Tuesday, March 3, 2026
Huis Blog Bladsy 128

வவுனியாவில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு; மேலதிக விசாரணையில் பொலிஸார்..!

0

வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, பண்டாரிக்குளம், 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே குறித்த குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது மனைவி ஆசிரியராக பணி புரிவதால் பாடசாலைக்கு சென்ற நிலையில் குறித்த நபர் மட்டும் வீட்டில் நின்றுள்ளார்.

பாடசாலை முடிந்து மனைவி வந்து பிற்பகல் 1.45 மணியளவில் வீட்டில் உள்ள கணவரை அழைத்த போதும் நீண்ட நேரமாக வீட்டு வாயில் திறக்கப்படவில்லை.

இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் மதிலால் ஏறி சென்று கதவை திறந்த போது கணவன் அறை ஒன்றில் இறந்த நிலையில் காணப்பட்டதுடன், தலையில் காயமும் காணப்பட்டது.

இந்நிலையில், உறவினர்கள் பிற்பகல் 1.55 மணியளவில் பண்டாரிக்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கிய போதும் அவர்கள் மரணத்தை தாம் பார்ப்பதில்லை வவுனியா பொலிஸிற்கு தெரிவிக்குமாறு கூறியுள்ளனர்.

அதன்பின் பிற்பகல் 2 மணியளவில வவுனியா பொலிஸாருக்கு நேரில் சென்று தகவல் வழங்கப்பட்டது. நீண்ட நேரமாக சம்பவ இடத்தில் கிராம அலுவலர் உள்ளிட்ட பொது மக்கள் திரண்டிருந்த போதும் பொலிஸார் வரவில்லை.

அதன் பின் பிற்பகல் 4 மணியளவில் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் இயங்கும் அவசர தொலைலைபேசி இலக்கமான 107 தகவல் வழங்கப்பட்டது.

அதன் பின் 4.30 மணியளவில் வவுனியா பொலிஸார் வருகை தந்ததுடன், பண்டாரிக்குளம் பொலிஸார் மாலை 5 மணிக்கு வருகை தந்து விசாரணைகளை நடத்தினர். திடீர் மரண விசாரணை அதிகாரி டா.சுரேந்திரசேகரன் சம்பவ இடத்திற்கு சடலத்தை பார்வையிட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டிருந்தார்.

பொலிஸார் தாமதமாக வந்தமையால் மாலை 5 மணிக்கே சடலம் அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உடற் கூற்று பரிசோதனைகக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வீட்டில் உள்ள கட்டிலின் மேல் ஏறி அறை ஒன்றின் சுவருக்கு வர்ணம் பூசிய போது கட்டிலில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

நில அளவைத் திணைக்களத்தில் பணி புரிந்து கடந்த மாதம் ஓய்வு பெற்ற சி.மகேந்திரராஜா (வயது 60) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம்; நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு..!

0

2015 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி நடத்திய பிணைமுறி வெளியீட்டின் போது அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தால் இலங்கை மத்திய வங்கியில் பராமரிக்கப்படும் கணக்குகள் குறித்த அறிக்கையை அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர், கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியால் 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி 27 ஆம் திகதி நடத்தப்பட்ட பிணைமுறி வெளியீட்டில் அரசாங்கத்திற்கு ரூ.688 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் பரிசீலித்துள்ளது.

அதில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக, இலங்கை மத்திய வங்கியில் பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனம் பராமரிக்கும் கணக்குகள் குறித்த விரிவான அறிக்கையைப் பெற வேண்டும் என்று நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த தலைமை நீதவான், இந்த உத்தரவைப் பிறப்பித்ததுடன், விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, அந்த குற்றச் செயல் தொடர்பாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உட்பட 9 சந்தேக நபர்களுக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

பாடசாலை மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட கணித ஆசிரியர் சிக்கினார்..!

0

10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் எட்டு மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபாரான ஆசிரியர் இன்று (07) அரலங்கவில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை – திம்புலாகல கல்வி வலயத்தின் அரலகங்வில கல்விப் பிரிவில் உள்ள உயர்நிலை பாடசாலையொன்றின் கணித ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் அரலகங்வில காவல்துறையினர், பெற்றோர்கள் பல சந்தர்ப்பங்களில் செய்த முறைப்பாடுகளை தொடர்ந்து, கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டதாகவும், பாடசாலையில் 10 ஆம் வகுப்பு படிக்கும் எட்டு மாணவிகள் சந்தேகநபரான ஆசிரியரால் பல சந்தர்ப்பங்களில் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

அதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இன்று (07) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் மகளிர் காவல்துறை பணியகம் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் இளம் குடும்ப பெண் துஸ்பிரயோகம்; சந்தேக நபர் கைது..!

0

வவுனியாவில் இளம் குடும்ப பெண் ஒருவரை மிரட்டி தவறான முறைக்கு உட்படுத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் நேற்று(06) கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வவுனியா – பம்பைமடு கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் 31 வயது குடும்ப பெண் ஒருவரை கடந்த 2023ஆம் ஆண்டு ஜுன் மாதம் அயலில் வசிக்கும் குடும்பஸ்தரான 37 வயது நபர் ஒருவர் தனது வீட்டிற்கு அழைத்து தவறான முறைக்கு உட்படுத்தியுள்ளார்.

அத்துடன், சந்தேக நபரான குடும்பஸ்தர் காணொளி ஒன்றை பதிவு செய்து அதனை வெளியிடுவதாக மிரட்டி குறித்த பெண்ணை மீண்டும் பல தடவை அழைத்து தவறான முறைக்கு உட்படுத்தியுள்ளார். இதனால் கர்ப்பமான அந்த பெண் குழந்தை ஒன்றையும் பிரசவித்துள்ளார்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் பூவரசன்குளம் காவல் நிலையத்தில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பூவரசன்குளம் காவல்துறை தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வந்த போதும், குற்றம் சாட்டப்பட்ட குடும்பஸ்தர் தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில், வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து முள்ளியவளைப் பகுதியில் உள்ள காட்டில் மறைந்திருந்த நிலையில் சந்தேக நபர் நேற்று(06) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ் பல்கலை மாணவனுடன் தவறான உறவு; பெண் அரச ஊழியர் தற்கொலை முயற்சி..!

0

யாழ் கொக்குவில் பகுதியில் 36 வயதான இரு பிள்ளைகளின் தாயார் கிணற்றில் பாய்ந்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளது.

யாழில் உள்ள அரச நிறுவனம் ஒன்றில் உயர் பதவி வகிக்கும் இப் பெண்ணின் அயல் வீட்டில் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தங்கியிருந்து கற்று வந்துள்ளார்.

குறித்த மாணவனுக்கும் பெண்ணுக்கும் இடையில் தவறான தொடர்பு இருந்து வந்துள்ளது. பெண்ணின் கணவர் வெளி மாவட்டம் ஒன்றில் தனியார் துறையில் உயர் பதவியில் உள்ளதாகத் தெரிய வருகின்றது.

பெண்ணுக்கும் கணவருக்கும் இடையில் சில காலமாக முரன்பாடுகள் வலுத்த நிலையில் கணவன் வீட்டுக்கு வருவதை தவிா்த்திருந்தார்.

இந் நிலையில் குறித்த மருத்துவபீட மாணவன் பெண்ணுடன் தவறான தொடர்புகளைப் பேணி அதனை வீடியோவாக எடுத்து வந்துள்ளார், குறித்த மாணவன் போதைக்கு அடிமையாகி பெண்ணிடம் பணம் கேட்டு வற்புறுத்தி வந்ததாகத் தெரிய வருகின்றது.

இதன் காரணமாக பெண் அவனை விட்டு விலகியதுடன் மாணவன் தங்கியிருந்த வீட்டுச் சொந்தக்காரரான வயதான தம்பதிகளிடமும் மாணவன் தொடர்பாக கூறி அவனை அங்கிருந்து அகற்ற முயன்றுள்ளார்.

இதனால் கடுப்பான மாணவன் தான் உறவு கொள்ளும் போது எடுத்து வைத்திருந்த வீடியோக்களை காட்டி பெண்ணை அச்சுறுத்தி நகைகள் மற்றும் பணம் என்பவற்றை தொடர்ச்சியாக பறித்து வந்ததாகத் தெரிய வருகின்றது.

இதனையடுத்து தனது பிள்ளைகளை பாடசாலைக்கு விட்டுவிட்டு அயல்வீட்டு தம்பதிகளிடம் குறித்த மாணவன் வீடியோ காட்டி அச்சுறுத்துவதை தெரிவித்த பின் வீட்டுக்கு சென்று கிணற்றில் பாய்ந்ததாகத் தெரிய வருகின்றது.

கிணற்றில் பாய்ந்த சத்தத்தை கேட்ட அயல் வீட்டு தம்பதிகள் குக்குரல் இட்டு தெருவில் சென்றவர்களை அழைத்து குடும்பப் பெண்ணை காப்பாற்றியுள்ளார்கள்.

இந் நிலையில் அயல்வீட்டு தம்பதிகளின் தகவல்களை அடுத்து மருத்துவபீட மாணவன் கடுமையாக அங்கு நின்றவர்களால் தாக்கப்பட்டதாகத் தெரிய வருகின்றது. இச் சம்பவம் நேற்று முன்தினம் காலை இடம் பெற்றுள்ளது.

குடும்பம் என்ற வரையறைக்குள் கட்டுப்பாட்டுடன் வாழாது அற்ப இச்சைக்காக தவறான வழியில் சென்று தவறான நபர்களின் கைகளில் சிக்குண்டு தமது வாழ்க்கையை தினம் தினம் தொலைத்த பல கதைகளை கேட்டும் எம்மவர்கள் திருந்துவதாகத் தெரியவில்லை.

மாணவர்களிடம் அடாவடியாக நடந்து கொண்ட CTB நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்..!

0

நுவரெலியா பகுதியில் பாடசாலை மாணவர்களை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு பேருந்திவ் ஏற்ற மறுத்த நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தப் பட்டுள்ளாரென போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இ.போ.ச பேருந்து நடத்துனர் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு முடியும் வரை அவர் சேவையில் உள்ளீர்க்கப்பட மாட்டார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் விசேட கொள்கையொன்றினை அரசாங்கம் வகுத்திருக்கும் சூழ்நிலையில் இப்படியானவற்றை அனுமதிக்க முடியாதென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

“நாவலபிட்டியில் இருந்து கினிகத்தேனை ஊடாக ஹட்டனுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் இருந்து பாடசாலை மாணவர்களை வெளியேறுமாறு நடத்துநர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அரச பேருந்திலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்கள் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கினிகத்தேனை கடவளை விக்னேஸ்வரா கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்கள் என தெரிய வந்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு என இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக வழங்கப்படும் பருவச்சீட்டினை பேருந்து நடத்துநரிடம் காண்ம்பிக்கும் போது பருவச்சீட்டினை வைத்திருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து வெளியேறுமாறு நடத்துநர் தெரிவிப்பதாக மாணவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

நாவலபிட்டியில் இருந்து கினிகதேனை ஊடாக ஹட்டன் வரை செல்லும் அரச பேருந்தில் அதிகமாக தமிழ் மாணவர்களே இவ்வாறு புறக்கணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

“இது அரச பேருந்து நடத்துநரின் சொந்த பேருந்து அல்ல, பாடசாலை மாணவர்களாகிய நாங்கள் பணம் கொடுத்து பருவச்சீட்டினை பெற்றுள்ளோம் எமக்கு பேருந்தைவிட்டு வெளியேற முடியாது“ என மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதற்கு பதிலளித்த பேருந்து நடத்துநர், “ஆம் இது என்னுடைய பேருந்து நீங்கள் எல்லாம் பேருந்தைவிட்டு இறங்குங்கள்” என வலியுறுத்தியதாக வெளியிடப்பட்ட காணொளி ஊடாக தெரிய வந்துள்ளது.

2009 யுத்தத்தின் போது வைத்திய சாலைகள் மீது குண்டுத் தாக்குதல்; ஒப்புக் கொண்ட ரணில்..!

0

2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது மருத்துவமனைகள் மீது விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றது என்பது உண்மை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமான அல்ஜசீராவுக்கு ரணில் வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தினைச் சுட்டிக் காட்டினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இறுதிப் போரில் சிக்குண்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன.

மருத்துவமனைகள் மீது விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றது என்பது உண்மை. எனினும், இது திட்டமிடப்பட்ட முறையில் பெருமளவில் இடம்பெறவில்லை.” என விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

அத்துடன் ”2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்டு விட்டதா?“ என ஊடகவியலாளர் மெஹ்டி ஹசன் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, ”எந்தச் சமூகத்திற்கும் இதுவரை நீதி வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர் விமானப் படை விமானங்கள் மருத்துவமனைகள் மீது குண்டுவீசிய தருணங்கள் உள்ளன.

இதற்காகச் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இந்தத் தாக்குதல் பெருமளவில் இடம் பெற்றது என்று நான் சொல்ல மாட்டேன்.” – என்று குறிப்பிட்டார்.

மேலும், “ஐக்கிய நாடுகளின் குழு, இலங்கைப் படையினர் போரில் சிக்குண்டவர்களுக்கான மனிதாபிமான உதவிகளைத் தடுத்தனர் என்று குறிப்பிட்டுள்ளனரே?” – என்று மெஹ்டி ஹசன் கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் இதற்குப் பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, ”நான் அது இடம்பெற்றது என நினைக்கின்றேன்.” என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கனடாவிலிருந்து நாடு கடத்த முற்பட்ட நிலையில் யாழைச் சேர்ந்த தமிழ் குடும்பஸ்தர் தற்கொலை முயற்சி..!

0

கனடாவிலிருந்து நாடு கடத்த முற்பட்ட யாழ் மானிப்பாயைச் சேர்ந்த 40 வயதான குடும்பஸ்தர் உயிரை மாய்க்க முற்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

பொலிசாரின் கண்காணிப்பின் கீழ் இருந்த சிவநேசன் நேசராஜ் என்ற குடும்பஸ்தர் மலசலகூடத்தை துப்பரவு செய்யப் பயன்படுத்தும் திரவம் ஒன்றை அருந்திய நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,

குறித்த குடும்பஸ்தர் நாளை இலங்கைக்கு நாடு கடத்த முற்பட்ட வேளையிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

வடக்கில் போதைப்பொருள் ஒழிப்பு மத்திய நிலையத்தை அமைக்க அரசு நடவடிக்கை..!

0

வடக்கில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனை குறைந்து ஏனைய போதைப் பொருள் பாவனை உயர்வடைந்துள்ளது. எனவே போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் விசேட மத்திய நிலையத்தை வடக்கில் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

போதைப்பொருள் ஒழிப்புக்குரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். கடந்த காலங்களில் அரசியல் வாதிகளுக்கும், போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்பட்டது.

வரலாற்றில் முதல் தடவையாக போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

போதைப்பொருள் ஒழிப்புக்குரிய நடவடிக்கைகளை நிறுவன மட்டத்தில் முன்னெடுத்துள்ளோம். கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்புக்களில் வடக்கில் மாத்திரம் கடந்த செவ்வாய்க்கிழமை 174 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்குவதற்காக 14 விசேட மையங்களை ஸ்தாபிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் வைத்திய சாலைகளில் போதைப்பொருள் தொடர்பில் தமிழ் மொழியில் விழிப்புணர்வுகள் வழங்கப்படும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் ஆணைக்கு அமைவாக போதைப்பொருள் பாவனையை முழுமையாக இல்லாதொழிப்போம் என்றார்.

இலங்கை பெண்களிடம் அதிகரித்து வரும் போதைப் பாவனை..!

0

நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை காரணமாக சிக்கலில் மாட்டித் தவிக்கும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

நாட்டில் 54 சதவீதமான பெண்கள் போதைப்பொருள் பாவனையால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் நடத்திய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

மகளிர் தினத்தை முன்னிட்டு 25 மாவட்டங்களிலும் உள்ள 15 வயதிற்கு மேற்பட்ட 1000 பெண்களை உள்ளடக்கி முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

நாட்டில் 43 சதவீத பெண்கள் உள ரீதியான சவால்களை எதிர் கொள்கிறார்கள் என்பதும் இதன் போது தெரிய வந்துள்ளது.

அத்துடன், பெண்கள் தவிர்ந்த ஏனைய தரப்பினரின் மதுபான பாவனையினாலும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக, 27.4 வீதமான பெண்கள் அயலவர்களினாலும், 27 சதவீதமான பெண்கள் இனந் தெரியாதோர்களினாலும் 20 வீதமான பெண்கள் உறவினர்களாலும் பிரச்சினைகளை எதிர் நோக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களை மதுசார பாவனைக்கு ஈர்ப்பதற்காக மதுசார நிறுவனங்கள் பல்வேறு வழிகளில் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான செயற்பாடுகளுக்காக 29 சதவீதமான பெண்கள் பயன்படுத்தப் படுவதாகவும், 34 சதவீதமான பெண்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லை எனவும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!