Thursday, July 23, 2026
Huis Blog Bladsy 145

வவுனியாவில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 5 பேர் கைது..!

0

வவுனியாவில் உள்நாட்டு துப்பாக்கிகள் மற்றும் கஞ்சா போதைப் பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (8) மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பாவற்குளம் படிவம் 2 பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், இரண்டு இடத்தில் இருந்து மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த ஒருவரிடம் இருந்து 2 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு மான் கொம்புகளும் மீட்கப்பட்டன.

இதனையடுத்து அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சட்டில் அப் பகுதியைச் சேர்ந்த 32 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், நீதிமன்றினால் இரண்டு பிடிவிறாந்து விதிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரும் இதன்போது கைது செய்யப்பட்டார்.

குறித்த மூவரும் வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டு உளுக்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அத்தோடு, வவுனியா- கோவில்குளம் பகுதியில் மாடு திருடிய சம்பவம் தொடர்பில் நீதிமன்றின் வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகாத காரணத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட பாவற்குளம் படிவம் 2 பகுதியைச் சேர்ந்த மேலும் இருவரும் இதன் போது கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேலதிக விசாரணைகளின் பின் உளுக்குளம் மற்றும் வவுனியா பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் சிறுமிகள் கருவுறும் எண்ணிக்கை அதிகரிப்பு; வெளியாகிய விசேட அறிக்கை..!

0

இலங்கை உட்பட முழு உலகமும் இன்று சர்வதேச மகளிர் தினத்தை அனுஷ்டிக்கும் நிலையில், நாட்டில் பாடசாலை செல்லும் வயதுடைய சிறுமிகள் கருவுறும் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக காவல்துறை சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணைப் பிரிவின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய அறிக்கையில் உள்ள தரவுகளின்படி,

2023 ஆம் ஆண்டில் 167 பாடசாலை வயது சிறுமிகள் கருவுற்றதாகவும் 2024 ஆம் ஆண்டில் இவ்வாறான 213 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் அடையாளம் காணப்பட்ட கர்ப்பிணி சிறுமிகள் மத்தியில் 10 வயது சிறுமியொருவர் உள்ளடங்கியிருந்ததாகச் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 1989 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகரிக்கப்பட்ட சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான மாநாட்டின் படி, 18 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்களாகக் கருதப்படுகின்றனர்.

இதுபோன்ற பாலியல் வன்புணர்வுக்கு ஆளான சிறுவர்கள் தொடர்பான வழக்குகளை விரைவுபடுத்துவதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவின் பிரதி காவல்துறை மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்தார்.

விசாரணையை ஆரம்பிக்கும் அநுர அரசு; சிக்கலில் மாட்டிய ரணில்..!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் புதிய விசாரணையைத் தொடங்கும் என அநுர அரச தரப்பு அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தை பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல உறுதிப்படுத்தி உள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் அல் ஜசீராவுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிடப்பட்ட பட்டலந்த அறிக்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.

அதேவேளை, மத்திய வங்கி பத்திர மோசடி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்படும்.

அத்துடன் இவை இரண்டும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிப்படைத் தன்மைக்கான உறுதி பூண்டுள்ளது.

மேலும், ரணில் விக்ரமசிங்க முன்னர் அரசியல் பாதுகாப்பைப் பெற்ற அனைத்து குற்றச்சாட்டுகள் மீதும் நடவடிக்கை எடுக்கும் என விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

இலஞ்சம் வாங்கிய மகன்; யாழ் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு உடனடி இடமாற்றம்..!

0

இலஞ்சம் வாங்கிய மகனால் , யாழ் தலைமைப் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரிக்கு உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் தனபால அவர்களினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ் தலைமைப் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியின் மகன் ஒருவர் இலஞ்சம் பெற்றதாக யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவாகி இருந்தது.

முறைப்பாட்டினை செய்தவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மது போதையில் வாகனம் செலுத்தி சென்ற போது யாழ் பொலிஸாரினால் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த வழக்கினை இல்லாது செய்வதற்காக யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியின் மகன் 20 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றிருந்தார்.

இருப்பினும் வழக்கு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் முறைப்பாட்டாளருக்கு 20 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.

இவ்வாறான பின்னணியில் தலைமை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியின் மகனுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்ட போதும் பொலிசார் குறித்த விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை.

இந்த விடயமானது ஊடகங்களில் பேசுபொருளான நிலையில் பின்னணியில் குறித்த பொலிஸ் அதிகாரிக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முல்லை தீவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

யாழில் தவறான முடிவெடுத்து பாடசாலை மாணவன் உயிரிழப்பு..!

0

யாழ் – வடமராட்சி பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

குறித்த மாணவன் நேற்றைய தினம் (07) இரவு 7:30 மணியளவில் தனது வீட்டில் தவறான முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

கரவெட்டி – மத்தணி பகுதியைச் சேர்ந்த நகுலேஸ்வரன் யக்சன் என்ற வயது 14 மாணவனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

உயிரிழந்த குறித்த மாணவன் யா/ கரவெட்டி இருதயக் கல்லூரியில் தரம் 9இல் கல்வி கற்று வந்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த மாணவன் நேற்றைய தினம் (07) இரவு 7:30 மணியளவில் தனது வீட்டில் தவறான முடிவெடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாணவனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெல்லியடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் நாளை கூடவுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு..!

0

இலங்கைத் தமிழரசு கட்சியின் (ITAK) மத்தியகுழுக் கூட்டம் தொடர்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, வவுனியாவில் நாளை (09) முற்பகல் மத்திய குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயத்தினை இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் இதன்போது விசேட அவதானம் செலுத்தப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடுவது தொடர்பில், கடந்த மத்திய குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றம் தொடர்பில் நாளைய தினம் கலந்துரையாடப்படும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய நான்கு கட்சிகளும் மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஏனைய கட்சிகளின் தலைவர்களிடம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கூட்டமானது புதிய அலுவலகத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

யாழில் பெருமளவான போதைப் பொருளுடன் இளைஞன் கைது..!

0

யாழில் பெருமளவான போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை யாழ். மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய இன்று(08) மானிப்பாய் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

கைது நடவடிக்கை தொடர்பில் தெரிய வருகையில்,

“வண்ணார் பண்ணை சிவன் கோயிலுக்கு பின் வீதியான மானிப்பாய் வீதிக்கு அண்மித்த ஒரு வீட்டில் வைத்து கஞ்சா கலந்த மாவா பாக்கு தயாரித்து கொண்டிருந்த பொழுது யாழ். மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவினரும் போதை ஒழிப்பு பிரிவும் இணைந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது, 24 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டதுடன் கஞ்சா கலந்த 4 கிலோ 250கிராம் எடையுள்ள மாவா பாக்கு, 12 கிலோ 500 கிராம் எடையுடைய பீடித்தூள் மற்றும் 24ரின் வாசனைத் திரவியம் போன்ற பொருட்களும் கைபற்றபட்டுள்ளன.

மேலும், கைதான சந்தேக நபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விரைவில் பதவி விலகுவதாக அறிவித்த அர்ச்சுனா எம்.பி..!

0

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்வரும் எட்டாம் அல்லது ஒன்பதாவது மாதம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் 52 வீதம் பெண்கள் இருந்தாலும், பிரதமரின் கூற்று படி நாடாளுமன்றில், வெறும் 9.8 வீதமான பெண்களே இருப்பதாக அர்ச்சுனா சுட்டிக் காட்டினார்.

இதன்படி, நாடாளுமன்றில் பெண்களின் எண்ணிக்கையை 10 வீதமாக மாற்றுவதாக கூறிய அவர், தான் பதவி விலகி அந்த பதவியை பெண்ணொருவருக்கு வழங்கப் போவதாக குறிப்பிட்டார்.

மேலும், யாழில் மக்களால் தெரிவு செய்ய்பப்பட்ட சில பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை மறந்து விட்டதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, அவர்களையும் கணக்கில் எடுத்தால் 10 வீதம் தாண்டிவிடும் என்றும் சுட்டிக் காட்டினார்.

கோழி இறைச்சியின் விலை தொடர்பில் வெளியான தகவல்..!

0

சந்தையில் கோழி இறைச்சியின் விலை தற்போது படிப்படியாக அதிகரித்து வருவதாக அகில இலங்கை கோழிப் பண்ணை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் மாதலி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம்(08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடளாவிய ரீதியில் எதிர்வரும் புத்தாண்டு பண்டிகை காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை அதிகரிக்கும்.

அத்துடன் கோழித் தீவன பற்றாக்குறையால் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை அதிகரித்து வருகின்றது.” என அவர் தெரிவித்துள்ளார்.

யாழில் பெண்ணொருவரை கட்டாயப்படுத்தி வீடியோ எடுக்க முயன்ற Youtuber..!

0

யூரியூபில் உதவி செய்யும் காணொளிகளை பதிவேற்றும் “SK vlog“ என்ற யூரியூப் பக்கத்தின் உரிமையாளர் ஒருவர் இளம் பெண்ணொருவரை வற்புறுத்தி காணொளி எடுக்க முயலும் காணொளி ஒன்று வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

குறித்த யூரியூபர் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களின் காணொளிகளை தனது யூரியூப் பக்கத்தில் பதிவேற்றி, புலம்பெயர் மக்களிடம் பணத்தினை பெற்று அதன் மூலம் உதவி செய்வதாக காண்பித்து வருகின்றார்.

அவ்வாறு காணொளிகளை பதிவு செய்யும்போது அந்த வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பத்தின் மனம் நோகும்படியாக பேசுவது, அவர்களை எள்ளி நகையாடுவது, இளம் பிள்ளைகளை வற்புறுத்தி காணொளிக்கு அழைப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

குறித்த விடயம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாணத்தில் உள்ள சட்டத்தரணி எஸ்.செலஸ்ரின் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் விபரங்களை திரட்டி அவர்களிடம் விசாரணைகளை நடாத்துவதற்கான நடவடிக்கைகளில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகமும் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!