Thursday, March 5, 2026
Huis Blog Bladsy 132

தமிழில் பேசினால் உங்களால் கேட்க முடியாதா? சபையில் கொதித்தெழுந்த அர்ச்சுனா எம்.பி

0

நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் இராமநாதன் அர்ச்சுனா ஆகியோரால் இன்று (04) நாடாளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.

மட்டக்களப்பில் தொடர்ச்சியாக இடம்பெறும் வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் கேள்வி எழுப்பியதையடுத்து அவரது ஒலிவாங்கி இடைநிறுத்தப்பட்டது.

கடந்த 20 ஆம் திகதி, மட்டக்களப்பு ஆரையம்பதி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது, ​​மர்மக் குழு ஒன்று வாள் வெட்டு நடத்தியதில் இருவர் படுகாயமடைந்தனர்.

அதேபோல், நேற்று (03) மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள உணவகம் ஒன்றிற்கு முன்னால் நடந்த வாள் வெட்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.

குறித்த இரு சம்பவங்கள் தொடர்பில் இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது, இராசமாணிக்கம் சாணக்கியன் கருத்து தெரிவிக்க முயன்ற போது, ​​சபாநாயகர் குறுக்கிட்டு, “இது ஒழுங்குப் பிரச்சினை அல்ல, எனவே சபை ஒத்திவைப்பு பிரேரணையின் போது இதனை கொண்டு வரலாம்” என்றார்.

சபாநாயகரின் இந்தக் கருத்தால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதேவேளை,நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் திருகோணமலை வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் நோயாளர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் சபையில் கேள்வி எழுப்ப முற்பட்ட நிலையில் சபாநாயகர் அவருக்கு அனுமதி வழங்க மறுத்தார்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா “ நாங்கள் தமிழில் பேசினால் உங்களால் கேட்க முடியாதா? என சபாநாயகரிடம் கோபமாக நடந்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து தனது நடவடிக்கை குறித்து சபாநாயகரிடம் மன்னிப்பும் கோரினார்.

எனினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலையிட்டு நிலையியல் கட்டளைக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் அர்ச்சுனாவுக்கு ஒவ்வொரு நிமிடங்களை பெற்றுக் கொடுக்குமாறு கோரிய நிலையில் அவர்கள் பேச ஒரு நிமிடம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழில் ஓவர் நைற்றில் ஓபாமா ஆக முற்பட்ட இராஜேந்திரன் சிறையில் அடைப்பு..!

0

யாழி்ல் வங்கி மற்றும் பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று வீம்புக்கு முரண்பட்டு வந்த ரிக்ரொக் இராசேந்திரன், வரணி மகா வித்தியாலய விளையாட்டுப் போட்டியின் போது பொலிசாருடன் சண்டையிட்டு அரச ஊழியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து அதனை லைவ்வாக ரிக்ரொக்கில் பதிவிட்ட காரணத்தால் கைது செய்யப்பட்டு 18/03/2025 வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசி பலன்கள் (04.03.2025)

0

மேஷம்

இன்று தைரியம் கூடும். படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு். பிள்ளைகளின் வளர்ப்பில் கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத்திரை செலவினங்கள் குறையும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

ரிஷபம்

இன்று எதை பேசினாலும் அவமானம், எதை செய்தாலும் தலைகுனிவு என இருந்தீர்களே? அந்த நிலை மாறும். உங்களது யோசனைகளை அலுவலகத்திலும், குடும்பத்திலும் மதிக்கும் நேரம் வந்து விட்டது. உங்களது மேலான யோசனைகளை சொல்ல தயாராகுங்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மிதுனம்

இன்று மிகவும் ஜாக்கிரதையாகவும், பொறுப்பாகவும் செயல்படவேண்டும். தங்கள் உடல்நிலை சிறப்பான முன்னேற்றம் அடையும். இருந்தாலும் அவ்வப்போது சிற்சில அசௌகரியங்கள் வந்து போகலாம். தூக்கத்திற்கு ஆசைப்படாமல் உழைத்தீர்களென்றால் வெற்றி நிச்சயம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கடகம்

இன்று எந்த காரியத்தை நினைத்தாலும், எடுத்தாலும் பயந்து கொண்டிருந்தீர்களே, இனி அந்த பயத்தை எல்லாம் தூக்கி தூர வையுங்கள். எந்த காரியத்தையும் துணிந்து செய்யுங்கள். இளைய சகோதரத்தின் உடல்நிலையில் கவனம் தேவை. தாயார் தாய்வழி உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

சிம்மம்

இன்று எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றியின் விளிம்பில் சென்று முழு வெற்றியடையாமல் இருந்து வந்த நிலை மாறும். உடல் நிலை சீரான நிலையில் இருக்கும். சிலருக்கு கண் கோளாறுகள் இருந்தால் அது நீங்கும். பேச்சை பாதியாக குறைப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கன்னி

இன்று கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

துலாம்

இன்று முயற்சி செய்த அளவுக்கு வெற்றி கிடைக்கும். முயற்சிகளை இரு மடங்காக்குங்கள், வெற்றிகள் உங்களைத் தேடி வரும். உங்கள் பொன்னான நேரத்தை அடுத்தவருக்காக வீணாக்காதீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 9, 3

விருச்சிகம்

இன்று எதிர்பார்த்திருந்த தனலாபம், தேக ஆரோக்கியத்தில் நன்மை, தாயார் தாய் வழி உறவினர்களுடன் இருந்த சுமூக நிலைமை என அனைத்து நல்ல பலன்களும் அப்படியே தொடரும். சொன்னால் சொன்ன நேரத்தில் உங்களால் செல்ல முடியும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 4, 6

தனுசு

இன்று சின்ன சின்ன குழப்பங்களனைத்தும் மறையும். உங்கள் குடும்பத்தில் நல்ல நல்ல விஷயங்கள், விஷேசங்கள் நடக்கும். உங்கள் தைரியத்திற்கு இறைவனை வேண்டுங்கள். மாணவர்கள் பாதியில் விட்ட படிப்பை தொடருவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6

மகரம்

இன்று வாழ்க்கைத்துணையுடன் இருந்த பிணக்க நிலை மாறும். முன்கோபம், பிடிவாதம் நீங்கும். குடும்பத்தில் இருந்த வந்த மந்த நிலை மாறி உற்சாகம் துளிர் விடும். சொத்துப் பிரச்னை தீரும்.அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். வழக்குகள் சாதகமாகும். ஷேர் மூலம் பணம் வரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 7

கும்பம்

இன்று எதிலும் ஏமாற்றம், பங்கு தாரர்களுடன் மனக்கசப்பு, வேலை செய்யும் இடத்தினில் கூடுதல் வேலைப்பளு என மிகப்பெரிய சவாலை சமாளிப்பீர்கள். உங்கள் பேச்சிற்கு அடையாளம் கிடைக்கும். சிறிய சிறிய செலவுகள் வந்து பயமுறுத்தியதே அந்த நிலைகளிலும் முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 6

மீனம்

இன்று தடைபட்டிருந்த திருமணம், தடை பட்டிருந்த கல்வி, என தடையாக இருந்த அனைத்து காரியங்களும் தடைகள் விலகி ஒன்றன் பின் ஒன்றாக சிறப்பாக நடக்கும். கடுஞ்சொற்கலை பேசுவதில் வல்லவரான நீங்கள் சற்று அதைக் குறைத்து கொள்ளுங்கள். உங்கள் மதிப்பு உயரும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

யாழில் உழவு உழவு இயந்திரத்தினுள் சிக்குண்டு 11 வயது சிறுவன் பலி..!

0

உழவு இயந்திரத்தினுள் சிக்குண்டு 11 வயது சிறுவன் ஒருவன் உடுவில் கற்பமுனை பகுதியில் உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் பொலிசார் தெரிவித்தனர்.

இன்று (03) மாலை இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுவனின் தந்தை வீட்டிலிருந்து உழவு இயந்திரத்தினை பின் பக்கமாக வெளியே எடுக்க முயன்றுள்ளார்.

இதன் போது, உழவு இயந்திரத்திற்கு பின்னால் இருந்த சிறுவன் உழவு இயந்திரத்தின் சில்லில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

சுன்னாகம் ஸ்கந்தவரோதயா பாடசாலையில் கல்வி கற்கும் நிகால்தாசன் ஆத்வீகன் (வயது 11) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் யாழ் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா நகரப் பகுதியில் உணவகம் ஒன்றின் மீது தாக்குதல்; ஒருவர் கைது..!

0

வவுனியா நகரப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று (03.03) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வவுனியா நகர மணிக்கூட்டு கோபுரத்திற்கு அண்மையில் உள்ள சைவ உணவகம் ஒன்றிற்கு சில இளைஞர்கள் சென்றுள்ளனர். இதன் போது அதில் ஒரு இளைஞர் கையில் கொண்டு சென்ற பியர் போத்தலால் குறித்த சைவ உணவகத்தின் கண்ணாடிக் பெட்டியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதனால் கண்ணாடி பெட்டி உடைந்து சேதமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பில் உணவக உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அங்கு வந்த வவுனியா பொலிசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

யாழில் உயிரிழந்த தமிழினியின் மரணத்தில் சந்தேகம்; தீவிர விசாரணையில் பொலிசார்..!

0

யாழ் சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளர் தமிழினி மரணம் தற்கொலை அல்ல கொலை என தந்தை பொலிஸில் புகார் அளித்த நிலையில் கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உதவி பிரதேச செயலாளர் தமிழினி, தீ வைத்து உயிரிழந்ததாக கூறப்பட்ட மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் வந்ததால் சாவகச்சேரி பொலிஸார் நேற்று (01) மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த பெண் அரச உத்தியோகஸ்தர் கடந்த பெப்ரவரி 16 ஆம் திகதி யாழ் போதனா வைத்திய சாலையில் தீக்காயங்களால் உயிரிழந்தார்.

மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனையின்போது இறந்த உதவி பிரதேச செயலாளரின் கணவர் தவறுதலாக தீப்பிடித்ததாக தெரிவித்துள்ளார்.

எனினும் , சமர்ப்பிக்கப்பட்ட மேலும் சில சாட்சியங்களின் அடிப்படையில், அது தற்கொலை என்று தீர்மானிக்கப்பட்ட பின்னர், அவரது உடல் இறுதிச் சடங்கிற்காக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இறந்த உதவி பிரதேச செயலாளரின் கணவர் யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் கிராம அலுவலராக பணிபுரிகிறார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மனைவியும் கணவரும் அறையில் மெழுகுவர்த்தி ஏற்ற சென்ற போது உதவி பிரதேச செயலாளரின் உடலில் தீப் பிடித்ததாக கூறியுள்ளனர். உயிரிழந்த தமிழினி தனது பணியை அர்ப்பணிப்புடன் செய்த அதிகாரியாக மக்களிடையே பிரபலமானவர்.

இதற்கிடையில், பெண்ணின் தந்தை பி. சண்முகராஜா கோப்பாய் பொலிஸில் புகார் அளித்து, தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் தகவல்கள் தவறானவை என்றும், இது ஒரு கொலை என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழினியின் மரணம் தொடர்பாக மேலும் அநாமதேய புகார்களும் தொலைபேசி அழைப்புகளும் பொலிஸாருக்கு வந்துள்ளதாக கூறப்படும் நிலையில், கோப்பாய் பொலிஸார் மீள விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இஷாரா செவ்வந்தி படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றாரா…?

0

புதுக்கடை நீதிமன்ற அறையில் கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்ய திட்டமிட்டதன் பின்னணியில் மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் இளம் பெண் இஷாரா செவ்வந்தி, கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்று விட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.

குறித்த சந்தேகநபர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனைத்து வழிகளும் தடுக்கப்பட்டிருந்தாலும், அவர் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கான சாத்தியக் கூறுகளைக் கருத்தில் கொண்டு, இலங்கை காவல்துறை அவரைப் பற்றிய அனைத்து தகவல்களையும் இந்திய பாதுகாப்புப் படையினருக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியாவில் வசிக்கும் தேடப்படும் குற்றவாளிகளைக் கைது செய்து நாடு கடத்துவதற்கு இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது, மேலும் இது போன்ற நபர்களை இதற்கு முன்பு இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது.

இருப்பினும், அவர் தற்போது இந்தியாவுக்கு பயணம் செய்துள்ளாரா என்பது உறுதிப் படுத்தப்படவில்லை, மேலும் அவரைக் கண்டுபிடிக்க மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பல்வேறு குற்றச்சாட்டுக்கள், முறைப்பாடுகள் உட்பட நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்று இந்தியாவில் பிடிபட்ட முன்னாள் வன்னி மாவட்ட ஈபிடிபியின் எம்பி திலீபன் அவர்களை மீள அழைத்துவர அரசு ஆர்வம் காட்டவில்லையா என பலரும் குற்றம் சுமத்துகின்றனர்.

ரமலான் புனித மாதத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்..!

0

இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமே ரமலான். உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் நோன்பிருந்து, இறை வணக்கங்களில் ஈடுபட்டு, அவரிடம் பிரார்த்திக்கும் ஒரு புனிதமான காலமாகும்.

2025 ஆம் ஆண்டில், அதாவது இஸ்லாமிய சந்திர வருட அடிப்படையில், ஹிஜ்ரி 1446 ஆம் வருட ரமலான் மாத பிறை கண்டதைத் தொடர்ந்து நோன்பு ஆரம்பமாகும்.

ரமலான் என்றால் என்ன?

ரமலான் மாதத்தில், முஸ்லிம்கள் விடியலுக்கும் சூரிய அஸ்தமனத்திற்கும் இடையில் உணவு உண்ணவோ, நீர் அருந்தவோ மாட்டார்கள். இது நோன்பு எனப்படும்.

ரமலான் மாதத்தை பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் இவ்வாறு கூறுகிறார் :

”ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்” அல்குர்ஆன் 2 ஆவது அத்தியாயம்:183 ஆவது வசனம்

ரமலான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது என்றால், இந்த புனிதமிக்க ரமலான் மாதத்தில் தான் திருகுர்ஆன் அருளப்பட்டதால் இந்த மாதம் சிறப்பு பெறுகிறது.

ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் இருப்பதால் இம்மாதம் சிறப்பு மிக்க மாதமாகிறது. நன்மை, தீமைகளை பிரித்து நேர்வழி எது என்பதை பிரித்து காட்டும் அருள் மறை திருகுர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு லைலத்துல் கத்ர் இரவில் அருளப்பட்டது. அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : அஹமது, இப்னு கதீர்

பல முஸ்லிம்கள் ரமலானில் முடிந்தவரை குர்ஆனைப் படிக்க முயற்சிப்பார்கள்.

ரமலான் என்பது ஆன்மீக சிந்தனை, பிரார்த்தனை, நல்ல செயல்களைச் செய்தல் மற்றும் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரத்தை செலவிடுவதற்கான நேரமாகும்.

இதனாலேயே நோன்பு கடமையான ரமலான் மாதத்திற்குப் “பொறுமையின் மாதம்’ என்ற சிறப்பு பெயரும் உண்டு. “நோன்பு, பொறுமையின் சரி பாதி’ என்று சாந்த நபி (ஸல்) அவர்கள் சாற்றியதைத் திர்மிதீ, அஹமது முதலிய நூல்களில் காணலாம்.

பொதுவாக, மக்கள் தங்கள் சமூகங்களுடன் இணைவதற்கும், உதவி தேவைப்படும் நபர்களை அணுகுவதற்கும் சிறப்பான முயற்சியை மேற்கொள்வார்கள்.

2025 இல் ரமலான் எப்போது தொடங்கி முடிவடைகிறது?

ரமலான் மாதம் ஆரம்பித்து 29 ஆம் நாளில் ஷவ்வால் மாத பிறை பார்க்கப்படும். பிறை தென்பட்டால் மறுநாள் பெருநாள் கொண்டாடுவர். பிறை தென்படவில்லை எனில் ரமலான் மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்துவிட்டு பின்னர் நோன்புப் பெருநாளை முஸ்லிம்கள் கொண்டாடுவர்.

அதன்படி, மார்ச் 01 ஆம் திகதி மாலை பிறை தென்பட்டதை தொடர்ந்து, மார்ச் 02 ஆம் திகதி நேற்று முதல் ரமலான் மாத நோன்பு காலம் ஆரம்பமானது.

உலகலவில் வெவ்வேறு நாடுகளிலும் இவ்வாறு பிறை பார்த்து அதற்கேற்ற வகையில் நோன்பை ஆரம்பித்து 29 அல்லது 30 நாட்களின் பின்னர் பெருநாளை கொண்டாடுவர்.

ஒவ்வொரு வருடமும் ரமலான் ஆரம்பம் ஏன் மாறுகிறது?

ரமலான் இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும்.

ஒவ்வொரு ஆண்டும் திகதி மாறுகிறது, ஏனெனில் இஸ்லாம் சந்திர நாட்காட்டியை (சந்திரனின் சுழற்சிகளின் அடிப்படையில்) பயன்படுத்துகிறது, எனவே இது கிரிகோரியன் அல்லது சூரிய நாட்காட்டியில் நிலையான திகதி அல்ல.

இஃப்தார் என்றால் என்ன, அது ஏன் முக்கியமானது?

ரமலானின் போது, அதிகாலையில் ஒரு உணவு (சுஹூர் என்று அழைக்கப்படுகிறது) மற்றும் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மற்றொரு உணவு (இப்தார் என அழைக்கப்படுகிறது) பொதுவாக உள்ளது.

உண்ணாமல் தீய செயல்களில் ஈடுபடாமல் பசித்து தாகித்திருந்து சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் முஸ்லிம்கள் தங்கள் நோன்பை துறந்து இப்தார் சாப்பிடுவார்கள்.

யாருக்கு பேரீச்சம் பழம் கிடைக்கிறதோ அவர் அதன் மூலம் நோன்பு துறக்கட்டும்! கிடைக்காதவர்கள் தண்ணீர் மூலம் நோன்பு துறக்கட்டும்; ஏனெனில் அது தூய்மையானதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: திர்மிதீ

குழந்தைகள் ரமலான் நோன்பில் பங்கேற்கலாமா?

ரமலானில் அனைவரும் நோன்பு நோற்பதில்லை – உடல் தகுதி மற்றும் ஆரோக்கியம் உள்ளவர்களுக்கு மட்டுமே நோன்பு கடமையாகிறது.

சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
முஸ்லிம் சிறுவர்கள் பொதுவாக பருவமடைவதற்குள் நோன்பு நோற்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும் (கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக – ஃபித்யாவாக – ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது – ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). அல்குர்ஆன் 2:184

ரமலான் வேறு எப்படி அனுசரிக்கப்படுகிறது?

ரமலான் முழுவதும், பெரியவர்கள் தொண்டு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏழை மக்களுக்கு ஸதகா செய்ய வேண்டும். அதிகதிகமாக தான தர்மங்களில் ஈடுபட வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது.

ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் பல நல்ல அமல்கள் செய்யப்படுகின்றன. இரவு நேர விசேட தொழுகைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

முஸ்லிம்கள் அதிகதிகமாக குர்ஆன் ஓதுவதிலும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதிலும் ஈடுபடுவார்கள்.

பல மில்லியன் ரூபாய்களை ஓவர்டைமில் ஏப்பம் விட்ட தொழிற் சங்கவாதிகள் – பிரதியமைச்சர் அருண்

0

ஜே குணவர்தன என்ற நபர் 2015 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரைக்கும் 13,120 மணித்தியாலங்கள் ஓவர் டைம் செய்திருக்கிறார். அதற்காக அவர் 85 லட்சம் ரூபாய்களை கொடுப்பனவுத் தொகையாகப் பெற்றுக் கொண்டிருக்கிறார் என பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கும் போது,

நிஷாந்த் என்ற நபர் 2592 மணித்தியாலங்களை ஓவர்டைமாக செய்திருக்கிறார். 20 லட்சத்துக்கு மேற்பட்ட தொகையை அவர் ஓவர் டைம் கொடுப்பானாக பெற்றுக் கொண்டிருக்கிறார்.

ஆர் கமகே என்ற ஒரு நபர் 13 ஆயிரத்து 900 மணித்தியாலங்களை ஓவர் டைம் ஆக செய்திருக்கிறார். இவர் 84 லட்சத்திற்கும் அதிகமான தொகையை பெற்றிருக்கிறார்.

அதேபோல பிரேமலால் என்று நபரும் 421 மணித்தியாலங்கள் ஓவர் டைம் செய்திருக்கிறார். 2 லட்சத்துக்கும் அதிகமான தொகையை அவர் ஓவர் டைம் கொடுப்பனவாக பெற்று இருக்கிறார்.

அதுபோன்றே ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற தொழிற் சங்கவாதியை எடுத்துக் கொண்டால் 2015 ,2016, 2017, 2018 ஆகிய நான்கு வருடங்களில் 5615 மணித்தியாலங்களுக்கு ஓவர்டைம் கொடுப்பனவாக 31 லட்சத்துக்கு அதிகமான தொகையை அவர் பெற்றிருக்கிறார்.

அவர் தொடர்பாக மேலும் ஒரு குற்றச்சாட்டு, அவர் இரண்டு வாகனங்களைப் பயன்படுத்தி இருக்கிறார் எனத் தெரிவித்தார்.

வவுனியா சைவ உணவகம் ஒன்றில் வடைக்குள் சட்டை ஊசி..!

0

வவுனியாவில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட வடை ஒன்றிற்குள் சட்டை ஊசி ஒன்று காணப்பட்டுள்ளது.

வவுனியா, பழைய பேரூந்து நிலையம் முன்பாக உள்ள சைவ உணவகம் ஒன்றிற்கு இன்றைய தினம் சென்ற ஒருவர் அங்கு வடையினை கொள்வனவு செய்துள்ளார்.

குறித்த வடையை வீட்டில் சென்று சாப்பிட்ட போது அவ் வடைக்குள் பெரிய சட்டை ஊசி ஒன்று காணபட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த வடையை அதன் முகாமையாளரிடம் காட்டி ஊசி காணப்பட்டமை தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டது.

தவறுதலாக இடம் பெற்றுள்ளதாகவும், இனிவரும் காலத்தில் இவ்வாறு நடைபெறாது எனவும் கூறி வடை வாங்கியரிடம் சைவ உணகவ முகாமையாளர் மன்னிப்பு கோரியதாகவும் தெரியவந்துள்ளது

error: Content is protected !!