கொழும்பில் சற்றுமுன்னர் சமூக ஆர்வலர் டேன் பிரியசாத்தை குறி வைத்து துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார் என வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லக்சந்த சேவன வீட்டு வசதி வளாகத்தில் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
டேன் பிரியசாத் நான்கு முறை துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், இரண்டு தோட்டாக்கள் மார்பிலும் இரண்டு தோட்டாக்கள் தோள்பட்டையில் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிருடன் இருப்பதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இவர் பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சுமார் 20 எழுத்தாணை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மனுக்கள் தொடர்பான விசாரணைகள் நேற்று (21) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் மற்றும் சில சுயேட்சை குழுக்களால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று காலமானதாக தகவல் வெளியாகி உள்ளது.
போப் பிரான்சிஸ் இன்று (21) காலமானார் என்று வத்திக்கான் கேமர்லெங்கோ கார்டினல், கெவின் ஃபெரெல் அறிவித்தார்.
“இன்று காலை 7:35 மணிக்கு, ரோம் பிஷப் பிரான்சிஸ், தந்தையின் வீட்டிற்குத் திரும்பினார். அவரது முழு வாழ்க்கையும் இறைவனுக்கும் அவரது திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது” என்று கெவின் ஃபாரெல் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
88 வயதான போப், நிமோனியா, நுரையீரல் தொற்று, சுவாசக் கோளாறு காரணமாக பிப்ரவரி 14ஆம் தேதி மருத்துவமனைக்குச் சென்று, 38 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த மார்ச் 23 அன்று வாடிகனுக்கு திரும்பினார்.
நேற்று ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு வத்திக்கான் சதுக்கத்தில் கூடிய ஆயிரக் கணக்கான மக்களை நோக்கி புனித பேதுரு பேராலயத்தில் இருந்தவாறு போப் பிரான்சிஸ் கையசைத்து ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் தேர்தலில் பெரும்பாலான உள்ளூராட்சி அமைப்புகளில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையை பெறாது என்று கூறினார்
எனவே, தேசிய மக்கள் சக்தியை தோற்கடிக்க மற்ற எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன் கூட்டணி அமைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்களை வலியுறுத்தினார்.
ஒவ்வொரு உள்ளூராட்சி அமைப்புகளிலும் பெரும்பான்மையைக் கொண்ட குழுவிற்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது, எனவே வெவ்வேறு அரசியல் குழுக்களை ஒன்றிணைக்க விவாதங்கள் நடத்தப்படுவது கட்டாயமாகும் என்றும் தற்போதைய அரசாங்கத்தின் திறன்கள் குறித்து வாக்காளர்கள் இப்போது நல்ல புரிதலைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்க மேலும் கூறினார்.
மன்னாரில் பெற்றோரால் கல்விக்காக விடுதியில் இணைக்கப்பட்ட மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு (20.04.2025) இடம் பெற்றுள்ளதாக முருங்கன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலகப்பிரிவின் இலுப்பைக்கடவையை சேர்ந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
மாந்தை மேற்கு பிரதேச செயலகப்பிரிவின் இலுப்பைக் கடவையை சேர்ந்த இம்மாணவியை பெற்றோர் முருங்கனில் உயர் கலவிக்காக கன்னியர் குருமட விடுதியில் நேற்றையதினம் (20) இணைத்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த மாணவி நேற்று இரவு தவறான முடிவெடுத்துள்ளதாக காவல்துறை விசாரனையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, உயிரிழந்த மாணவியின் உடலம் மன்னார் மாவட்ட வைத்திய சாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முருங்கன் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் பல குற்றச் செயல்கள், கொலைகள், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் உள்ளிட்டவற்றுடன் தொடர்புடையவர் எனக் கூறி சமீபத்தில் கைது செய்யப்பட்டு தற்போது தடுப்பு காவலில் உள்ளார்.
இந்நிலையில், பிள்ளையான் குழுவைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகள் இருவர் கொழும்பு குற்ற தடுப்பு பிரிவினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கிடைத்த தகவல்களின் படி, அரச சாட்சியாக மாறியுள்ள குகன் என்பவர், பிள்ளையானிடம் பெருந் தொகையான ஆயுதங்கள் இருப்பதாக தகவல் வழங்கியுள்ளார்.
அதன்படி, இன்று பிள்ளையான் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையின் போது பெருந் தொகையான ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அமைதி காக்கும் படையினரின் (IPKF) அட்டூழியங்களுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த தமிழ்ப் பெண் அன்னை பூபதி இறந்து இன்றுடன் 37 ஆண்டுகள் நிறைவடைகிறது.
மட்டு அம்பாறை தாய்மார்கள் முன்னணியின் உறுப்பினராக, மட்டக்களப்பைச் சேர்ந்த பூபதி கணபதிப்பிள்ளை, IPKF செய்த அநீதிகள் மற்றும் அட்டூழியங்களை எதிர்த்து மார்ச் 19, 1988 அன்று சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அவரது உண்ணாவிரதம் ஏப்ரல் 19 அன்று அவரது மரணத்துடன் முடிந்தது.
“அன்னை பூபதி நமது போராட்டத்தின் பொற்கால வரலாற்றில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்துள்ளார்,” என்று தேசியத் தலைவர் தெரிவித்துள்ளார்.
“ஒரு தாயாகவும், ஒரு குடும்பத் தலைவராகவும், ஒரு பெண்ணாகவும் தனது வாழ்க்கையைத் துறந்து தனது மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்காக தனது உயிரைத் தியாகம் செய்தார்.
இந்திய இராணுவத்திற்கு எதிரான அவரது தார்மீகப் போர் இந்தியாவிற்கு ஒரு அவமானமாக இருந்தது. அவர் ஒரு மனிதராக இறக்கவில்லை. அவரது தியாகம் தமிழர்களின் தாய்மையின் எழுச்சியைக் குறிக்கிறது.”
அன்னை பூபதியின் 28 வயது மகன் இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டான், மற்றொரு மகன் சிறப்புப் படையினரால் தற்செயலாக சுட்டுக் கொல்லப்பட்டான். சுற்றி வளைப்பு நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட மற்றொரு மகன் பூசா இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டு கடுமையான சித்திரவதைக்கு உள்ளானான்.
அவரது தியாகம் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் தொடர்ந்து நினைவு கூரப்படுகிறது.
அன்னை பூபதி ஒரு ஆயுதமேந்திய போராளி அல்ல, இருப்பினும், தனது சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து, உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருந்த முதல் தமிழ்ப் பெண் என்ற முக்கியத்துவம் அவருக்கு உண்டு.
தமிழ் மக்களின் நவீன அரசியலில், அவரது சாகும் வரையிலும், அதற்கு முன்பும் இருந்ததைப் போலவே, சுய தியாகம் செய்த ஒரு பெண்ணை இன்னும் காட்ட முடியவில்லை.
பூபதிக்குப் பிறகு, கடந்த 16 ஆண்டுகளாக, தாய்மார்கள் தமிழ் அரசியலில் முக்கிய செயல்பாட்டாளர்களாக இருந்து வருகின்றனர்.
கடந்த 16 ஆண்டுகளாக நடந்து வரும் அனைத்து போராட்டங்களும், காணாமல் போன தங்கள் உறவினர்களைத் தேடும் தமிழ்த் தாய்மார்களின் கண்ணீரில் நனைந்துள்ளன.
பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் சாரதியாகச் செயல்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (18) இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆட்கடத்தல் சம்பவம் ஒன்றுக்காக கைதுசெய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் நெருக்கமான சகா ஒருவர் , தனது சுயவிருப்பின் பேரில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருக்கிறார்.
கொழும்பில் ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ஆனந்த விஜேபால , கம்மன்பில – பிள்ளையான் சந்திப்பின் போது பிள்ளையான அழவில்லை என்றும் அந்த சந்திப்பின் போது அருகில் இருந்த பொலிஸ் அதிகாரிகளிடம் தான் இதனை வினவியதாகவும் தெரிவித்திருக்கிறார்.
ஈஸ்ரர் ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த விசாரணையை குழப்பும் வகையில் கம்மன்பில செயற்படுகிறார் என்று குற்றஞ்சாட்டிய அமைச்ச ஆனந்த, பிள்ளையானுடன் இணைந்து சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட ஒருவர் விசாரணைக்கு சுயமாகவே வருகிறார் என்றால் அவர்கள் இந்த விசாரணைகளில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்திருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.