யாழில் போதை மாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று கொக்குவில் – கலட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
20, 21 மற்றும் 22 வயதுடைய மூன்று இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் காவல்துறை போதை தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்திற்கு நாங்கள் வந்து வித்தியசமான அனுபவங்களை பெற்றுக் கொண்டுள்ளோம். யாழ்ப்பாண மக்கள் எங்களை அன்புடன் வரவேற்று உபசரித்தனர் என கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் 170ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழிற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்ட பிக்குகள் தெரிவித்துள்ளனர்
யாழிற்கு நேற்றைய தினம் வருகை தந்த பிக்குகள் முன்னதாக யாழ் . பொது நூலத்திற்கு சென்று நூலகத்தை பார்வையிட்டதுடன் , நூலகர்களுடன் கலந்துரையாடி புத்தகங்களையும் அன்பளிப்பு செய்தனர்.
தொடர்ந்து யாழ்ப்பாண பல்கலை கழகத்திற்கும் , யாழ்ப்பாணத்தில் உள்ள இரண்டு பாடசாலைகளுக்கும் நூல்களை பகிர்ந்தளித்தனர்.
அதன் பின்னர் மாலை வலி. வடக்கு பிரதேசத்திற்கு சென்று அப் பகுதிகளை பார்வையிட்டதுடன் , மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்றதுடன் , ஆலய குருக்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இன்றைய தினம், காலை நாக விகாரைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டதுடன் , விகாரதிபதியுடனும் கலந்துரையாடினர்.
அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்
மேலும் தெரிவிக்கையில்,
யாழில் நாம் எந்த வித இடர்களுக்கும் முகம் கொடுக்கவில்லை. யாழ் மக்கள் அன்பாக வரவேற்றனர். எமக்கு மொழியே தடையாக இருந்தது. தமிழ் மொழி தெரியாததால் , மக்களுடன் பேச முடியாது இருந்தது.
சிங்களத்தில் பேசும் போது, அவர்களுக்கு சிங்கள மொழியை நன்றாக விளங்கி கொள்ள முடியாது இருந்தது. நாம் தமிழ் பேசிய போது, சந்தோசமாக எம்முடன் பேசினார்கள்.
தமிழ் மொழியை கற்றுக் கொண்டு , நாம் இங்கே வந்தால் மிக பயனுள்ளதாக எமக்கு இருக்கும்.
ஏழை மக்கள் தென்னிலங்கையிலும் அதிகளவில் உள்ளனர். ஆனாலும் நாம் வடக்கு மக்களுக்கு உதவ வேண்டும் எனும் நோக்குடன் இங்கே வந்து இந்த மக்களுடன் பழகி சிலருக்கு உதவியுள்ளோம்.
எமது நாட்டில் எல்லா இன மக்களும் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ வேண்டும் என தெரிவித்தனர்.
இந்திய எல்லைக்குள் சட்ட விரோதமான முறையில் உட்பிரவேசித்த இலங்கை பிரஜை ஒருவரை மண்டபம் கடற்கரை பொலிஸார் இன்று (13) கைது செய்துள்ளனர்.
தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைதானவர் மன்னார் வங்காலை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் என தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர் படகு மூலம் சட்டவிரோதமான முறையில் இந்திய எல்லைக்குள் உட்பிரவேசித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அவரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.
போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இன்று (13.11) தெரிவித்தனர்.
வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்து வவுனியாவின் பல்வேறு இடங்ளில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 4 இளைஞர்கள் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 150 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுளள்ளன.
அந்த வகையில், திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரிடம் இருந்து 80 போதை மாத்திரைகளும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு இளைஞரிடம் இருந்து 30 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் இருந்து 20 போதை மாத்திரைகளும், லக்சபானா வீதி, காத்தார் சின்னக்குளம் பகுதியைச் சேர்நத இளைஞா ஒருவரிடம் இருந்து 20 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளன.
இதனையடுதது குறித்த நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர் என பொலிசார் மேலும் தெரிவித்தனர்
கொத்மலை பிரதேச சபையின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாதீடு தொடர்பான கொத்மலை பிரதேச சபைக் கூட்டம் அதன் தவிசாளர் தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்றது.
இதன் போது தேசிய மக்கள் சக்தி மற்றும் இதொகா உறுப்பினர்கள் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஐக்கிய மக்கள் சக்தி உட்பட சில எதிரணி உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.
கொத்மலை பிரதேச சபையில் 55 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 30 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் தலைமையின் கீழ் இயங்கும் தொடங்கொட பிரதேச சபையின் கன்னி வரவு செலவுத் திட்டம் இன்று (13) இடம்பெற்றதுடன், அதில் தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
பொது எதிர்க்கட்சியின் 13 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளதுடன், தேசிய மக்கள் சக்தியின் 12 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
யாழ் – வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் உள்ள தோட்டக் கிணற்றில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் இன்று (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நிரேக்சன் என்ற 18 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சுமார் ஐந்து இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றில் நீராடச் சென்றுள்ளனர்.
இதன் போது அனைவரும் கயிறு கட்டி நீராடியுள்ளனர். அதன் பின்னர் அனைவரும் வெளியேறிய நிலையில், ஒருவர் மாத்திரம் தொடர்ந்து நீராடியுள்ளார்.
அவரை வருமாறு ஏனையவர்கள் அழைத்துள்ளனர். எனினும் குறித்த இளைஞன’ சிறிது நேரத்திற்குப் பிறகு வருவதாகக் கூறியுள்ளார்.
நீண்ட நேரமாகியும் குறித்த இளைஞனைக் காணாததால், ஏனையவர்கள் மீண்டும் அங்கு சென்று பார்த்தபோது, கயிறு அறுந்த நிலையில் இளைஞனைக் காணவில்லை.
பின்னர் ஏனையவர்களின் உதவியுடன் தோட்டக் கிணற்றில் தேடியபோது அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் தொடர்பான மரண விசாரணையை கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் மேற்கொண்டார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
மன்னார், அடம்பன் பிரதேசத்தில் 8 வயது சிறுமி ஒருவரை பாரிய பாலியல் ரீதியிலான அத்துமீறலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டு நபருக்கு 8 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
அதன்படி, இது தொடர்பான வழக்கு விசாரணை, மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கின் போது தண்டனை தொடர்பில் தனது சமர்ப்பணத்தில், அரச சட்டத்தரணி இக்குற்றத்தின் பாரதூரமான தன்மையையும், சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் கடுமையாக வலியுறுத்தினார்.
அரச சட்டத்தரணியின் சமர்ப்பணத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குற்றவாளிக்கு 8 வருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நட்டஈடாக 200,000 ரூபாயை நட்டஈடாக செலுத்துமாறும் கட்டளையிட்டார்.
சமூக வலைத்தளங்களிலும், சில ஊடகங்களிலும் தன்மீது சேறுபூசும் வகையில் பொய்யான தகவல்கள் பதிவேற்றப்படுவதால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதனூடாக தனது நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக வலைதளங்களின் செயற்பாடுகளை சிறப்புரிமைகள் குழுவுக்கு ஆற்றுப்படுத்தி, உரிய நடவடிக்கையை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டத்திற்குப் புறம்பாக இழப்பீடு பெற்றுக் கொண்ட வன்னி அபிவிருத்தி நாயகன் முன்னாள் எம்பி திலீபன் உட்பட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து அந்த இழப்பீட்டுப் பணத்தை மீளப் அறவிடுவதற்கான உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது, தமது வீடுகள் தீக்கிரையானதால் ஏற்பட்ட சேதங்களுக்காகச் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்திற்குப் புறம்பாக நஷ்டஈடு பெற்றுக் கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் சட்டத்தரணியான கலாநிதி ரவீந்திரநாத் தாபரேவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.