நடத்தப்பட்டால் அதில் சிக்கல்கள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர்.

அதற்கமைய பழைய வேட்புமனுவை இரத்து செய்து, புதிய வேட்புமனுவைக் கோரி அதற்கமைய தேர்தலை நடத்துவதற்கு அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் புதிதாக சுமார் நான்கரை இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு தமது வாக்குகளைப் பயன்படுத்த முடியும்.

அதேபோன்று உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் 25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.

இதுகுறித்த சட்ட மூலம் கடந்த 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 23ஆம் திகதி வரை இதற்கான ஆட்சேபனைக் காலமும் காணப்படுகிறது.

எனவே ஏப்ரல் முதல் வாரத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறும் என்று நம்புகின்றோம் என்றார்.

மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள கைது..!

0

மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த வியாழக்கிழமை இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் நேற்று (18) மன்னார் நடுக்குடா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இராணுவத்தில் பனியாற்றிய நபர் எனவும் முன்னுக்கு பின் முரணாக கருத்துக்களை தெரிவித்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கபட்ட போதிலும், இந்த விடயம் தொடர்பிலும் கைது தொடர்பிலும் மன்னார் காவல்துறையினர் உறுதிப்படுத்தாத நிலையே காணப்படுகின்றது.

இதேவேளை, நேற்றைய தினம் கைது நடவடிக்கை இடம் பெற்ற போதிலும் அது தொடர்பில் எந்தவொரு ஊடக வெளியீட்டையும் மேற்கொள்ளாத காவல்துறையினர், சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் தெரியப்படுத்துமாறு கோரி இன்றைய தினம் சந்தேக நபர் தொடர்பான ஓவியம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

தொடர்சியாக விசாரணைகள் குறித்து உண்மை தன்மையை வெளிப்படுத்தாத நிலையில், தற்போது சந்தேக நபர் என்ற அடிப்படையில் ஓவியம் ஒன்றையும் வெளியிட்டுள்ள நிலையில் மக்கள் மத்தியில் சம்பவத்தின் பின்னணி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

வறுமை மாணவர்களின் கல்விக்கு ஒருபோதும் தடையில்லை – வடக்கு ஆளுநர்

0

வறுமை மாணவர்களின் கல்விக்கு ஒருபோதும் தடையாக அமைந்து விடக்கூடாது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் தேவையுடைய 217 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, யாழ் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் சா.சுதர்சன் தலைமையில் இன்று (16) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார்.

அவர் கருத்து தெரிவிக்கையில்,

கல்வி வாழ்க்கைக்கு முக்கியமானது. கல்வியில்லாதவர்கள் இரண்டு கண்களும் இல்லாதமைக்கு சமனானவர்கள். நான் யாழ். மாவட்டச் செயலராக இருந்த காலத்தில் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் என்னை சந்திக்க வந்திருக்கின்றார்கள். பிள்ளைகள் கற்பதற்கு ஆர்வமாக இருந்த போதும் அவர்களுக்கு சீருடைகள், கற்றல் உபகரணங்கள் இல்லாமல் இருக்கின்றன.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் கல்வியைக் கைவிடக் கூடாது. வறுமையிலிருப்பவர்களுக்கு உதவுவதற்கு எமக்கு எந்தவொரு சுற்றறிக்கைகளும் தடையாக இருக்கப் போவதில்லை. நாம் சரியானதை சரியாகச் செய்தால் எதற்கும் பயப்படதேவையில்லை.

இன்று உங்களுக்கான கற்றல் உபகரணங்களை அவர் பெற்றுத் தந்திருக்கின்றார். வறுமையைப்போக்க அவர் எடுக்கும் நடவடிக்கைகள் சிறப்பானவை.

கல்வியில் சிறந்த நிலைக்கு நீங்கள் வருவதே, இன்று நீங்கள் பெற்றுக் கொள்ளும் உதவிக்கு பிரதியுபகாரமாக அமையும். அவ்வாறு உயர்ந்த நிலைக்கு வந்து ஏனையவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

கடினமாக உழைத்தால் எதையும் செய்ய முடியும். உங்களால் முடியும் என்று நினைத்து எதையும் செய்யுங்கள். நீங்கள் வெற்றியடைந்தவர்களாக மாறலாமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரவிகரன் எம்.பி உள்ளிட்டோர் கைதான வழக்கு; மூவரும் ஆஜராகத் தேவையில்லை..!

0

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக வன்னிநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் உள்ளிட்ட மூவரும் நீதிமன்றால் அழைப்பு விடுக்கும் வரை ஆஜராகத் தேவையில்லை என முல்லைத்தீவு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை இந்தவழக்குடன் தொடர்புடைய ஆஜராகாத நபர்களை மன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிசாருக்கு நீதிமன்றுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு 16ஆம் திகதி வியாழக்கிழமை விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

குருந்தூர்மலையில் கடந்த 2022.06.12 அன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மக்களோடு கலந்து கொண்டமைக்காக தொல்லியல் தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் கரைதுறைப்பற்று பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர் இ.மயூரன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் வழக்கிலக்கம் பி1053/22 என்னும் குறித்த வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில், நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் 16ஆம் திகதி வியாழக்கிழமை, விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

அந்தவகையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் இ.மயூரன் உள்ளிட்ட மூவர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

இந் நிலையில் வழக்கினை ஆராய்ந்த நீதவான், மன்றில் ஆஜராகிய மூவரும் நீதிமன்றால் அழைப்பு விடுக்கும்வரை, நீதிமன்றில் ஆஜராகத் தேவையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த வழக்குடன் தொடர்புடைய ஆஜராகத் தவறியோரை நிதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றால் பொலிசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணையின் போது பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மூவருக்கும் ஆதரவாக நீதிமன்றிற்கு வருகை தந்த அனைத்து சட்டத்தரணிகளும் முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதி திறன் மோட்டார் சைக்கிள்களை வீதிகளில் பயன்படுத்த முடியாது..!

0

அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் மீதான விதிமுறைகளை சிறிலங்கா காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. அரசாங்கத்தின் இரண்டு முக்கிய வர்த்தமானிகளை மேற்கோள்காட்டி இந்த தெளிவூட்டல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அதிகபட்சமாக 450 சிசி எஞ்சின் கொள்ளளவுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், ஏப்ரல் 11, 2013 அன்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில், விளையாட்டு மற்றும் பயிற்சி நோக்கங்களுக்காக மாத்திரம் 450 சிசி முதல் 1001 சிசி வரையிலான எஞ்சின் கொள்ளளவு கொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், அந்த மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய பாதுகாப்பு அமைச்ச மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் சிறப்பு ஒப்புதல் தேவை என காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, ஒப்புதல் செயல்பாட்டின் போது, ​​விண்ணப்பதாரர் மோட்டார் போக்குவரத்துத் துறைக்கு கூடுதல் கட்டணம் செலுத்தி மோட்டார் சைக்கிளைப் பதிவு செய்ய வேண்டும்.

இந்த நிலையில், மோட்டார் சைக்கிளைப் பதிவு செய்யும் போது, ​​மோட்டார் சைக்கிள்களை பொது வீதிகளில் பயன்படுத்த முடியாது, ஆனால் பந்தயப் பாதைகளுக்கு மட்டுமே என்று ஒரு நிபந்தனை அதன் பதிவுப் புத்தகத்தில் சேர்க்கப்படும் என்று காவல்துறை மேலும் சுட்டிக் காட்டியுள்ளது.

இன்றைய இராசி பலன்கள் (16.01.2025)

0

மேஷம்

இன்று தாய் வழியில் இருந்த பிரச்சனைகள் அகன்று சந்தோஷம் பிறக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகள் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுப்பர். குழந்தைகளின் கல்யாண தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

ரிஷபம்

இன்று தைரியமாக பீடு நடை போட்டு உங்கள் வேலைகளை செய்வீர்கள். வெப்பம் சம்பந்தபட்ட உடல் உபாதைகள் ஏற்படலாம். கவனம் தேவை. தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். மனைவி வழியில் உள்ள உறவினர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மிதுனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் பெருகும். உறவினர்கள் வகையில் நிலவி வந்த பிரச்சனைகள் அனைத்தும் அடியோடு மறையும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

கடகம்

இன்று முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது. வேலையில் இருந்த பளு கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். அதில் இருந்து வந்த சுணக்க நிலையும் மாறும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

சிம்மம்

இன்று தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு. கவனம் தேவை. பிள்ளைகள் படிப்பில் மிகுந்த கவனம் தேவை. குழந்தைகள் இல்லாதவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும். அவர்களை கடிந்து கொள்ள வேண்டாம். எடுத்து சொல்லுங்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3

கன்னி

இன்று தாயார் தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் குறையும். வீடு, மனை, வாகனம் யோகம் அமையும். நெடுநாளாக இந்த விஷயத்தில் இருந்த வந்த சுணக்க நிலை மாறும். பிள்ளைகளின் மேல் கவனம் வைக்க வேண்டிய நேரம் இது. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6

துலாம்

இன்று குடும்பத்தில் மிகவும் நல்ல நிகழ்ச்சிகள் நடைபெற்று சந்தோஷ தருணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி தனவரவுகள் வந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும். தாய் மற்றும் தாய் வழி உறவினர்களால் மூலம் பாசம் அன்பு பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6

விருச்சிகம்

இன்று உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும். சுபகாரியங்கள் வெகு லகுவாக கூடி வரும். விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கை கொடுப்பார்கள். புதிய வீட்டிற்கு செல்வது சிறிது தள்ளிப் போகலாம். பிள்ளைகள் உயர்கல்வி செல்வதற்குண்டான வேலைகளை ஆரம்பிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

தனுசு

இன்று சகோதர, சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை வளரும். அவர்களுடன் சேர்ந்து இனிய பயணங்களைச் செய்வீர்கள். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். உடல் நலம் சீராகும். வருமானம் சிறப்பாக இருக்கும். உங்களின் பெருந்தன்மையை அனைவரும் பாராட்டுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

மகரம்

இன்று சிலர் தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். கலைஞர்கள் சீரான நிலையில் இருப்பார். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலங்களை விட அதிகம் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கும்பம்

இன்று பணப்புழக்கம் கடந்த காலங்களை விட அதிகம் இருக்கும். வெளிநாட்டு பயணங்கள் கிடைக்க கூடும். வேலை இடமாற்றம், பதவிஉயர்வு ஏற்படும். சம்பள உயர்வும் கிடைக்கும். லாபகரமான முதலீடுகள் செய்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மீனம்

இன்று வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழிற்சாலைகள் வைத்திருப்போருக்கு நல்ல லாபம் கிடைக்கும். பொதுவான விஷயங்களில் தலையிடுவோருக்கு உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் ஆமோதிப்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மின்சாரம் துண்டிப்பு..!

0

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மின்சாரம் இன்று (15) துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன் அங்கு பாதுகாப்பாக குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட முடியாத நிலைக்குச் செல்லுமா என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மின்சார கட்டணம் செலுத்தப்படாத நிலையில் இன்று காலை (15) மின்சார சபை ஊழியர்களால் குறித்த அலுவலகத்துக்கான மின் துண்டிக்கப்பட்டது.

இதன் காரணமாக அங்கு மின்சாரம் தடைப்பட்டதோடு மின் பிறப்பாக்கி மூலம் மின்சாரத்தை வழங்குவதற்கு ஏதுவான சூழல் காணப்படாமையினால் மின் பிறப்பாக்கி மூலமாகவும் மின்சாரம் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் அங்கு கர்ப்பிணித் தாய்மார் மற்றும் சிறுவர்களுக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த ஊசிகள் சில குளிரூட்டிகளில் வைக்க வேண்டிய நிலைமை காணப்டுகின்றது.

இந்நிலையில் மின் துண்டிக்கப்பட்டமையினால் அவை பழுதடைந்து விடுமா என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுத்து குறித்த தடுப்பூசிகளைப் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்து அலுவலகத்திற்கான மின் கட்டணம் நீண்ட காலமாக செலுத்தப்படாமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பிலும் உரிய அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!