Thursday, March 5, 2026
Huis Blog Bladsy 16

யாழில் மார்பின் நடுவில் குத்திய tattooவால் மாப்பிளை விவாகரத்து செய்ய முடிவு..!

0

யாழில் கடந்த நவம்பர் மாதம் மிகவும் சிறப்பாக திருமணம் நடைபெற்று சந்தோசமாக இருந்த புதுமணத் தம்பதிகள் தற்போது எலியும் பாம்புமாக மாறியுள்ளார்கள்.

குறித்த மணமகள் தனது மார்பின் நடுப்பகுதியில் குத்திய tattooவே இதற்கு காரணம் எனத் தெரிய வருகின்றது.

திருமணமாகி சில நாட்களிலேயே கணவர் இதனை கண்டு பிடித்தள்ளார். அதன் பின்னர் தனது மனைவியை குறித்த tattoo ஏன் குத்தப்பட்டது, யார் மூலமாக குத்தினாய் என கேட்டு தொல்லைப்படுத்தி வந்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரி மாணவியான குறித்த மணமகள் அங்கு கற்கும் போது சில மாணவிகளுடன் சேர்ந்து அழகுகலை நிலையத்தில் குறித்த tattooi வை குத்தியதாக கூறியதுடன் அந்த tattoo பச்சை மயில் தோகையுடன் காணப்படும் அழகிய உருவமாக இன்னுமொரு மாணவியிடம் காணப்பட்டதால் அதனைப் பார்த்தே தானும் அவ்வாறு குத்தியதாக கூறியும் கணவன் சமாதானம் அடையவில்லை எனத் தெரிய வருகின்றது.

மற்றைய மாணவிகளையும் tattoo குத்திய அழகுகலை நிலையத்தையும் தனக்கு காட்டும்படி கூறியதால் கடுப்பான மனைவி கணவனை கண்டபடி ஏசியதுடன் இது தொடர்பாக தனது சமூக வலைத் தளத்திலும் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

இதனால் கடும் கோபமடைந்த கணவன் தற்போது மனைவியை விவாகரத்து செய்வதற்கு முற்பட்டுள்ளதுடன் அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தெரிய வருகின்றது.

மதுரோ உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்; அமெரிக்காவுக்கு வெனிசுலா எச்சரிக்கை..!

0

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாகத் தற்போதைய உப ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை நியமித்து வெனிசுலா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெனிசுலா மீது நேற்று திடீர் தாக்குதலை மேற்கொண்ட அமெரிக்கா, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைச் சிறைப்பிடித்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தியுள்ளது.

இதனையடுத்து, வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் எனவும், தமக்குச் சாதகமான அரசாங்கம் அமையும் வரை அமெரிக்க இராணுவம் அங்கு நிலை கொண்டிருக்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தையடுத்து வெனிசுலாவில் அவசரகால நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ட்ரம்பின் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என சீனா, ரஷ்யா, பிரேசில், கியூபா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பன கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், வெனிசுலா உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ், அந்நாட்டு அரச தொலைக்காட்சியில் முன்னிலையாகி நாட்டு மக்களுக்கு விசேட உரையாறினார்.

“வெனிசுலாவின் ஒரே ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மட்டுமே. அவரை அமெரிக்கா உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும். எமது நாட்டு மக்களைப் பாதுகாக்க அனைத்துப் பாதுகாப்புப் படைகளையும் நாம் தயார் நிலையில் வைத்துள்ளோம்,” என அவர் இதன்போது தெரிவித்தார்.

வெனிசுலாவில் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிகஸ் நியமனம்..!

0

வெனிசுலாவில் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிகஸை நியமித்து அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெனிசுலாவின் தொடர்ச்சியான நிர்வாகத்திற்கும், விரிவான பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிப்பதற்காக துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிகஸை இடைக்கால ஜனாதிபதியாக நியமித்து அந்நாட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெனிசுலாவிலிருந்து போதைப் பொருள் கடத்தப்பட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நீண்ட காலமாகக் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை நேற்று (3) அமெரிக்க படை கைது செய்தது.

இதனையடுத்து, வெனிசுலாவின் துணை ஜனாதிபதி இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வெனிசுலாவில் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை இலவச இணைய சேவை..!

0

வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள அதிரடி அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், அந்நாட்டு மக்களுக்கு இலவச இணைய சேவையை வழங்குவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க படைகள் அதிரடியாகக் கைது செய்து நியூயோர்க்கிற்கு கொண்டு சென்றுள்ள நிலையில், அங்கு நிலவும் தகவல் தொடர்புக் குறைபாடுகளை நீக்க ‘ஸ்டார்லிங்க்’ மூலம் பெப்ரவரி 3-ஆம் திகதி வரை இலவச இணையம் வழங்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தல் வழக்குகளுக்காக அமெரிக்க நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ள நிலையில், வெனிசுலாவின் நிர்வாகத்தை சீரமைக்கும் வரை அமெரிக்கா அந்நாட்டை வழிநடத்தும் என டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

பத்தாண்டுகால மதுரோவின் ஆட்சி அமெரிக்காவின் நேரடி இராணுவ நடவடிக்கையின் மூலம் முடிவுக்கு கொண்டுவரப் பட்டுள்ளமை உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எம்.பிக்களின் ஓய்வூதியம் இரத்து; வர்த்தமானி வெளியானது..!

0

தேசிய அரசுப் பேரவையின் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியங்கள் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான, பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய, இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அப்பா டீசல் வாகனத்திற்கு மண்ணெண்ணை ஊற்றி ஓடுவார்; 4 வயது மகனின் வாக்குமூலம்..!

0

அண்மையில் அலுவலகம் ஒன்றில் ஒளிவிழா நடைபெற்றுள்ளது. குறித்த அலுவலக ஒளிவிழாவுக்கு தமது பிள்ளைகளையும் அலுவலர்கள் கொண்டு வந்துள்ளார்கள். அந்த அலுவலகத்தில் வாகனம் ஒன்றின் சாரதியாகக் கடமையாற்றும் ஒருவரும் தனது மகனை ஒளிவிழாவுக்கு அழைத்து வந்துள்ளார்.

அங்கு வந்த மகன் அங்குள்ள அலுவலர்களுடன் மிகவும் சகஜமாகப் பழகத் தொடங்கியுள்ளார். அதன் பின்னர் அங்குள்ள அலுவலர்களுக்கு தனது அப்பாவின் வீரதீரப் பிரதாபங்களை கூறியுள்ளார்.

வீட்டில் தன்னுடன் சேர்ந்து அப்பா டான்ஸ் ஆடுவார் என கூறத் தொடங்கிய மகன் தனது அப்பா வீட்டில் மண்ணெண்ணை வாங்கி வைத்துள்ளதாகவும் அந்த வாகனத்தை (வெளியில் நின்ற அரச வாகனத்தைச் சுட்டிக் காட்டி) கொண்டு வந்து வீட்டில் மண்ணெண்ணை விட்டுவிட்டே ஓடுவதாகவும் கூறியதால் அலுவலர்கள் சிலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குறித்த சாரதி அலுவலகத்தில் சிலருடன் முரண்பட்டு வந்ததால் மகனின் கூற்று அங்குள்ள சிலருக்கு தேன் போல் பாய்ந்துள்ளது. மகனை அவர்கள் மீண்டும் மண்ணெண்ணை விட்டு ஓடுவது தொடர்பாக கூறச் செய்து அதனை வீடியோவாகப் பதிவு செய்து திணைக்களத் தலைவருக்கு அனுப்பியுள்ளதாகத் குறித்த அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் திணைக்களத்தலைவரிடமிருந்து எந்தவித அசுமாத்தமும் காணப்படவில்லை என குறித்த அலுவலகத் தரப்புக்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவளை வடக்கில் கல்வியுடன் தொடர்புடைய சில திணைக்களங்களில் உத்தியோகபூர்வ வாகனம் உள்ள நிலையிலும் அதனைப் பயன்படுத்தாது தமது சொந்த வாகனங்களை மேலதிகாரியின் அனுமதியுடன் இணைத்து எரிபொருள் மோசடி இடம்பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இன்றைய இராசி பலன் (04.01.2026)

0

மேஷம்

இன்று குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்கள் குடும்பத்தில் ஒற்றுமையற்ற நிலைகளால் நிம்மதி குறையும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நிலவும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

ரிஷபம்

இன்று வழக்குகளை தள்ளிப் போடுவதும் சமாதான முறையில் பேசி தீர்த்துக்கொள்வதும் நல்லது. தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமையில் பிணக்குகள் வராது. புதிய வீடு கட்டும் திட்டம் நிறைவேறும். தடைப்பட்ட ஆலயத் திருப்பணிகள் தடையின்றி முடியும். வியாபாரிகள் எதிர்பார்த்தபடி விற்பனை, லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

மிதுனம்

இன்று கலைத்துறையினருக்கு டென்ஷன் உண்டாகலாம். உடன் இருப்பவர்களிடம் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம் விட்டு பேசுவது நல்லது. எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும். தொழிலதிபர்கள் புதிய தொழிற்சாலை நிறுவும் திட்டம் நிறைவேறும். உங்களை எதிர்த்துத் தொழில் செய்தவர்கள் உங்களைக் கண்டு மிரண்டு ஓடுவார்கள். வெளிநாட்டில் தொழில் துவங்க இருந்த தடைகள் விலகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கடகம்

இன்று எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. அரசியல்துறையினர் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். வீண் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும். குடும்பத்தில் பிரிந்து சென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். முதியோர்களால் வைத்தியச் செலவுகள் வரலாம். பிள்ளைகளின் உயர்கல்வி எண்ணம் ஈடேறும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

சிம்மம்

இன்று அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. சக மாணவர்களுடன் நிதானமாக பேசி பழகுவது நன்மை தரும். மாணவர்கள் உற்சாகமாகப் படிப்பார்கள். புதிய வழிகாட்டுதல்கள் கிடைக்கும். பெண்கள் விரும்பிய ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள். அடகுபோன நகைகளையும் மீட்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

கன்னி

இன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். முயற்சிகள் வெற்றிபெறும். எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வது நல்லது. எல்லா காரியங்களிலும் அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும், மாறுதலும் கிட்டும். காவல்துறை, நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும். வியாபாரிகள் திட்டமிட்டபடி நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

துலாம்

இன்று மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விறுவிறுப்படையும். மந்த நிலை மாறும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று கல்வி நிறுவனத்தாரின் பாராட்டைப் பெறுவார்கள். தொழிலாளர்கள் ஒற்றுமையால் தொழிலதிபர்களின் லாபம் கூடும். உற்பத்தி பெருகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

விருச்சிகம்

இன்று கூட்டு வியாபாரம் திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடந்து கொள்வது நல்லது. பணவரத்து திருப்தி கரமாக இருக்கும். மேலிடத்தின் கனிவான அனுசரனையால் சந்தோஷம் கொள்வீர்கள். வாழ்க்கை துணை மூலம் லாபம் கிடைக்கும். மனதில் இருந்த சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்க பெறுவீர்கள். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் போது கவனம் தேவை. வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

தனுசு

இன்று குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். கூடவே மனதில் ஒருவித கவலையும் இருந்து வரும். வாழ்க்கை துணையுடன் எதையும் பேசி தீர ஆலோசித்து செய்வது நன்மை தரும். பிள்ளைகள் அன்பு செலுத்துவார்கள். ஆனால் அவர்களுக்காக செலவு செய்ய நேரிடும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் செலுத்துவார்கள். நீண்ட நாளைய நண்பரைப் பிரிய வேண்டி வரலாம். அனைத்து சங்கடங்களும் விலகி நல்ல பலன்களை அடைவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மகரம்

இன்று வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்வுகளில் இருந்த தடைகள் நீங்கும். உங்களுக்கு எதிர்ப்பாக செயல்பட்டு வந்த பிள்ளைகளின் மனநிலை மாறும். அவர்கள் நல்ல வேலை வாய்ப்பை அடைவார்கள். மாணவர்கள் கல்வியில் திறமையோடு இருப்பார்கள். குடும்பத்தில் உங்களின் மதிப்பு கூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கும்பம்

இன்று கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும். சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி லாபம் பெருகும். வியாபாரிகளும் நல்ல லாபம் பெறுவார்கள். எதிர்பார்த்த வங்கிக்கடன் வந்துசேரும். சகோதரர்கள் சண்டை நீங்கி ஒன்று கூடுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

மீனம்

இன்று அடுத்தவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். அரசியல் துறையினருக்கு மேலிடத்திற்கும் உங்களுக்கும் திடீர் இடைவெளி ஏற்படலாம். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். உத்யோகஸ்தர்கள் பணிச்சுமையில் அவதிப்பட்டது மாறும். கேட்டபடி மாறுதல் கிடைக்கும். சிலர் விருப்ப ஓய்வில் செல்வார்கள். திட்டமிட்டபடி எதிர்காலத்தை அமைத்துக்கொள்வார்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை இலக்கு வைத்து ட்ரம்ப் போடும் கணக்கு..!

0

வெனிசியூலாவில் ஆட்சி நிர்வாகத்தை அமெரிக்கா பின்னின்று மேற்கொள்ளுமென்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

வெனிசியூல இராணுவ நடவடிக்கையின்பின்னர் ஆற்றிய உரையில் அவர் மேலும் கூறியதாவது,

பாதுகாப்பான, முறையான மற்றும் நியாயமான மாற்றத்தை நாங்கள் செய்யக்கூடிய காலம் வரும் வரை நாங்கள் அங்கு ஆட்சியை நடத்தப் போகிறோம்.

எனவே வேறு யாராவது இதில் ஈடுபடுவதை நாங்கள் விரும்பவில்லை, கடந்த நீண்ட காலமாக நாங்கள் கொண்டிருந்த அதே நிலைப்பாட்டை நாங்கள் கொண்டுள்ளோம்.

வெனிசுலாவின் மக்களுக்கு அமைதி, சுதந்திரம் மற்றும் நீதியை நாங்கள் வழங்க விரும்புகிறோம்.

வெனிசுலாவில் எண்ணெய் வணிகம் நீண்ட காலமாகவே நலிவடைந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். நமது மிகப் பெரிய அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் உள்ளே சென்று, பில்லியன் கணக்கான டொலர்களை செலவழித்து, மோசமாக சேதமடைந்த உள்கட்டமைப்பை சரிசெய்து, நாட்டிற்கு பணம் சம்பாதிக்கத் தொடங்கப் போகிறோம்.

எனது வழிகாட்டுதலின் பேரில், அமெரிக்க ஆயுதப் படைகள் வெனிசுலாவின் தலைநகரில் ஒரு அசாதாரண இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டன.

இது அமெரிக்க வரலாற்றில் அமெரிக்க இராணுவ வலிமை மற்றும் திறமையின் மிகவும் அதிர்ச்சியூட்டும், பயனுள்ள மற்றும் சக்தி வாய்ந்த வெளிப்பாடுகளில் ஒன்றாகும். – என்றார் ட்ரம்ப்

முன்னாள் அமைச்சர் டக்ளஸை நேரில் சந்தித்த நாமல் ராஜபக்ஷ..!

0

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துள்ளார்.

மஹர சிறைச்சாலைக்கு நேற்று விஜயம் செய்த அவர் குறித்த சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜோஹன் பெர்னாண்டோ ஆகியோரை சந்தித்து நாமல் நலன் விசாரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

டக்ளஸை சந்தித்தபின் சிறையில் இருந்து வெளியே வந்த நாமல், அரசாங்கம் அரசியல் ரீதியாக திவாலாகி வரும் அதே வேளையில் அரசியல் அடக்குமுறையையும் செயல்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

மேலும், டயஸ்போராக்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே டக்ளஸ் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளில் ஒன்று, பாதாள உலகக் குழு உறுப்பினர் வசம் சென்ற விவகாரம் தொடர்பிலேயே டக்ளஸ் தேவானந்தா அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவர், கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினான கலந்துரையாடல்..!

0

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலொன்று 03.01.2025 இன்று முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.விகே.சிவஞானம், பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

error: Content is protected !!