Thursday, July 16, 2026
Huis Blog Bladsy 68

இம்முறை உயர் தர பரீட்சை எழுதவிருந்த மாணவி திடீர் மரணம்; அதிர்ச்சியில் பெற்றோர்..!

0

தம்புள்ளை பிரதேசத்தில் இன்று (10) ஆரம்பமான உயர்தரப் பரீட்சைக்கு எழுதத் தயாராகி வந்த 19 வயது மாணவி ஒருவர் தூக்கத்திலேயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் தம்புள்ளை மேல் அரவுல பகுதியைச் சேர்ந்த இறந்த மாணவி உயிரியல் பிரிவில் உயர்தரப் பரீட்சை இன்று (10) எழுதவிருந்த மாணவி என தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இறந்த மாணவி தம்புள்ளை தேசிய பாடசாலையில் பயின்று வரும் தருஷி சாமோடி வயது 19 என பொலிஸார் கூறியுள்ளனர். மாணவி தனது அறையில் ஞாயிற்றுக் கிழமை (09) படித்துக் கொண்டிருந்ததாகவும், மறுநாள் தேர்வுக்குத் தேவையான பொருட்களைத் தயாரித்துவிட்டு தூங்கச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலையில் எழுந்திருக்காதது குறித்து அவரது பெற்றோர் எழுப்பிய போது, ​​அவர் மயக்கமடைந்திருப்பதாகக் கருதி தம்புள்ளை ஆதார மருத்துவமனையில் அனுமதித்தனர்.


இருப்பினும், வெளிநோயாளர் பிரிவில் உள்ள மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்த போது, ​​அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தியதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மாணவியின் மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழைச் சேர்ந்தவர்கள் கைத்துப்பாக்கியுடன் வத்தளையில் கைது..!

0

வத்தளை காவல்துறை பிரிவில் கைத்துப்பாக்கியுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் நேற்று (08) காலை இருவரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வத்தளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட அல்விஸ் டவுன் சந்தியில் காவல்துறையினரின் கட்டளையை மீறிச் சென்ற கார் ஒன்றை வத்தளை காவல் அதிகாரிகள் குழுவினர் துரத்திச் சென்று நிறுத்தி சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.


இதன் போது குறித்த காரின் சாரதியின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதன்படி, குறித்த காரின் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் இந்த துப்பாக்கியை மற்றொரு நபரிடம் வழங்குவதற்காக எடுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.


இதனையடுத்து குறித்த நபரையும் மாபொல பகுதியில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 33 வயதுடைய யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

சம்பவம் தொடர்பில் வத்தளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பதவி விலகுவதற்கு தயார்; நாடாளுமன்றத்தில் சவால் விடுத்த சிறீதரன் எம்பி..!

0

தான் சட்டவிரோதமாக சொத்து சேர்த்திருந்தால் அல்லது யாருக்காவது மதுபானசாலைகளுக்கு சிபாரிசு செய்திருந்தால் அல்லது தனது பெயரில் எடுத்திருந்தால் உரிய விசாரணை நடத்தி தன் மீது சட்டநடவடிக்கை எடுத்து தனது பதவியை பறிப்பதற்கு பூரணமாக சம்மதிக்கின்றேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.


இன்றைய தினம்(8) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த 2025 ஒக்டோபர் 23ஆம் திகதியன்று நாடாளுமன்ற சிறப்புரிமை மீறலில் நான் ஈடுபட்டதாக குறிப்பிட்டு உண்மைக்கும் அறத்திற்கும் மாறான வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தினால் எனக்கு எதிரான சிறப்புரிமை மீறல் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


சிவில் புத்தி பெரமுன அமைப்பை சேர்ந்த சஞ்சய் மகவத் என்பவரால் நான் சொத்துக்கள் குவித்து வைத்திருப்பதாக நிதிக்குற்றப்புலனாய்வுப்பிரிவில் முறைபாடொன்று செய்யப்பட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பார்வையிட்டேன். இந்த விடயம் குறித்து நேர்மையான விசாரணை நடத்துமாறு குறிப்பிட்டிருந்தேன்.

மூன்றரை மாதங்கள் கடந்த போதும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் எந்த முடிவுகளும் வெளியிடப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

யாழில் பெண் உட்பட நான்கு தமிழர்களை சிக்க வைத்த முக்கிய ஆதாரம்..!

0

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்றிரவு (07.11.2025) 43 வயதான நபரொருவர் படுகொலை செய்யப்பட்டார்.

அதாவது, கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூட்டினை நடத்திய மூவர் இன்றையதினம் (08.11.2025) யாழ் – மானிப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய கார், கொழும்பு பஞ்சிகாவத்தை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.


துப்பாக்கிதாரிகள் குறித்த காரை பஞ்சிகாவத்தை பகுதியில் விட்டுவிட்டு நீர்கொழும்பு சென்று அங்கு கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து யாழ் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, அவர்கள் திருத்த வேலைகளுக்காக யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள வாகனம் பழுதுபார்க்கும் நிலையத்தில் காரை நிறுத்தியுள்ளனர்.


அப்போது, காரில் இருந்த GPS தொழில்நுட்பத்தை வைத்து பொலிஸார் அவர்களை கண்டுபித்துள்ளனர்.

குறித்த காரில் நாய் குட்டி ஒன்றுடன் இருந்த பெண்ணொருவரும் மூன்று ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.

யாழில் நடக்கும் சட்டவிரோத சொத்துக் குவிப்பு; அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை..!

0

யாழில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத சொத்து சேகரிப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இன்றைய (08) நாடாளுமன்ற அமர்வில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.


இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன், தற்போது போதைப் பொருளைக் கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் ஜனாதிபதி தலைமையில் எடுத்துள்ள நடவடிக்கைக்கு மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இருந்தபோதும் யாழ்ப்பாணத்திலே இரண்டு, மூன்று தினங்களுக்கு முன்பாக திருநெல்வேலி, கொக்குவில் சந்தைகளிலே போதைப்பொருள் மாபியாக்கள் அடாவடி செய்துள்ளனர்.


இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் போதைப் பொருளை விற்று அதில் வருகின்ற பணத்தை வட்டிக்கு கொடுத்து வட்டிப் பணத்தைப் பெறுவதற்காக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே யாழ் மாவட்டத்தில் இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்த வேண்டும். இது தொடர்பான நடவடிக்கை என்ன என்று கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.


இந்த நிலையிலே இதற்குப் பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறித்த நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா கனகராயன்குளம் பகுதி விபத்தில் யாழ் இளைஞன் பலி..!

0

கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2:00 மணியளவில் பதிவாகியுள்ளது.


யாழிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற லொறியும், கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்துகொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன் போது, விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதியும், பின்னால் அமர்ந்து பயணித்த இளைஞனும் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டியின் பின்னால் அமர்ந்து பயணித்த இளைஞன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவர் யாழ் – கரவெட்டி மேற்கு பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய உதயகுமார் சாருஜன் என தெரிய வந்துள்ளது.

சடலம் கிளிநொச்சி வைத்திய சாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போதைப் பொருளுடன் கைதான அதிபர் பணி நீக்கம்; விசாரணைகள் தீவிரம்..!

0

ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட அதிபர் சேவையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைக் கவனத்தில் கொண்டு, தாபன விதிக் கோவையின் சரத்துக்களின் கீழ் வரும் குற்றத்தில் அவர் ஈடுபட்டுள்ளதால், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தேசிய மக்கள் சக்தியின் நகர சபை உறுப்பினரின் கணவரான குறித்த அதிபர், அண்மையில் 1 கிலோ 118 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

அநுராதபுரம்- எப்பாவல பகுதியில் போதைப்பொருள் கடத்தலை, பேலியகொட நகரசபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினரின் மகனும், தெற்கு பாதாள உலகக் கும்பல் தலைவருமான கொஸ்கொட சுஜியின் உறவினருமான மகன் மேற்கொண்டுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.


இது தொடர்பாக களனியில் உள்ள நகரசபை உறுப்பினரின் வீட்டை காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளதுடன் இந்த போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக எதிர்வரும் சில நாட்களில் அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த சிலவருடங்களின் முன்னர் வடக்கின் அதிகாரிகள் சிலர் கடமை நேரத்தில் இரத்மலானை விடுதியில் நச்சுப் பதார்த்தங்களை பயன்படுத்தியமை தொடர்பில் சர்ச்சை ஏற்பட்ட போதும் வடக்கின் உயரதிகாரிகளால் போதிய சாட்சிகள் இல்லை என விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளதுடன் குறித்த விருந்தினை வைத்தவர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார் என்பதும் ஒழுக்காற்று விசாரணைகள் வடக்கின் உயர் அதிகாரிகளுக்கு பொருந்தாதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொழிற் கல்வியை மையப்படுத்தி விசேட வேலைத் திட்டம்..!

0

பாடசாலைக் கல்வியின் பின்னர் தொழிற்கல்வியில் இணைவதற்கான தகவல்களைப் பெறுவதற்கான அவசர தொடர்பாடல் சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்து தொழிற்கல்வியில் சேர மாணவர்களுக்குத் தேவையான தகவல்களைத் துல்லியமாகவும் திறமையாகவும் வழங்கும் நோக்கில், ‘1966’ தொழிற்கல்வி அவசர தொலைபேசி சேவை, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நாரஹேன்பிட்டவில் அமைந்துள்ள ‘நிபுணதா பியச’ வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.


‘1966’ தொலைபேசி சேவையின் மூலம், தொழிற்கல்வி தொடர்பான எந்தவொரு தகவலையும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் திறமையான சேவைக்காக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் தொழிற்கல்வி அமைச்சின் தொழில்நுட்ப அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட ‘AI Chat BOT’ ஐ அணுக முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம், தொழிற்கல்வி தொடர்பான எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். புதிய பாடப்பிரிவின் கீழ் முதன்மையாகக் கற்பிக்கப்படும் தொழிற்கல்வியுடன் நவீன தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை இதன்போது பிரதமர் விளக்கினார்.

நாளைய தொழில் உலகத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ளத் தேவையான மனித மற்றும் பௌதீக வளங்களை, மாற்றப்பட வேண்டிய பகுதிகளை மாற்றுவதன் மூலம், தயக்கமின்றி, தொழிற்கல்வி கட்டமைப்பிற்குள் தரமான முறையில் மேம்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழர் தாயகத்தில் சீரழியும் கலாசாரமும் அரங்கேறும் அலங்கோலமும்..!

0

அண்மைய காலங்களில் தமிழர்களின் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறு கலாசார சீரழிவுகள், குற்ற செயல்கள், ஈழத் தமிழினத்தை அழிவு பாதைக்கு செல்லும் அவலம் தொடர்பில் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

போதைபொருள் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் இளம் குடும்ப தலைவிகள் ஒருபுறம், போதையாலும் குற்றசெயல்களாகும் கெட்டு சீரழியும் இளம் சமுதாயம் ஒரு புறமுமாக ஈழத் தமிழர் கலாசாரம் தடம் மாறி போய் கொண்டிருக்கின்றது.


ஒருவனுக்கு ஒருத்தி – ஒருத்திக்கு ஒருவன் என வாழ்ந்த காலங்கள் மலையேறி கொண்டிருக்கின்றது. குடும்ப வன்முறைகள் படுகொலைகளில் முடிகின்றது. சுகபோக வாழ்க்கை மற்றும் பணத்தின் மீதான அதீத மோகம் மனித வாழ்க்கையில் அமைதியையும் உண்மையையும் மாற்றி விடுகின்றது.

அந்தவகையில் யாழில் தவில் வித்துவானை நம்பி கணவன் பிள்ளைகளை கைவிட்டு சென்ற குடும்ப பெண், தகாத உறவால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், முல்லைத்தீவில் 26 வயதான பெண் ஒருவர் நான்கு திருமணங்கள் செய்த சம்பவங்கள் மட்டுமல்லாது வவுனியாவில் நேற்று முன் தினம் மனைவியின் தகாத உறவால் கணவன் மனைவியை கொன்று பிள்ளையுடன் பொலிஸாரிடம் சரணடைந்த சம்பவமும் நடந்துள்ளது.


அதேவேளை புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் எம்மவர்கள் சிலரும் இத்தகைய சம்பவங்களுக்கு துணை போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் நம் கலாசாரம் இப்படி போகிறதே என தம்மை சீர்திருத்தி வாழ பழகாவிட்டால் அடுத்த சமுதாயத்தை எங்கே கொண்டு செல்லும் என்கின்ற கேள்வியை சமூக மட்டத்தில் எழவைத்துள்ளது.


அதிலும் இளவயதினர் கலாசார சீரழிவுகளை நோக்கி நகர்வது வேதனைக்குரிய விடயம் ஆகும். உலகில் ஒப்பற்ற ஒழுக்கத்திற்கு பெயர்போன தமிழனமாக போற்றப்பட்ட எம்மினம் இன்று தடம்மாறி தடுமாறி போய் கொண்டிருக்கின்றது.

குறிப்பாக யாழ்ப்பாணம், வன்னி பிரதேசங்களில் நாகரீக வாழ்க்கை, ரிற்றோக் உள்ளிட்ட சமூக வலைத்தளப் பாவனை, தகுதிக்கு மீறிய ஆடம்பரம், கிழமைக் கடன்கள், NGOகளின் சில செயற்பாடுகள் காரணமாக விச செடிகள் படர்வது போல கலாசார சீரழிவுகள் தலை விரித்து ஆடுவது வேதனையை ஏற்படுத்துவதாக உள்ளது.

13ஆவது அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்துவதே எனது எதிர்பார்ப்பு..!

0

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே தனது எதிர்பார்ப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், இந்திய உலக விவகாரங்களுக்கான சபையில் உரையாற்றும் போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.


இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய உலக விவகாரங்களுக்கான சபையில் முக்கிய உரையை நிகழ்த்தினார்.

அதில் அந்நாட்டின் ஊடகவியலாளர்கள், இராஜதந்திர அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!