Saturday, June 27, 2026
Huis Blog Bladsy 17

இன்றிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் இல்லை..!

0

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ஒழிப்பதற்கான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் கிடைத்தன.

அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ஒழிப்பதற்கான சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு இன்று (17) நாடாளுமன்றத்தில் 152 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார,

இன்றைய தினம் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ரத்து செய்யப்படவுள்ளது. இதன்படி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதிய கொடுப்பனவு இனி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரையில் ஓய்வூதியம் பெற்றுக் கொண்ட தொகைகள் மீள அறவீடு செய்யப்படும் என சிலர் வதந்திகளை கிளப்பி வருகின்றனர். எனினும் இதுவரையில் செலுத்தப்பட்ட தொகைகள் எதுவும் மீள அறவீடு செய்யப்படாது.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போலவே தற்பொழுது நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கும் ஓய்வூதியம் கிடையாது.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஓய்வு பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்று கோடியே 44 லட்சம் ரூபாய் ஓய்வூதிய கொடுப்பனவே வழங்கப்பட்டுள்ளது.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் இவ்வாறு ஓய்வூதியம் பெற்றுக் கொள்வது நியாயம் இல்லை என்பதே தமது நிலைப்பாடு” என அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

மிகைஊழியர் அதிபர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேள்விகளை முன்வைத்த ரவிகரன் MP..!

0

இடமாற்றம் மற்றும் நிர்வாக கொடுப்பனவுகளில் உள்ள மட்டுப்படுகளால் மிகை ஊழியர் அடிப்படையில் நியமனஞ்செய்யப்பட்ட அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவின் பதிலுக்காக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் சமர்ப்பிக்கப்பட்ட கேள்விகள் வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் 17.02.2026இன்று நாடாளுமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த கேள்விகளுக்கான பதிலை வழங்குவதற்கு இன்னும் இரண்டுவார கால அவகாசத்தை வழங்குமாறு சபாநாயகரிடம் பிரதமர் ஹரிணி அமரசூரிய கோரியுள்ளார்.

குறித்த மிகை ஊழியர் அடிப்படையில் நியமனஞ்செய்யப்பட்ட அதிபர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பான கேள்விகளை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடந்த 22.08.2025ஆம் திகதியன்று நாடாளுமன்றில் சமர்ப்பித்தார்.

இந்நிலையில் கடந்த 02.12.2025 அன்று நாடாளுமன்ற சபை அமர்வில் குறித்த கேள்விக்கான பதில் வழங்கப்படுமென நாடாளுமன்ற அறிவித்தல்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. இருப்பினும் அப்போது “தித்வா” அனர்த்தத்தினால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் குறித்த தினத்தில் இந்தக்கேள்விக்கான பதில்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை.

இத்தகைய சூழலில் குறித்த கேள்விகள் 17.02.2026 இன்று பாராளுமன்ற சபை அமர்வில் வாய்மூல விடைக்கான வினாநேரத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தக் கேள்விகளுக்கான பதிலை வழங்குவதற்கு இன்னும் இரண்டுவாரம் கால அவகாசத்தைக் கோரியுள்ளார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் கடந்த 2025ஆம் ஆண்டில் மாத்திரம் துறைசார்ந்த அமைச்சர்களிடம் கேட்பதற்கென 30கேள்விப் பத்திரங்கள் பாரளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் சமர்ப்பிக்கப்பட்டு துறைசார் அமைச்சர்களால் நாடாளுமன்றில் பதில் வழங்குவதற்காக இதுவரை ஏழு கேள்விப்பத்திரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

அவற்றில் ஐந்து கேள்விப் பத்திரங்களுக்கான பதில்கள் துறைசார் அமைச்சர்களால் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன.

மேலும் மிகை ஊழியர் அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிபர்கள் எதிர்நோக்கும் சிக்கல் தொடர்பான இந்தக் கேள்விக்கு பதில்வழங்குவதற்கு தற்போது இரண்டு வாரகால அவகாசம் கோரப்பட்டுள்ளது.

அதேவேளை ஏற்கனவே பகுதியளவில் கட்டப்பட்டு கட்டி முடிக்கப்படாத பாடசாலைக் கட்டடங்கள் தொடர்பான கேள்வியும் இதேபோல் இரண்டு முறை எடுக்கப்பட்டு இவ்வாறு இரண்டு வார கால அவகாசம் கோரப்பட்டுள்ளதோடு, மூன்றாவதும் இறுதியுமான முறையாக அடுத்த சபை அமர்வில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பெப்.4 கறுப்புக் கொடிப் போராட்டம் பிரிவினைவாதம் அல்ல – அரசாங்கம்

0

இலங்கையின் சுதந்திர தினத்தன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட கறுப்புக் கொடிப் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, நாட்டில் பிரிவினைவாதம் மீண்டும் உருவாவதாகக் கூறி மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோருவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் மற்றும் அரசுக்கு எதிரான அமைப்புகள் இது தொடர்பில் விடுத்துள்ள கோரிக்கைகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த 4 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற கறுப்புக் கொடிப் போராட்டங்கள் ஒரு ஜனநாயக நாட்டில் நிலவும் கருத்துச் சுதந்திரத்தின் அங்கமே தவிர, அவை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவோ அல்லது பிரிவினைவாதத்தின் மீள் எழுச்சியாகவோ கருதப்பட வேண்டியதில்லை. இத்தகைய போராட்டங்களை மிகைப்படுத்தி அரசியலாக்குவது தேவையற்ற செயலாகும்.

மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவது அரசின் நோக்கமல்ல. எனினும், தேர்தலை நடத்துவதற்குத் தேவையான எல்லை நிர்ணயப் பிரச்சினைகள், சட்ட ரீதியான சிக்கல்கள் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவற்றைச் சீர்செய்வதில் அரசு தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகின்றது. முறையான சீர்திருத்தங்கள் இன்றி தேர்தலை நடத்துவது மேலதிகக் குழப்பங்களையே ஏற்படுத்தும்.

எதிர்க்கட்சிகளும் அரசுக்கு எதிரான அமைப்புகளும் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை உருவாக்கி, அதன் மூலம் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றன. பிரிவினைவாதத்தைக் காரணமாகக் காட்டித் தேர்தல் கோருவது ஆரோக்கியமான அரசியல் கலாசாரம் அல்ல. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசு எப்போதும் விழிப்புடன் உள்ளது.” என்றார்.

யுத்த முடிவின் பின்னரும் மக்களிடத்தில் இதுவரை நிலைபெறாத அமைதி – பிரதமர்

0

யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கடந்த பிறகும், மக்களின் இதயங்களுக்கு அமைதி முழுமையாக வந்துள்ளதா என்பது இன்னும் ஒரு கேள்வியாகவே உள்ளது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட மகளிர் கூட்டத்தில் உரையாற்றும் போது பிரதமர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் தனது கருத்துக்களைத் தெரிவித்த பிரதமர், பொது மக்களிடம் கலந்தாலோசிக்காமல் போர் தொடங்கப்பட்டாலும், அதன் விளைவாக எழுந்த இனவெறி மற்றும் வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

போரின் போது மக்களைப் பிரித்து நாட்டில் அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் இன்றும் மிகவும் வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் நிலையில், அன்று பிளவுபட்ட சாதாரண மக்கள் இன்றும் துன்பப்படுகிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் இனவெறிக்கு எதிராக வலுவான போராட்டத்தை நடத்தி வருகிறது, அப்படியிருந்தும், சில அரசியல் சக்திகள் இன்னும் அதிகாரத்தைப் பெறுவதற்கான ஒரே வழியாக இனவெறி மற்றும் முரண்பாடுகளை உருவாக்க முயற்சிப்பதாக பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார்.

“அவர்கள் ஊழலை ஒழிக்க விரும்பவில்லை, ஜனநாயகத்தை உருவாக்க விரும்பவில்லை, அவர்களுக்கு சட்டம் அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்படுவது முக்கியமல்ல. மக்களின் பொருளாதாரத்தைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை,” என்றும் பிரதமர் ஹரிணி கூறியுள்ளார்.

மேலும், அவர்களுக்கு மக்களுக்கு சேவை செய்ய அதிகாரம் தேவையில்லை, மாறாக சொந்த வாழ்க்கையை வளப்படுத்த மட்டுமே அதிகாரம் தேவை என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், மக்களிடையே மீண்டும் முரண்பாடுகளை உருவாக்க இதுபோன்ற சக்திகளின் முயற்சிகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை; வெளியான விசேட அறிவிப்பு..!

0

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கு, பரீட்சையின் நேர அட்டவணை குறித்து விசேட அவதானம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

ஆரம்பமாகவுள்ள பரீட்சை தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் உள்ள நேர அட்டவணையை மாத்திரம் பின்பற்றுமாறு வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டை விட இம்முறை சாதாரண தரப் பரீட்சையின் ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது மற்றும் எட்டாவது நாட்களுக்கான பாடங்களின் வரிசை முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், சரியான நேர அட்டவணையை மாத்திரம் பயன்படுத்துமாறு இந்திகா குமாரி லியனகே மேலும் குறிப்பிட்டார்.

நாளை காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளதுடன், பரீட்சார்த்திகள் பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக நிலையங்களுக்குச் செல்ல வேண்டும்.

அத்துடன், பிற்பகல் நேரப் பரீட்சைகள் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், பரீட்சார்த்திகள் மதியம் 12.30 மணிக்குள் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தர வேண்டும் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

பாதகமான கிவுல் ஓயாத் திட்டம்; மக்களுக்கு விளிப்பூட்டுவது தொடர்பில் கலந்துரையாடல்..!

0

மகாவலி அதிகாரசபையின் (எல்) வலயத்தினால் செயற்படுத்தப்படவுள்ள தமிழர்களுக்குப் பாதகமான கிவுல் ஓயா நீர்த்தேக்க குடியேற்றத் திட்டம் தொடர்பில் தெளிவூட்டல்களை வழங்கி, தமிழ் மக்களை விளிப்படையச் செய்வது தொடர்பான கலந்துரையாடலொன்று 15.02.2026நேற்று முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றிருந்தார்.

அந்தவகையில் முல்லைத்தீவு ஊடக அமையத்தின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலானது, மறைந்த ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தியின் நினைவேந்தலுடன் ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து கிவுல் ஓயாத் திட்டத்தின் பாதக நிலை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், தமிழ் மக்களுக்கு கிவுல் ஓயாத் திட்டத்தின் பாதக நிலைதொடர்பில் தெளிவூட்டி விளிப்படையச் செய்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

மேலும் இக் கலந்துரையாடலில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சிரேஷ்ட ஊடகவியலாளர் அ.நிக்சன், முல்லைத்தீவு ஊடக அமையத்தைச் சார்ந்த ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெடுக்குநாறி ஆலய சிவராத்திரி விழா எவ்வித தடையுமின்றி இடம்பெற வேண்டும்..!

0

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இவ்வருடம் சிவராத்திரி விழா எவ்வித தடையுமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என இன்று (13.02.2026) நடைபெற்ற வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தார்.

அத்துடன் குறித்த ஆலயத்திற்கான காணி மற்றும் பாதை விடுவிப்பு தொடர்பில் தன்னால் வடக்கு மாகாண ஆளுனருக்கும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கும் கடிதம் மூலம் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக ஆளுனரால் பிரதேச செயலாளரிடம் அறிக்கை கோரப்பட்டது. பல மாதங்கள் கடந்தும் அந்த அறிக்கை அனுப்பப்படவில்லை. ஏன் அது அனுப்பப்படவில்லை எனவும் கேள்வியெழுப்பியிருந்தார்.

விரைவில் அறிக்கையினை சமர்ப்பிப்பதாக பிரதேச செயலாளர் பதிலளித்திருந்தார்.

ரமணா விஜயகாந் பாணியில் களமிறங்கிய வைத்தியர் திலகநாதன் எம்பி..!

0

இன்றைய தினம் வவுனியா வடக்கு பிரதேசத்திற்கான பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்றது.

இன்றைய கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஆசிரியர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், வைத்தியர் திலகநாதன், வைத்தியர் சத்தியலிங்கம், துரைராசா ரவிகரன் ஆகியோர் உட்பட திணைக்களத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கலந்துரையாடலின் போது வவுனியா வடக்கு பிரதேசத்தின் கல்வி நிலை தொடர்பான கேள்வியை எழுப்பிய வைத்தியர் திலகநாதன் அவர்கள், கடந்த வருடம் வெளியாகிய சாதாரண தரப் பரீட்சையின் அடிப்படையில் வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் நிலை தொடர்பிலும், வவுனியா வடக்கின் கல்வி அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் குறித்த துறையுடன் தொடர்புடைய அதிகாரியிடம் கேள்வியெழுப்பியிருந்தார்.

எனினும் உரிய முன் ஆயத்தம் ஏதுமின்றி வருகை தந்திருந்த அதிகாரி வழமையாக சமாளிக்கும் வழியில் கருத்துக்களை பொதுவாக தெரிவித்திருந்த நிலையில், வெகுண்டெழுந்த பாராளுமன்ற உறுப்பினர் வவுனியா வடக்கு வலயம் 100 வலயங்களில் 96வது இடத்தில் இறுதி நிலையில் இருப்பதாகவும் பரீட்சை எழுதிய 561 மாணவர்களில் கணிதம், தமிழுடன் 263 மாணவர்களே சித்தியடைந்துள்ளதாகவும் கூறிய போது குறுக்கிட்ட கல்வி அதிகாரி தாங்கள் கூறுவது பிழையென வாதிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பகுப்பாய்வு அறிக்கையை அனைவருக்கும் காட்டி வவுனியா வடக்கில் மொழி, கணிதம் இல்லாது 561 மாணவர்களில் 298 (53%) மாணவர்களின் கல்வி உரிமை மட்டுமன்றி அவர்களின் எதிர்காலம் முழுமையாக அழிக்கப்பட்டு கூலித் தொழிலாளர்களாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். உண்மை ஆதாரங்களுடன் வெளிப்பட்டதால் மேலும் கதைக்காது குறித்த அதிகாரி அமைதியாகி விட்டார்.

அதுமட்டுமன்றி மேலும் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் திலகநாதன் அவர்கள், ஆசிரியர்களை பதிலால் இன்றி விட்டமை தவறு, அதன் முழுப் பொறுப்பும் வலயக் கல்விப் பணிப்பாளரையே சாரும், இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் வலயக் கல்விப் பணிப்பாளருக்கே உண்டு என்பதை மீள ஞாபகமூட்டினார்.  இதனால் குறித்த அதிகாரியால் மேலும் எதுவும் கூற முடியாத நிலை ஏற்பட்டது.

எனினும் நிலையையும், நேரமுகாமைத்துவத்தையும் கருத்தில் கொண்டு மேலதிக விடயங்களை மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் கதைப்போம் என சக பாராளுமன்ற உறுப்பினரான மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் அவர்கள் கூறியதற்கு இணங்க குறித்த விடயம் நிறைவுக்கு வந்தது.

அதன் பின்னர் வெடுக்குநாறி சிவராத்திரி விழா ஏற்பாடுகள் உட்பட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு நிகழ்வு நிறைவுக்கு வந்தது.

கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் சிறப்பு அங்காடி திறந்து வைப்பு..!

0

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட சிறப்பு அங்காடி 11.02.2026 இன்று முல்லைத்தீவு நகரில் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த திறப்பு விழா நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், உபாலி சமரசிங்க, செல்லத்தம்பி திலகநாதன், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் ஆகியோர் பங்கறே்றிருந்தனர்.

இணைந்து பணியாற்ற நாம் தயாராகவே இருக்கின்றோம்; வவுனியாவில் சத்தியலிங்கம் எம்.பி தெரிவிப்பு..!

0

மக்களுக்கு நன்மை பயக்கும் விடயங்களில் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம் என வவுனியாவில் இன்று இடம்பெற்ற கூட்டமொன்றின் போது தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சத்தியலிங்கம் அவர்கள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க அவர்களுக்கு தெரிவித்திருந்தார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் விசேட மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று (10.02.2026) வவுனியாவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்கா மற்றும் கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் மாவட்டத்தில் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் மற்றும் துறைசார் திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார். அவர் தெரிவித்திருந்தவையாவது,

வவுனியாவில் 6 இடங்களில் வீதி சமிச்சை விளக்குகள் பொருத்த அமைச்சரிடம் திட்ட முன்மொழிவொன்றை சமர்ப்பித்திருந்தேன். அதற்கான அனுமதி வழங்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் இடம்பெற்ற அமைச்சுசார் ஆலோசனைக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் சில இடங்களில், குறிப்பாக வைத்தியசாலை சுற்றுவட்டம், மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டம், பள்ளிவாசல் சந்தி ஆகிய இடங்களில் உடனடியாக அவற்றினை அமைப்பது சாத்தியமில்லை எனவும் வீதி அகலப்படுத்தல் செய்தபின்னரே அவற்றை செய்யமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இவ்வருட ஒதுக்கீட்டில் எ9 பாதையின் 176ம் மைல் டக்கம் 179ம் மைல் வரை வீதி அகலப்படுத்தல் மேற்கொள்ளப்படவிருப்பதால் குறித்த இரு இடங்களிலும் வீதி சமிச்சை விளக்குகளை பொருத்தக் கூடியதாக இருக்கும்.

தற்போது வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன்னால் பொருத்தப்பட்டுள்ள வீதி சமிச்சை விளக்கு பொருத்தமற்றதாகவுள்ளதாக உள்ளதால் அந்த இடத்தில் பொருத்தமான நடவடிக்கை எடுக்கும்படி கோரினார்.

பண்டாரவன்னியன் சதுக்க சந்தியிலும் குருமண்காடு சந்தியிலும் வீதிச்சமிச்சை விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்தார்.

வவுனியா நகரில் காணப்படும் வடிகால்கள் குப்பைகள் நிறைந்து நீர் வழிந்தோட முடியாது காணப்படுகின்றது. யார் இதனை துப்பரவு செய்வது என்பதே இதற்கு காரணமாகும். இது நீண்டகாலமாக காணப்படும் பிரச்சினை. தயவுசெய்து இன்று இதற்கு ஒரு தீர்வு தாருங்கள் என கேட்டார்.

இதனையடுத்து நீண்ட வாதப் பிரதிவாதங்களின் பின்னர், இதற்கு பதிலளித்த அமைச்சர் குறித்த வடிகால்களை துப்பரவு செய்யும் பொறுப்பு உள்ளூராட்சி மன்றங்களுக்கு உரியதெனவும், அவற்றை திருத்தம் செய்யும் பொறுப்பு குறித்த திணைக்களங்களுக்குரியதெனவும் தெரிவித்திருந்தார்.

வவுனியா பல்கலைக்கழகத்தில் கற்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பலர் அதனை அண்டிய பகுதிகளில் வசிக்கின்றனர். தினமும் நடந்தே அவர்கள் பல்கலைக்கழகம் வருகின்றார்கள். ஆகவே அவர்கள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்வதற்காக பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள பகுதியில் நடைபாதை அமைக்க வேண்டியுள்ளது. அவ்வாறு அமைக்கும் பட்சத்தில் விபத்துக்களையும் குறைக்கமுடியும். இது தொடர்பில் அதிக கரிசனை செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் குறித்த விடயம் தொடர்பில் உயர்கல்வி அமைச்சுடனும் பேசி நிதியொதுக்கீடு மேற்கொண்டு இத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது.

வவுனியாவில் பல இடங்களில் பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் காணப்படுகின்றன. அங்கே காணப்படும் சமிச்சை விளக்குகள் பழுதடைந்து காணப்படுகின்றன. ஒழுங்காக வேலை செய்வதில்லை. பல இடங்களில் வீதியை மறிக்கும் கதவுகளும் இல்லை.

குறிப்பாக தாண்டிக்குளம் சந்தியில் காணப்படும் கடவையில் உள்ள சமிச்சை விளக்கு புகையிரதம் வராத பல நேரங்களில்கூட ஒலி,ஒளி எழுப்பும் பிரச்சினையும் காணப்படுகின்றது. ஆகவே நீண்டகாலமாக நிலவும் இதுபோன்ற பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.

விசேட தேவைக்குட்பட்டவர்கள் தமக்கு சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள அதற்கான மருத்துவ அறிக்கையினை பெறுவதற்கு மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதுதொடர்பில் நிலையான மற்றும் இலகுவாக திட்டமொன்று வகுக்கப்பட்டு அவர்கள் மருத்துவ அறிக்கை பெறுகின்ற விடயம் இலகுபடுத்தப்பட வேண்டும்.

49 சீ.சி மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் அவற்றை பதிவு செய்து உரிமமும் பெறமுடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் உரிமம்பெற ஆவன செய்யப்படல் வேண்டும் என கோரினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் அவ்வாறான மோட்டார் சைக்கிள்கள் சட்டத்திற்கு புறம்பான முறையில் உதிரிப் பாகங்களாக கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்டதாகவும் அம்மோட்டார் சைக்கிள்களுக்கு உரிமம் பெற முடியாதெனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!